Monday, June 1

செய்திகள்

தமிழகத்தில் விளையாட்டுத் துறை திரு .உதயநிதி அவர்களின் தலைமையில் மிகவும் மேம்பட்டு இருக்கிறது-வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷ்பாராட்டு

தமிழகத்தில் விளையாட்டுத் துறை திரு .உதயநிதி அவர்களின் தலைமையில் மிகவும் மேம்பட்டு இருக்கிறது-வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷ்பாராட்டு

சினிமா, விளையாட்டு
உதயநிதியை பாராட்டிய வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷ்! வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் ஃபுட்பால் பிளஸ் U-13, U-15 மற்றும் U-17 யூத் லீக்களுக்கான புதிய ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி, பாலக்காட்டை சேர்ந்த ஜிதினுக்கு ஸ்பெயினில்  ஓராண்டு பயிற்சிக்காக தனது பங்களிப்பாக ரூ 22 லட்சத்திற்கான காசோலையும் ஐசரி கணேஷ் வழங்கினார். இது குறித்து ஐசரி கணேஷ் பேசியதாவது, “இன்று தமிழகத்தில் விளையாட்டுத் துறை உதயநிதி அவர்களின் தலைமையில் மிகவும் மேம்பட்டு இருக்கிறது. முதல்வர் திரு. ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி இன்னும் சிறப்பாக உள்ளது. இந்த நேரத்தில் ஃபுட்பால் விளையாட்டை தமிழகத்தில் இன்னும் பெரிய அளவில் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன். இதற்காகவே வேல்ஸ் ஃபுட்பால் அகாடெமி ஆரம்பிக்க இருக்கிறோம், இதற்காக நல்ல திறமையாளர்களை கண்டுபிடித்து அவர்...
தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் லீக்! – வெற்றியாளருக்கு பரிசு வழங்கிய ‘ஜெயிலர்’ பாடலாசிரியர் சூப்பர் சுப்பு

தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் லீக்! – வெற்றியாளருக்கு பரிசு வழங்கிய ‘ஜெயிலர்’ பாடலாசிரியர் சூப்பர் சுப்பு

விளையாட்டு
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தரவரிசை டென்பின் பவுலிங் லீக்! - நடப்பு மாநில சாம்பியன் அபிஷேக் துதாசியா வெற்றி தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம் (இந்திய டென்பின் பவுலிங் கூட்டமைப்புடன் இணைந்தது) சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள டியு பவுலில் நடந்த தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் லீக்கின் இறுதிப் போட்டியில், நடப்பு மாநில சாம்பியன் அபிஷேக் துதாசியா, ஷபீர் தன்கோட் மற்றும் பார்த்திபன்.ஜே ஆகியோரை வீழ்த்தினார். கடந்த ஒரு மாதம் காலமாக நடைபெற்ற லீக்கின் இறுதிப் போட்டி மூன்று பக்க நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இதில், அபிஷேக் துதாசியா, ஷபீர் தன்கோட் மற்றும் பார்த்திபன்.ஜே ஆகியோர் போட்டியிட்டனர். இரண்டு போட்டிகளில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய இறுதிப் போட்டியில், அபிஷேக், பார்த்திபன் மற்றும் ஷபீர் ஆகியோர் தங்களில் நாக் அவுட் அரையிறுதியை வென்ற பிறகு ஒருவருக்கொருவர...
லால்குடி அருகே ஆதிக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துளசி மணி தியான மண்டபத்தை இயக்குநர் திரு. லிங்குசாமி திறந்து வைத்தார்

லால்குடி அருகே ஆதிக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துளசி மணி தியான மண்டபத்தை இயக்குநர் திரு. லிங்குசாமி திறந்து வைத்தார்

