Monday, June 1

செய்திகள்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை வழியனுப்பி வைத்தனர்!

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை வழியனுப்பி வைத்தனர்!

விளையாட்டு
கோவாவில் நடைபெறவுள்ள 37 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 530 விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின்  தலைவர் Dr. ஐசரி K. கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் திரு ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். கோவாவில் அக்டோபர் 25 முதல் நவம்பர் 9 வரை இந்தப் போட்டி நடைபெற உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின்  தலைவர் Dr. ஐசரி K. கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் திரு ஆதவ் அர்ஜுனா ஆகியோர் 37 வது தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் அணிவகுப்புக்கான அதிகாரப்பூர்வ சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்தி வைத்தனர். இவர்களுடன் 116 அதிகாரிகள் கொண்ட குழுவும் கோவா செல்கிறது. அப்போது உரையாற்றிய ஐசரி கணேஷ் பேசியதாவது  கடந்த தேசிய விளையாட்டு போட்டியில் ஐந்தாம் இடம் கிடைத்தது, ...
உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !!

உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !!

செய்திகள்
உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !! ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். உணவற்ற ஏழைகளுக்கு ஒரு வேளை உணவளிக்க வெறும் 35 ரூபாய் தான் செலவாகிறது. நாம் மனது வைத்தால் உணவில்லாமல் தவிப்பவர்கள் நிலையை மாற்ற முடியும். இந்நிறுவனத்தின் சார்பில் உலக உணவு தினத்தன்று வருடா வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் 5000 க்கு பேருக்கு பிர...
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யா ராமராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் M.செண்பகமூர்த்தி பரிசு வழங்கி பாராட்டு.  

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யா ராமராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் M.செண்பகமூர்த்தி பரிசு வழங்கி பாராட்டு.  

விளையாட்டு
கோயம்புத்தூரில் ஏழைத்தாயுடன் எளிமையான குடும்பமாக வாழ்ந்து வரும் வித்யா, நித்யா,இந்த இரட்டையர்கள் இருவரும், சிறு வயது முதலே விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களின் திறமையறிந்து சென்னை மாவட்ட  மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர்,திரு M.செண்பகமூர்த்தி, இருவரையும் ஊக்கப்படுத்தி, பல உதவிகள் செய்து வருகிறார். ஆசிய போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்வதற்கு ,அவர்களுக்கு தேவையான காலணி முதல் பல பரிசுகளை வழங்கி  உதவிகளைச் செய்துள்ளார். ஆசிய போட்டியில் வித்யா 400 மீட்டரில் தங்கப்பதக்கம் வாங்கி சாதித்ததுடன் மேலும் பல சாதனைகள் செய்துள்ளார். நித்யா 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதல் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல மெடல் பரிசும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் மற்றும், 400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் சில்வர் மெடல் பெற்று சாதனை செய்துள்ளார். ஆசிய போட்டிகளில் மட்டுமல்லாது தே...
சாய் சஹஸ்ரநாமம் தெலுங்கு புத்தகத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார்

சாய் சஹஸ்ரநாமம் தெலுங்கு புத்தகத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார்

செய்திகள்
சாய் சஹஸ்ரநாமம் தெலுங்கு புத்தகத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார் அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், ஹரிஜன சேவக் சங்க தமிழ்நாடு மாநில தலைவர் பிடிக்கிட்டி மாருதி, திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ் சாய் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்சங்கர் தெருவில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'சாய் சஹஸ்ரநாமம்' புத்தகத்தின் தெலுங்கு பதிப்பை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். ஸ்ரீ ஷீரடி சாய் சேவா சமாஜ் தலைவர் பி ஸ்ரீநிவாஸ் இப்புத்தகத்தை தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். புத்தகத்தின் பிரதிகளை ஆளுநரிடம் இருந்து அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் டாக்டர் கிருஷ்ணன், ஹரிஜன சேவக் சங்க தமிழ்நாடு மாநில தலைவர் பிடிக்கிட்டி மாருதி, பிரபல திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ் சாய் ஆகியோர் பெற்றுக்க...
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்வில்  இயக்குநர் சீனு ராமசாமி, ‘காமராஜ்’ திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி, ‘காமராஜ்’ திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு

செய்திகள்
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், பெருந்தலைவர் என்றும் கர்மவீரர் என்றும் மக்களால் பெரிதும் போற்றப்படுபவருமான காமராஜர் அவர்களின் 48வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. காமராஜரின் நினைவை போற்றும் விதமாக சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் இன்று அன்னதானம் வழங்கப்பட்டது. பிரபல இயக்குநர் சீனு ராமசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். 'காமராஜ்' திரைப்படத்தின் இயக்குநரான அ. பாலகிருஷ்ணன், சீனு ராமசாமி உடன் இணைந்து அங்கிருந்தவர்களுக்கு உணவு வழங்கினார். காமராஜர் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள பெருந்தலைவரின் திருவுருவ சிலைக்கு சீனு ராமசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது குறித்து பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, "நாடு போற்றும் நல்ல தலைவரான பெருந்தலைவர் காமராஜர் அவ...
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை

