Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93வது பிறந்த நாள் முன்னிட்டு பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை வருடந்தோறும் கலையில் சிறந்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு
Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93வது பிறந்த நாள் முன்னிட்டு பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை வருடந்தோறும் கலையில் சிறந்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 06/07/23 நடைபெற்றது.
இவ்விழாவினை பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மகன்கள் Dr.வம்சி மோகன் Dr.சுதாகர் மற்றும் மகள் மஹதி சீனிவாசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்,அதனை தொடர்ந்து கலைமாமணி Dr.k.கிருஷ்ணகுமார் மற்றும் கலைமாமணி திருமதி பின்னி கிருஷ்ணகுமார் அவர்கள் குழுவுடன் வழங்கிய இசை அஞ்சலியுடன் நிகழ்ச்சி சிறப்பாக துவங்கியது.
Dr.வம்சி மோகன் வரவேற்புரையாற்றினார்.
பாரதிய வித்யா பவன் கோவை மண்டல தலைவர் Dr.B.K. கிருஷ்ணராஜ் வானவராயர்
சிறப்பு விருந்தினராக பங்குபெற்று சிறப்புரை வழங்கினார்.மேலும் பரதநாட்டிய கலைஞர் Dr.M . பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு Dr.M. பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் 2023ம் ஆண்டுக்கான "முரளி நாத...









