*உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் முக்கிய தளங்களில் வெளியானது*
*உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் முக்கிய தளங்களில் வெளியானது*
இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில், ஒரு புதிய நவீன வடிவில் வெளியாகி உள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், இன்ஸ்டா ரீல்ஸ், டிக் டாக் போன்ற தளங்களில் மே 20 அன்று இது வெளியிடப்பட்டது. இதன் லிரிக்கல் வீடியோ மே 23 அன்று ராஜ்ஷ்ரி சோல் யூடியூப் சேனலில் வெளியிடப்படும்.
பழம்பெரும் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இப்பாடல், பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. இதன் புதிய வடிவம் அப்பாடலின் புனிதத்தன்மையை மதித்துப் போற்றுவதோடு, புதுமையான இசை அணுகுமுறையின் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்க்கும...