செய்திகள்
தமிழ் சினிமாவின் பெருமையும் நமது தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன்,மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தளபதி தினேஷ், பிரகாஷ், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்....
தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அவர்களை நேரில் சந்தித்த இயக்குனர் சீனு ராமசாமி, தான் எழுதிய கவிதை நூலை நினைவு பரிசாக வழங்கினார்

தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அவர்களை நேரில் சந்தித்த இயக்குனர் சீனு ராமசாமி, தான் எழுதிய கவிதை நூலை நினைவு பரிசாக வழங்கினார்

செய்திகள்
விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் அருளானந்து தயாரித்து,ஏகன் கதாநாயகனாக அறிமுகமாகும், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் ஒன்பதாவது திரைப்படமான "கோழிப்பண்ணை செல்லதுரை" படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. படப்பிடிப்பு தளங்களை பார்வையிட வந்த இயக்குனர் சீனு ராமசாமி மரியாதை நிமித்தமாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அவர்களை நேரில் சந்தித்து தான் எழுதிய 'புகார் பெட்டியின் மீது படுத்து உறங்கும் பூனை'என்னும் கவிதை நூலை நினைவு பரிசாக வழங்கி பல சீர்மிகு பணிகளால் தேனி மாவட்ட மக்களின் அன்பை பெற்ற பெண் கலெக்டரை வாழ்த்தினார்....
வேலம்மாள் பள்ளியில் செஸ் சாம்பியன்களுக்கு மாபெரும் பாராட்டு விழா: அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்பு; ரூ.60 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

வேலம்மாள் பள்ளியில் செஸ் சாம்பியன்களுக்கு மாபெரும் பாராட்டு விழா: அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்பு; ரூ.60 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

விளையாட்டு
இளம் திறமையாளர்களை வளர்ப்பதில் முன்னோடியாகத் திகழும் வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளியில் உலக அளவில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியத்தகு சாதனைகள் படைத்த பள்ளி மாணவர்களை கவுரவிக்கும் வகையில் மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளிகளின் முதன்மை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த கண்கவர் பாராட்டு விழா நிகழ்ச்சியில், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு, உலக அளவில் 8-வது நிலை வீரரும், இந்தியாவின் நம்பர் 1 செஸ் விளையாட்டு வீரருமான குகேஷ், ஆசியாவின் 2--வது இடம் பிடித்த டென்னிஸ் வீராங்கனை ஹரிதா ஸ்ரீ, உலக பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் செஸ் பயிற்சியாளர் வேலவன் ஆகியோரது சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வில் மாண்புமிகு விளையாட்டு ம...
‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா

‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா

செய்திகள்
எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்திய,திராவிட இயக்கங்களின் முன்னோடி, 'நடிகமணி' டி.வி.என் நூற்றாண்டு விழா நேற்று தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடந்தது. திருமதி.பாரதி திருமகன் வில்லிசை நடக்க.. தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது.டி.கே.எஸ்.கலைவாணன் தொகுப்புரை வழங்க,ஜி.இராமகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்த,கி.வீரமணி விழாவுக்கு தலைமை தாங்க..,விஜயா தாயன்பன்,சி.பொன்னையன்,சைதை துரைசாமி,நல்லி குப்புசாமி செட்டி,நடிகை சச்சு,இவர்கள் முன்னிலையில்..நடிகமணி டி வி என் உருவ படத்தை, தி மு க செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் திறந்து வைத்தார். டி வி என் வாழ்க்கை வரலாறு முதல் நூலை கி.வீரமணி வெளியிட,ஜி.விசுவநாதன் பெற்றுக் கொண்டார். விழா மலரை.. இயல் இசை நாடக மன்றம் தலைவர் வாகை சந்திரசேகர் வெளியிட,முதல் பிரதியை, *தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவ...
எஸ் பி சரண் தொடங்கி வைத்த ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ அழகு நிலையம்

எஸ் பி சரண் தொடங்கி வைத்த ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ அழகு நிலையம்

அழகும் ஆரோக்கியமும்
பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமையுடன் வலம் வரும் எஸ்பி சரண், நடிகை நீலிமா இசையின் 'நேச்சுரல் சிக்னேச்சர்' எனும் அழகு நிலையத்தை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று திறந்து வைத்தார். இன்றைய சூழலில் கலைத்துறையில் பணியாற்றும் நடிகைகள், கலை சேவை செய்வதுடன் தங்களுக்கு விருப்பமான துறைகளிலும் தொழில் முனைவோராக அறிமுகமாகி, மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். 'நான் மகான் அல்ல' எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை நீலிமா இசை, சென்னையில் உள்ள ஆர். கே. சாலையில் 'நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்' எனும் அழகு நிலையத்தை புதிதாக தொடங்கியிருக்கிறார். இந்த அழகு நிலையத்தை எஸ் பி சரண் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது தொழிலதிபர்கள் இளங்கோவன், வீணா குமரவேல் மற்றும் சி. கே. குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு, நடிகை நீலிமா இசை மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர...