Tuesday, November 12

குறைகளற்ற வாழ்வு தரும் குறுங்காலீஸ்வரர் கோவில்

குறைகளற்ற வாழ்வு தரும் குறுங்காலீஸ்வரர் கோவில்,கோயம்பேடு- சென்னை

சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமான குறுங்காலீஸ்வரர் கோவில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது

இந்த திருக்கோவிலின் வரலாற்றுக்கதைகள்

முன்னோரு காலத்தில் சோழ மன்னன் ஒருவன், இந்த பகுதியை தேரில் பவனி சென்றவாறு கடந்து போனபோது அந்த தேரின் சக்கரம் லிங்கத்தின் மீது ஏறி, குருதி வெளிப்பட்டதை கண்டு அதிர்ச்சியுற்ற மன்னன் அங்கு பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு,அதனை வணங்கி அங்கு கோவிலும் எழுப்பினான். மன்னரின் தேர்ச்சக்கரம் ஏறியதால் அந்த லிங்கத்தின் திருமேனி குறைந்து குறுகிய வடிவில் காணப்பட்டது ஆகவே இங்கு சிவன் குறுகியவடிவில் காட்சி தருவதால் அவருக்கு “குறுங்காலீஸ்வரர்’ என்ற திருப்பெயர் உண்டானது. “

இராமாயணகாலத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் லவன் – குசன் என்ற தன் குழந்தைகளுடன் சீதை இந்த பகுதியில் வாழ்ந்த பொழுதில், அஸ்வமேத யாகத்திற்காக பகவான் ராமபிரான் அனுப்பிய குதிரைகளை பிடித்த லவகுசர்களிடம் இருந்து அவற்றை மீட்க வந்த ராமரிடம், வந்திருப்பது யார் என்பதை அறியாத லவ குசர்கள் அவரை எதிர்த்து போரிடுகிறார்கள் இறுதியில் வால்மீகியால் சமாதானம் ஏற்பட்டு உண்மையை லவகுசன் அறிந்துகொண்டார்கள் , பெற்ற தந்தையை எதிர்த்து போரிட்ட காரணத்தால் அவர்களை பித்ரு தோஷம் பிடித்துகொள்ள, வால்மீகியின் அறிவுரைப்படி லவனும் குசனும் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி வழிபாடு செய்கிறார்கள், சிறுவர்களான லவ-குசனும் எளிதாக வழிபாடு செய்வதற்க்கு ஏற்றவாறு ஈசன் தன் லிங்கத்திருமேனியை குறுக்கிக் கொண்டு குறுங்காலீஸ்வரராய் காட்சி அளித்தார்.

கோவிலின் அமைப்பு

கோயிலின் பிரதான அர்த்தமண்டபம் பிரமாண்டமாக 40 தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது,இந்த கோவிலில் குசலவபுரிஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரர் சுவாமி சன்னதியும், அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சன்னதியும் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. கோயில் நந்தவனத்தில் வில்வ மரங்கள் காணப்படுகின்றது .

கோவிலுக்கு முன்னால் திருக்குளமும், அதையொட்டி ஒரு பதினாறுகால் மண்டபம் உள்ளது அங்கு ஒரு தூணில் சரபேஸ்வரர் காட்சி தருகிறார்.இங்கு சரபேஸ்வரரை ஞாயிறுதோறும் மாலை ராகுகால நேரங்களில் ஏராளமான மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.

 

தமிழகத்தின் தலைநகராம் சென்னையின் பிரதான பகுதியான கோயம்பேட்டில் அமைந்துள்ள இந்த ஈசனை
வணங்கி இறைஅருள் பெற்று இன்புற்று மக்கள் வாழலாம்.

pictures ; tamilinfobooth.com

Spread the love