Monday, September 28

ஆன்மீகம்

நடிகர் ஸ்ரீராம் கலந்துகொண்ட ஸ்ரீராமநவமி விழா.

நடிகர் ஸ்ரீராம் கலந்துகொண்ட ஸ்ரீராமநவமி விழா.

ஆன்மீகம், சினிமா
ஸ்ரீ ராம நவமி விழாவை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் அமைந்திருக்கும் அருள்மிகு துவாரகமாயி லட்சுமி சாய்பாபா ஆலயத்தில், பாபாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 1008 சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் வழங்கும் வைபவம் நடைபெற்றது. இந்த சுப விழாவில் 'பசங்க', 'கோலிசோடா' படப் புகழ் நடிகர் ஸ்ரீராம் மற்றும் நடிகர் பாண்டி ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் வழங்கி கௌரவித்தனர். இவ்விழாவில் நடிகர் ஸ்ரீராம் பேசுகையில், '' எங்களுடைய வீட்டில் ஒன்றரை அடி உயர சாய்பாபா சிலை ஒன்று உள்ளது. என்னுடைய பெற்றோர்கள் அதற்கு ஆரத்தி காட்டும் பொழுது, காண்பதற்கு வித்தியாசமாக இருக்கும். நான் அதை ஆவலுடன் பார்த்துக்கொண்டே இருப்பேன். தற்போது வளர்ந்து நடிகனான பிறகும் இன்றும் எங்களுடைய வீட்டில் சாய்பாபா சிலைக்கு பூஜையும், பிரார்த்தனையும் நடைபெறுகிறது. வாழ்க்கையில் பல அற்பு...
குறைகளற்ற வாழ்வு தரும் குறுங்காலீஸ்வரர் கோவில்

குறைகளற்ற வாழ்வு தரும் குறுங்காலீஸ்வரர் கோவில்

ஆன்மீகம்
குறைகளற்ற வாழ்வு தரும் குறுங்காலீஸ்வரர் கோவில்,கோயம்பேடு- சென்னை சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமான குறுங்காலீஸ்வரர் கோவில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலின் வரலாற்றுக்கதைகள் முன்னோரு காலத்தில் சோழ மன்னன் ஒருவன், இந்த பகுதியை தேரில் பவனி சென்றவாறு கடந்து போனபோது அந்த தேரின் சக்கரம் லிங்கத்தின் மீது ஏறி, குருதி வெளிப்பட்டதை கண்டு அதிர்ச்சியுற்ற மன்னன் அங்கு பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு,அதனை வணங்கி அங்கு கோவிலும் எழுப்பினான். மன்னரின் தேர்ச்சக்கரம் ஏறியதால் அந்த லிங்கத்தின் திருமேனி குறைந்து குறுகிய வடிவில் காணப்பட்டது ஆகவே இங்கு சிவன் குறுகியவடிவில் காட்சி தருவதால் அவருக்கு “குறுங்காலீஸ்வரர்’ என்ற திருப்பெயர் உண்டானது. “ இராமாயணகாலத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் லவன் - குசன் என்ற தன் குழந்தைகளுடன் சீதை இந்த பகுத...
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை

ஆன்மீகம்
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகிய திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.உலகப்புகழ்பெற்ற இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் . நினைத்தாலே முக்தி தரும் இந்த தலம் பற்றிய புராணம் யாதெனில் ,நான்முகனுக்கும் திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் ஏற்பட , இடையில் நெருப்புப் பிழம்பு தோன்ற நம்மில் யார் இதன் அடியையும் முடியையும் கண்டறிகிறாரோ அவரே நம்மில் பெரியவர் என உரைத்தனர். அதன் அடியைக் காண, திருமால் வராக வடிவெடுத்து நிலத்தினைக் குடைந்து சென்று பல காலம் பயணம் செய்தும் அடியைக் காண இயலாமல் திரும்ப, அன்னம் வடிவமெடுத்து முடியைக் காணச்சென்ற நான்முகன் , வானிலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் நீ எங்கிருந்து வருகிறாய் என கேட்க அதற்கு அது நான் சிவனாரின் தலையிலிருந்து...