Monday, August 31

செய்திகள்

பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைந்தார்

பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைந்தார்

சினிமா, செய்திகள்
பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 91) இன்று மாலை 6:40 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார். நாளை (நவம்பர் 21, திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அவரது உடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும். நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடிப்பில் வெளிவந்த பாசமலர்,பார்த்தால் பசி தீரும் ,படித்தால் மட்டும் போதுமா ,அன்னை இல்லம், புதிய பறவை .தெய்வ மகன்,அன்புள்ள அப்பா மக்கள்திலகம் MGR அவர்கள் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன்,தாய் சொல்லை தட்டாதே , அன்பே வா,பரிசு,தொழிலாளி , மற்றும் சிவாஜி அவர்களும் ரஜினி அவர்களும் இணைந்த நடித்த நான் வாழ வைப்பேன்,விடுதலை ,மோகன் நடித்த விதி ,சிவகுமார் நடித்த பத்ரகாளி ,கமல் அவர்கள் நடித்த மங்கம்மா சபதம்,வடிவேலு நடித்த தெனாலிராமன் உள்ளிட்ட பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார், மேலும் ஜெமினி கணேசன், விஜயகுமாரி...
முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள், இந்திய டேக்வாண்டோ சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள், இந்திய டேக்வாண்டோ சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

செய்திகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (19.11.2022) தலைமைச் செயலகத்தில், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள், இந்திய டேக்வாண்டோ சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட Dr. ஐசரி K. கணேஷ் வெற்றி

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட Dr. ஐசரி K. கணேஷ் வெற்றி

செய்திகள்
இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த திரு. சஞ்சய் சுப்பிரிய அவர்களை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். Dr. ஐசரி K. கணேஷ் அவர்களுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், திரு. சஞ்சய் சுப்பிரிய அவர்களுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர். மேலும் Dr. ஐசரி K. கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்தனர்....
நடிகரும் தயாரிப்பாளருமான மதுரை டாகடர்.சரவணன் இல்லத்திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி

நடிகரும் தயாரிப்பாளருமான மதுரை டாகடர்.சரவணன் இல்லத்திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி

செய்திகள்
நடிகரும் தயாரிப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ மதுரை டாக்டர்.சரவணன் அவர்களின் மகன் டாக்டர். S. அம்ரித்குமார், டாக்டர். M.D.சாதூர்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் மெடிக்கல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார், நாஞ்சில் சம்பத் போன்ற அரசியல் பிரமுகர்களும் திரை நட்சத்திரங்களான சூரி, விதார்த், இயக்குனர் பேரரசு, சோனியா அகர்வால், யாஷிகா ஆனந்த், சஞ்சனா சிங், கடலோர கவிதைகள் ரேகா, சீதா, வனிதா விஜயகுமார், நளினி, அறந்தாங்கி நிஷா,ஷகிலா, அங்காடிதெரு மகேஷ். பிளாக் பாண்டி, ரோபோ சங்கர், சோனா, கூல் சுரேஷ், சிங்கம்புலி, ரமேஷ் கண்ணா, பருத்திவீரன் சரவணன், கஞ்சா கருப்பு மற்றும் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்....
பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதுக்கு பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதுக்கு பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

செய்திகள்
கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதிற்கு தேர்வாகியுள்ளார். தனது பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய-பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செவாலியர் விருதிற்கு அருணா சாய்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து பிரான்ஸ் குடியரசின் கலாச்சார அமைச்சர் ரீமா அப்துல் மலாக் அறிவித்துள்ளதாக சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதர் லிஸ் டால்போட் பாரே கூறினார். "இந்த விருது பிரெஞ்சு மற்றும் சர்வதேச கலை உலகிற்கு உங்களின் ஏராளமான பங்களிப்புகளுக்கு எங்கள் நாட்டின் பாராட்டுக்கான அடையாளமாகும்", என்று லிஸ் கூறினார். "கர்நாடக இசையின் அற்புதமான அழகையும் நுணுக்கத்தையும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் பரப்பியுள்ளீர்...
போல் வால்ட் விளையாட்டில், தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா, திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

போல் வால்ட் விளையாட்டில், தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா, திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

செய்திகள்
போல் வால்ட் விளையாட்டில், தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா, திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா பால்ராஜ், போல் வால்ட் விளையாட்டு போட்டியில் 8 வருடங்களாக இருந்த சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார். சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வமுள்ள ரோசி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி அவர்களின் ஸ்பான்ஷரில் இதுவரையிலும் பல சாதனைகள் படைத்துள்ளார். தேசிய அளவில் புதிய சாதனை படைத்ததை அடுத்து, இன்று திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பில் M.செண்பகமூர்த்தி உடனிருந்தனர்....
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்றழைக்கப்படும் பிலிம்சேம்பருக்கு தேர்தல் நடைபெற்றது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்றழைக்கப்படும் பிலிம்சேம்பருக்கு தேர்தல் நடைபெற்றது.

