Monday, August 31

செய்திகள்

தமிழக முதல்வரிடம் பொதுக்குழு தீர்மானங்களை வழங்கினார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்

தமிழக முதல்வரிடம் பொதுக்குழு தீர்மானங்களை வழங்கினார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்

சினிமா, செய்திகள்
18 .09 .2022 அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அரசு வழங்கும் சிறுமுதலீட்டு படங்களுக்கான மானியத் தொகையையும், 2015ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆண்டு வரைக்கான திரைப்பட விருதுகளையும், பையனூரில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்கு மாடி வீடுகட்ட உதவியும், சங்க அலுவலகத்திற்கு சொந்த இடம் வழங்கக்கோரியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்களிடம் சங்கத் தலைவர் என்.ராமசாமி வழங்கினார் அருகில், அமைச்சர் கே.என்.நேரு, சங்க செயலாளர் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர் திரு.எஸ்.கதிரேசன் பொருளாளர் திரு.சந்திரபிரகாஷ் ஜெயின் செயற்குழு உறுப்பினர் திரு.விஜயமுரளி தயாரிப்பாளர் திரு.கருணாகரன் ஆகியோர் உள்ளார்கள்...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்….

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்….

சினிமா, செய்திகள்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்....பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கே.பாக்கியராஜ்..., கலைஞரின் எழுத்தால் எம்.ஜி.ஆர் புரட்சி நடிகராகவும், சிவாஜி நடிகர் திலகமாகவும் உருவாக முடிந்தது. எனக்கு தனிப்பட்ட முறையில் கலைஞரின் எழுத்தை அதிகம் ரசிப்பவன், என்னுடைய எழுத்தை அதிகம் மதிப்பவர் கலைஞர் உடனான நட்பு நீண்டகாலமாக தொடர்பில் இருந்தவர். அதே போல் கலைஞர் எம்ஜி ஆர் ஆகிய இருவர் நிகழ்விலும் சமமாக பங்கேற்றவன் நான்..,தமிழ் திரையை பொறுத்தவரையில் அனைவரும் உச்சரிக்கும் பெயர் கலைஞர் பெயர்.சங்க தேர்தலுக்கு உறுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி.சமீபகாலமாக எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. கதை இலாகா என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால் அதை ந...
டிஸ்கவரி புக் பேலஸில் ஜெயகாந்தன் குடில் திறப்பு விழா

டிஸ்கவரி புக் பேலஸில் ஜெயகாந்தன் குடில் திறப்பு விழா

இலக்கியம், செய்திகள்
சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் ஒரு அங்கமாக ஜெயகாந்தன் குடிலை பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஶ்ரீராம், பிரபல எடிட்டர் லெனின், இந்தோ ரஷ்ய வர்த்தக சபையின் பி. தங்கப்பன், கவிஞர் இந்திரன் மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு நேற்று திறந்து வைத்தனர். மிக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பலதரப்பட்ட எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்....
போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி

போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி

சினிமா, செய்திகள்
போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி 10 லட்சம் பரிசுத் தொகையுடன் இளைஞர்களுக்கான மெகா உடற்பயிற்சி போட்டி போதைப் பொருட்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மதுரை கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் World Fitness Federation (WFF) தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை இயக்குநர் அமீர் நடத்துகிறார். இம்முயற்சி குறித்து பேசிய அமீர், மனித வாழ்வில் ஆரோக்கியம் ஒரு முக்கிய அம்சமாகும், ஆனால் மக்கள் பாரம்பரிய உணவுப் பழக்கத்திலிருந்து விலகிவிட்டனர் என்றார். "இதனால் முன்பு போல் மக்கள் இன்று ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. மேற்கத்திய நாடுகளின் ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு பின்பற்றுகிறோமோ, அதே போல் ...
 ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’

 ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’

சினிமா, செய்திகள்
சென்னை, செப்டம்பர் - 11 : திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் திரு. சிவகுமார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுக்கான, ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 43-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆஃப் மெட்ராஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ ஒரு லட்ச...
பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கிய நடிகர் அர்ஜுன் மகள் அஞ்சனா அர்ஜுன்.

பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கிய நடிகர் அர்ஜுன் மகள் அஞ்சனா அர்ஜுன்.

