Monday, May 11

’சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்’ -திரைப்பட விமர்சனம்

’சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்’ படத்தில் ஆரி லோபஸ், ரெனாட்டா வகா, அல்ஃபிரெடோ காஸ்ட்ரோ, பவுலினா கைடான் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை மோகித் ராம்சந்தானி இயக்கியுள்ளார், இந்த படத்துக்கு அலெஜா ண்ட்ரோ சாவேஸ் ஒளிப்பதிவு செய்ய, லிசா ஜெரார்ட் இசை அமைத்துள்ளார் .

கால்பந்தாட்ட வீரனாக வேண்டும் என்ற கனவுகளுடன் அமெரிக்க நகரத்திற்கு வரும் ஒரு சிறுவன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் அடிமையாக்கப்படுகின்றான், அங்கே அவன் மட்டுமன்றி இன்னும் பல சிறுவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அவன் தப்பித்துச் சென்று தனது கனவு இலக்குகளை நோக்கி சென்றானா? அதற்காக அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அடைந்ததா ?என்பதே இந்த படத்தின் மீதி கதை.

படத்தினுடைய மையக்கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய ஆரி லோபஸ் தன்னுடைய உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்

பொதுவாக நாம் அமெரிக்காவை பற்றி எண்ணும் போது அங்கு இருக்கக்கூடிய பிரம்மாண்டங்கள், ஆடம்பரமான வாழ்க்கை ,விண்ணை நோய்க்கிய வானளாவிய கட்டிடங்கள், பளபளப்பான சாலைகள், நவ நாகரிக சொகுசான வாழ்க்கை இவை மட்டுமே நம் கண் முன்னே நிழலாடும் ,ஆனால் இதையெல்லாம் தாண்டி அந்த நாட்டின் மறுபக்கத்தை இன்னமும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கருப்பு பக்கத்தை பார்க்கும் பொழுது நமக்கு வியப்பூட்டும் ஆச்சரியம் ஏற்படுவதில் மிகை இல்லை.

கனவுகளோடு பயணித்து ,சிக்கலில் சிக்கிக் கொண்டு, மீண்டும் தன் கனவை நோக்கி பயணிக்கும், ஒரு சிறுவனின் வாழ்வியலை அழகான திரைமொழியில் பார்க்கும் அனுபவத்தை இந்த படம் தருவதோடு, நாம் பிரம்மிப்பாய் பார்த்து வியக்கும் நாட்னை பற்றி நமக்கு தெரிந்த பதிவுகளில் உள்ள தெரியாத பக்கங்களை பற்றி பார்த்து வியக்கும் அனுபவத்தையும் இந்த படம் ஏற்படுத்துகிறது.

Spread the love