இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வருணன் – காட் ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி,மற்றும் பலர் நடித்திருக்க ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார்.
ராயபுரத்துல இருக்குற ஒரு பகுதியில ராதாரவியும், சரண்ராஜ்யும் தண்ணீர் கேன் வியாபாரம் செய்யுறாங்க. இவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் வாட்டர் கேன்போடக்கூடாது,..தொழில் ரீதியா எதிரிகளா இருந்தாலும், ஒருத்தர் கேன் போடுற வீட்டுக்கு இன்னொருதர் தண்ணி கேன் போடக்கூடாது, இதுதான் அவுங்களுக்குள்ள பேசிக்காம இருக்கற ஒரு உடன்படிக்கை,. ராதாரவி கிட்ட துஷ்யந்த்யும், பிரியதர்ஷனும் வேலை செய்யறாங்க. ஆரம்பத்துல மோதிக்கற அவுங்க பின்னாடி நெருங்கிய நண்பர்களாவும் மாறுறாங்க. சரண்ராஜ் உடைய மனைவி மகேஷ்வரியும், அவங்களோட தம்பியான சங்கர்நாக்விஜயனும் சேர்ந்து சட்டவிரோதமா சுண்ட கஞ்சி செய்யுற வியாபாரத்த, சரண்ராஜ் வேண்டாம் என்று சொன்னாலும் மீறி செய்யுறாங்க . அடிக்கடி இரண்டு குழுவுக்கும் சண்டை வருது,. போலீஸ் அதிகாரியான ஜீவா ரவி, சரண்ராஜ் மச்சான் எப்ப மாட்டுவான் அப்படின்னு காத்துகிட்டு இருக்காரு. அதுக்கான சந்தர்ப்பமும் அமையுது, தன்னோட கைதுக்கு காரணமான யஷ்வந்த எப்படியாவது பழிவாங்குனுமின்னு வெறியோட சங்கர்நாக்விஜயன் காத்துகிட்டு இருக்காரு, கடைசியில இரண்டுபேருக்கும் இருக்குற பகையினால என்ன நடந்தது? என்பதுதான் மீதிக்கதை..
நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் தன்னோட கதாபாத்திரத்துக்கு பொருந்தி போகும் தோற்றத்துல ரொம்ப இயல்பாக நடிச்சு இருக்காரு, நாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா, மற்றொரு இணையராக நடித்திருக்கும் பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா மேலும் ஜீவா ரவி, மகேஸ்வரி, போன்றவர்களும் தங்களோட கதாபாத்திரத்துக்கு எந்த குறையும் இல்லாம நல்லாவே நடிச்சு இருக்காங்க, அதேபோல வில்லனாக நடிச்சு இருக்கற சங்கர்நாக் விஜயனும் ,அந்த கேரக்டருக்கு ஏற்பட்ட நடிப்ப கொடுத்திருக்காரு. மூத்த நடிகர்கள் ராதாரவி மற்றும் சரண்ராஜ் ரெண்டுபேரும் தண்ணீர் கேன் நிறுவனம் நடத்தறவங்க கதாபாத்திரங்களில தங்களோட அனுபவ நடிப்ப வெளிப்படுத்தி இருக்காங்க.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், காட்சிகள் எடுக்கப்பட்ட தளங்களுக்கு ஏற்ப கேமரா கோணங்களை நல்ல அமைச்சு இருக்காரு,அதிலேயும் குறிப்பா கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிய சிறப்பா படமாக்கி இருக்காரு ..
இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்கள், கதைக்கு பாந்தமாகவும், பின்னணி இசை, காட்சிகளுக்கு இணக்கமாகவும் அமைஞ்சு இருக்கு.
சராசரி வாழ்வியல் சூழலில் பயணிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படும் காதல், நட்பு, மோதல் மேலும் அவர்களை சுற்றி நிகழும் சம்பவங்களின் தொகுப்பை ஆக்ஷன் படமாக கொடுத்து இருக்காரு இயக்குனர் ஜெயவேல்முருகன் ,அவருக்கு என்.ரமணா கோபிநாத்தின் வசனங்களும் பக்க துணையா அமைஞ்சு இருக்கு.
ஏற்கனவே சில படங்களில் சொல்லப்பட்ட வடசென்னை கேங்ஸ்டர் கதையின் திரைக்கதையில், பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ,பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீரின் மேன்மேயை சொல்ல படத்தின் துவக்கத்தில் சத்யராஜின் குரலில் ஒலிக்கும் எதிர்பார்ப்பினை ஈடு செய்யும் வண்ணம், மேலும் அழுத்தமான காட்சிகளை அமைத்து இருந்தால் வருணன் இன்னமும் ரசிகர்களின் மனதில் நிறைந்து இருப்பான் .