செய்திகள்
லால்குடி அருகே ஆதிக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துளசி மணி தியான மண்டப திறப்பு விழா நடந்தது. திரைப்பட இயக்குநரும், எழுத்தாளரும், ஹார்ட்ஃபுல்னஸ் தியானப் பயிற்சியாளரும், பயிற்றுவிப்பாளருமான திரு. லிங்குசாமி தியான மண்டபத்தைத் திறந்து வைத்து, ஹார்ட்ஃபுல்னஸ் தியானம் மற்றும் அதன் அழகு பற்றிய தனது அனுபவத்தைப் பற்றிய நுண்ணறிவு உரையை நிகழ்த்தினார். ஹார்ட்ஃபுல்னஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமதி சங்கீதா குருசாமி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கும்லூர் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் டாக்டர் பி.ராஜ்குமார், டீன் டாக்டர் எஸ்.டி.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீமதி ஹேமலதாவின் மகன் ஸ்ரீ ராஜேஷ், நிகழ்வை மாபெரும் வெற்றியடையச் செய்த விருந்தினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ...
தமிழகத்தில் உடற்பயிற்சி கூட துறைக்காக இன்று சென்னையில் புதிதாக துவங்கியது தமிழ்நாடு ஃபிட்னெஸ் அசோசியேசன் என்ற அமைப்பு.

தமிழகத்தில் உடற்பயிற்சி கூட துறைக்காக இன்று சென்னையில் புதிதாக துவங்கியது தமிழ்நாடு ஃபிட்னெஸ் அசோசியேசன் என்ற அமைப்பு.

செய்திகள்
சென்னை வளசரவாக்கத்தில் இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உடற்பயிற்சி கூடங்களின் உரிமையாளர்களையும் அதன் பணியாளர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பெரும் முயற்சியாக புதிதாக உருவாகி இருக்கிறது தமிழ்நாடு ஃபிட்னெஸ் அசோசியேசன் என்ற அமைப்பு. தமிழகத்தில் ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் இருக்கும் நிலையில் பல நூறு உடற்பயிற்சி கூடங்கள் அழிந்து தொழில்துறையும் முடங்கி வரும் சூழல் இன்று நிலவி வருகிறது. விளையாட்டுத்துறை அமைச்சராக திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இருக்கும் இந்த சூழலில் உடற்பயிற்சி கூட துறையில் இது போன்ற ஒரு அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது மிகவும் வருத்தமான விஷயமும் கூட.. இதனால் அனைத்து உடற்பயிற்சி கூட உரிமையாளர்களையும் உடற்பயிற்சி கூட நிபுணர்களையும் ஒன்றிணைத்து தமிழக மக்களின் வாழ்வியலில் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கிட.. அனைவரது வாழ்விலும் உடற்பயிற்சி எவ்வ...
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘தமிழன் விருது’க்கான புதிய சின்னத்தை அறிமுகப்படுத்திய இயக்குனர் சேரன்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘தமிழன் விருது’க்கான புதிய சின்னத்தை அறிமுகப்படுத்திய இயக்குனர் சேரன்

செய்திகள்
செய்திப் பணிகளைத் தாண்டியும் சமூகப் பணியாற்றுவதை கடமையாக கொண்டுள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி, அத்தகைய சமூகப்பணியின் ஓர் அங்கமாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக, 6 துறைகளில் சாதனை புரிந்துவரும் தமிழர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு தமிழன் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில், சமூகப்பணி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் சாதனை புரிந்துவரும் ஆளுமைகளுக்கு தமிழன் விருதுகளும், அந்த துறைகளில் சாதிக்கத் துடிக்கும் இளையோருக்கு நம்பிக்கை நட்சத்திரம் விருதுகளும் என இரு பிரிவுகளாக விருதுகள் வழங்கப்படுகின்றன அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘10ஆம் ஆண்டு தமிழன் விருதுகள் வழங்கும் விழா’ நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தமிழன் விருதுக்கான புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஊடகவியல...
முத்தையா முரளிதரன்: விதியை வெல்லும் மனிதன்!

முத்தையா முரளிதரன்: விதியை வெல்லும் மனிதன்!