சினிமா, செய்திகள்
நடிகர் அர்ஜுன் அவர்களின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன் நாம் உண்ணும் பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கி இருக்கிறார். உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்ற பெருமை அஞ்சனா அர்ஜுன் அவருக்கே சாரும். அந்த ஹேன்ட் பேக்குகளை விற்பனை செய்ய சர்ஜா என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று மாலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டிவிஜய ஈஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு துவங்கி வைத்தனர்....
‘இறைவி’ விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா

‘இறைவி’ விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா

செய்திகள்
வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய நாள்தோறும் நல்ல விசயங்களைத் தேடித் தேடிக் கற்கிறோம்- ‘இறைவி’ விற்பனையக நிறுவனர் ஜெயஸ்ரீ ராஜேஷ் சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவன வளாகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் சி...
ம.பொ.சி. அவர்களின் படமல்ல ஆனால், அவரைப் போற்றக்கூடிய படமாக இருக்கும் – இயக்குனர் போஸ் வெங்கட்

ம.பொ.சி. அவர்களின் படமல்ல ஆனால், அவரைப் போற்றக்கூடிய படமாக இருக்கும் – இயக்குனர் போஸ் வெங்கட்

சினிமா, செய்திகள்
ஒரு படத்தை பார்க்கத் தூண்டுவது அதன் தலைப்பு தான் என்பதை எனது முதல் படத்தில் உணர்ந்தேன் – இயக்குனர் போஸ் வெங்கட் இயக்குனர் போஸ் வெங்கட் பேசும்போது, பெரும்பாலும் ஒரு திரைப்படத்தின் பூஜை சென்னையில் தான் நடைபெறும். ஆனால், அறந்தாங்கி என்னுடைய பிறந்த இடம், இங்கு பூஜை நடைபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது சிறுவயது கனவு நிறைவேறியதற்கு சட்டத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இருவருக்கும் நன்றி.. அடுத்து, என் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட என்னுடைய கதாநாயகன், என்னுடைய மாப்பிள்ளை விமலுக்கு நன்றி.கன்னிமாடத்தில் என்னுடன் பணியாற்றிய கதாநாயகி சாயா தேவி இப்படத்தில் நடிக்கிறார்.பருத்தி வீரன் படத்தில் ஒரு கலக்கு கலக்கி தமிழ்நாட்டையேத் திரும்பி பார்க்க வைத்த அன்பு சகோதரர் சரவணன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகவுள்ளார். சிறுவயதாக இருந்தாலும் இந்த ...
நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு நேரில் வாழ்த்து கூறிய பொருளாளர் நடிகர் கார்த்தி.

நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு நேரில் வாழ்த்து கூறிய பொருளாளர் நடிகர் கார்த்தி.

சினிமா, செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 70 வது பிறந்த நாளான இன்று , நடிகர் சங்கம் சார்பில், பொருளாளர் கார்த்தி நேரில் சென்று மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இவரிடன் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஹேமசந்திரன் ஆகியோர் இருந்தார்கள். நடிகர் விஜயகாந்தைப் பற்றி நடிகர் கார்த்தி கூறியதாவது: விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அவருடைய தைரியம் தான். அதேபோல், யார் வந்தாலும் சாப்பிடலாம் என்று சிறு வயதிலிருந்தே கேள்விபட்டிருக்கேன். யாரிடமும் எந்த பாகுபாடும் இல்லாமல் அன்பு காட்டுவது எவ்வளவு பெரிய விஷயம். இப்படி ஒரு மனிதரை அவருடைய பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவது தான் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். அதிலும் சங்கம் சார்பாக வந்து வாழ்த்தியது நிறைவாக உள்ளது என்றார்....
பிரபலங்கள் பாராட்ட, வாடிக்கையாளர்கள் வயிறும் மனதும் நிறைய, அண்ணா நகர் விமலம் மெஸ்ஸில் களைகட்டிய உணவு திருவிழா

பிரபலங்கள் பாராட்ட, வாடிக்கையாளர்கள் வயிறும் மனதும் நிறைய, அண்ணா நகர் விமலம் மெஸ்ஸில் களைகட்டிய உணவு திருவிழா

சமையல், செய்திகள்
அண்ணா நகர் விமலம் மெஸ் சார்பாக மாபெரும் உணவு திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவின் சிறப்பம்சமாக மங்களூரியன் உணவு வகைகள் அறுசுவையுடன் பரிமாறப்பட்டன . ஜப்பான் கன்சுல் ஜெனரல் (தூதர்) டாகா மசாயுகி, டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ சி சண்முகம் மற்றும் தணிக்கையாளர் ராமலிங்கம், உள்ளிட்டோர் இந்த உணவு திருவிழாவில் கலந்துகொண்டு உணவின் ருசியையும், உபசரிப்பையும், ஏற்பாடுகளையும் வெகுவாக பாராட்டினார்கள். கலை உலக பிரபலங்கள் இயக்குநர் சுந்தர் சி, இயக்குநர் ராஜீவ் மேனன், இயக்குநர் மிஷ்கின், நடிகர் மோகன், டாக்டர் ஹரிஹரன், அபிஷேக், ஐஸ்வர்யா ராஜேஷ், அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா, பாடகி சௌந்தர்யா, பாடகர் க்ரிஷ், பார்வதி நாயர், விஜய் ஆதிராஜ் மற்றும் ஊடகவியாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் இந்த உணவு திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை ...