Saturday, February 15

எஸ் பி சரண் தொடங்கி வைத்த ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ அழகு நிலையம்

பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமையுடன் வலம் வரும் எஸ்பி சரண், நடிகை நீலிமா இசையின் ‘நேச்சுரல் சிக்னேச்சர்’ எனும் அழகு நிலையத்தை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று திறந்து வைத்தார்.

இன்றைய சூழலில் கலைத்துறையில் பணியாற்றும் நடிகைகள், கலை சேவை செய்வதுடன் தங்களுக்கு விருப்பமான துறைகளிலும் தொழில் முனைவோராக அறிமுகமாகி, மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். ‘நான் மகான் அல்ல’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை நீலிமா இசை, சென்னையில் உள்ள ஆர். கே. சாலையில் ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ எனும் அழகு நிலையத்தை புதிதாக தொடங்கியிருக்கிறார்.

இந்த அழகு நிலையத்தை எஸ் பி சரண் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது தொழிலதிபர்கள் இளங்கோவன், வீணா குமரவேல் மற்றும் சி. கே. குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு, நடிகை நீலிமா இசை மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வண்ணத்திரை, சின்னத்திரை, டிஜிட்டல் திரை ஆகிய திரைகளில் தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகை நீலிமா இசை, புதிதாக ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ எனும் அழகு நிலையத்தை தொடங்கியதன் மூலம் தன்னுடைய சேவையை இளம்பெண்களுக்கும்.. இல்லத்தரசிகளுக்கும்.. பெண்மணிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கிறார். தொடர்ந்து புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் இறங்கி பணியாற்றி வரும் அவருக்கு சமூக ஊடகங்கள் வழியாகவும், நேரிலும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

Spread the love