சினிமா, செய்திகள்
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்றழைக்கப்படும் பிலிம்சேம்பருக்கு தேர்தல் நடைபெற்றது. தலைவராக ரவி கொட்டாரக்கரா, துணைத்தலைவர்களாக ஜி.பி. விஜயகுமார், டி.எஸ். ராம்பிரசாத், கே.எஸ். ராமகிருஷ்ணா, செயலாளர்களாக டி.ஏ.அருள்பதி, கிருஷ்ணாரெட்டி, பொருளாளராக என்.இராமசாமி ( தேனாண்டாள் முரளி) செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.தாணு, கே.பிரபாகரன், எஸ். கதிரேசன், ஆர்.மாதேஷ், எம்.கபார், என்.விஜயமுரளி, மதுரை ஷாகுல்அமீது உட்பட 44 செயற்குழு உறுப்பினர்களாக பதவி ஏற்றனர்.தேர்தல் அதிகாரியான சி.கல்யாண் பணியாற்றினார். பில்டிங் கட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெற உறுதுணையாக இருந்த திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் சேம்பர் முன்னாள் தலைவர் காட்ரகட்ட பிரசாத் , ஜாகுவார் தங்கம், உட்...
கானாத்தூர் மக்களின் தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கிய சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்.

கானாத்தூர் மக்களின் தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கிய சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்.

சினிமா, செய்திகள்
சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம் நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவின் தந்தை நடிகர் திரு. சிவகுமார் வழங்கினார். தமிழ் திரையுலகில் 'ஜெய் பீம்' போன்ற படைப்புகளை உருவாக்கி, சமூகத்தில் நேர் நிலையான அதிர்வுகளை, நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஏற்படுத்தியது. படைப்புகளுடன் மட்டும் நில்லாமல் சமூக நல பணிகளுக்காகவும், மக்கள் நல திட்டங்களுக்காகவும் சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் நன்கொடையாக அளித்து வருகிறது. அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, தூய்மை பணிகளுக்கான நவீன வாகனத்த...
பிரபல வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம், உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரபல வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம், உடல்நலக்குறைவால் காலமானார்.

செய்திகள்
தந்தனந்தோம் என்று சொல்லியே .. என்று கணீர் குரலில் வில்லிசை பாடி மக்களின் இதயங்களை வென்ற கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் 1928 ம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தவர் . சுப்பு ஆறுமுகம் அவர்கள் கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி மக்களிடையே புகழ்பெற்று இருந்தவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உதவியால் சென்னையில் முதன்முதலாக கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை வில்லுபாட்டாக பாடி மக்களின் அன்பை பெற்றார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 19 படங்கள் உட்பட நாகேஷின் 60 படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை எழுதியுள்ளார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மறைவிற்குப் பின்னர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள்,பல பகுதிகளில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினை நடத்தி வந்தார். திரு. சுப்பு ஆறுமுகம் அவர்கள் தமிழக அரசின் "கலைமாமணி" மற்றும் மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் வி...
அகில இந்திய சிட் ஃபண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம்  சென்னையில் நடந்துள்ளது.

அகில இந்திய சிட் ஃபண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் சென்னையில் நடந்துள்ளது.

செய்திகள்
அகில இந்திய சிட் ஃபண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று (30/09/2022) சென்னையில் நடந்துள்ளது. புதிய நிர்வாகக்குழு தற்போது தேர்தல் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதவியேற்கும் பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் மற்ற உறுப்பினர்களின் நியமனம் குறித்தான பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 1.   திரு. V.C. பிரவீன் – தலைவர் (ஸ்ரீ கோகுலம் ஃபினான்ஸ் & சிட் கம்பெனி ப்ரைவேட் லிமிடட்) 2.   திரு. T.S. சிவராமகிருஷ்ணன் – (முன்பு உடனடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் சேர்மன் – ஆலோசனைக் குழு) (தி பாலுசெரி பெனிஃபிட் சிட் ஃபண்ட் ப்ரைவேட் லிமிடட்) 3.   திரு. A. சிற்றரசு – பொதுச் செயலாளர் (குறிஞ்சி சிட் ஃபண்ட்ஸ் ப்ரைவேட் லிமிடட்) 4.   திரு. கமல் பாம்பானி- அமைப்பு செயலாளர் (சந்திரலக்‌ஷ்மி சிட் ஃபண்ட்ஸ் ப்ரைவேட் லிமிடட்) 5.   திரு. A.P. அருணாச்சலம்- பொருளாளர் (தி மாயாவரம் ஃபின...