விளையாட்டு
முத்தையா முரளிதரன்: விதியை வெல்லும் மனிதன்! கடந்த 2004ஆம் ஆண்டு, டிசம்பர் 26ஆம்  நாள்  ஞாயிற்றுக்கிழமை நாளன்று முத்தையா முரளிதரன் தனது தோள்பட்டை காயத்தில் இருந்து தேறி வந்து கொண்டிருந்தபோது, அவர் ஒரு பரபரப்பான நாளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள இலங்கை நகரமான காலி (Galle) நகருக்கு மிக அருகில் உள்ள ஒரு இடத்தில் அவர் நாளைக் கழிக்க திட்டமிட்டிருந்தார். 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றவாதிகளால் நிறுவப்பட்ட கோட்டையான பழைய நகரமான காலி (Galle) கோட்டைக்கு அந்த இடம் மிகவும் பிரபலமானது. முரளிதரன் அவரது மேலாளரான குசில் குணசேகரவால் நடத்தப்படும் ’பவுண்டேஷன் ஆஃப் குட்னஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கற்றல் பொருட்களை விநியோகிக்க திட்டமிட்டிருந்தார். முரளிதரன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ...
இந்திய இசைக்கு சர்வதேச மகுடம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதை பெற்றார் அருணா சாய்ராம்

இந்திய இசைக்கு சர்வதேச மகுடம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதை பெற்றார் அருணா சாய்ராம்

செய்திகள்
பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதை பெற்றார் அருணா சாய்ராம்,தனக்கு மிகவும் பிடித்த நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெற்ற விருதை தானும் பெற்றதில் அருணா சாய்ராம் பெருமிதம் தனது இசைப் பணியால் அற்புதங்களையும் அதிசயங்களையும் படைத்து வரும் திருமதி அருணா சாய்ராம் கர்நாடக இசை உலகின் ராக் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி உள்ளிட்ட உயரிய விருதுகளை இதுவரை வென்றுள்ள அருணா சாய்ராம், தற்போது தனக்கும், கர்நாடக இசைக்கும் மட்டுமில்லாமல் இந்திய நாட்டுக்கே பெரும் கௌரவத்தை ஈட்டித் தந்துள்ளார். ஆம், பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய விருதான உலக அளவில் பெரிதும் மதிக்கப்படும் செவாலியர் விருது ஜூலை 15 அன்று அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இதற்கு முன்னர் பெற்றது நம் அனைவருக்கும் தெரியும். மும்பையி...
சிவகுமார் கல்வி அறக்கட்டளை 44-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 44-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

செய்திகள்
திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் ஜெயராஜ் அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சோமாண்டர்குடி அரசு ...
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாநில பொதுக்கூட்டம்!

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாநில பொதுக்கூட்டம்!

செய்திகள்
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15.07.2023) நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர். பாரிவேந்தர் அவர்களின் தலைமையில் கூட்டணி கட்சி முன்னோடிகள் மற்றும் 20000 பேர் IJK கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் தலைமை வகித்தார். மேலும், இந்நிகழ்வில் அதிமுக சட்டப் பேரவை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, இந்திய ஜனநாயக கட்சியின் பொருளாளர் ஜி.ராஜன், மாநில பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன், துணைத் தலைவர் ஆனந்த முருகன், துணை பொதுச் செயலாளர் நெல்லை ஜி.ஜீவா, மாநில இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின், அதிமுக அரியலூர...
கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா, ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது வழங்கப்பட்டது

கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா, ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது வழங்கப்பட்டது

செய்திகள்
கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா, ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது வழங்கப்பட்டது கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் ஜூலை 13 வியாழக்கிழமை காலை 9 மணிக்குச் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகை திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கம்பம் பெ.செல்வேந்திரன் இருவரும் வாழ்த்துரை வழங்கினார்கள். வெற்றித் தமிழர் பேரவை ஒவ்வோராண்டும் கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கவிஞரைத் தேர்வு செய்து கவிஞர்கள் திருநாள் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விருதை கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் பெற்றார். அவருக்குக் கவிஞர் வைரமுத்து விருது வழங்கினார். கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்ட...