மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா” பேய், பிசாசு போன்றவற்றின் மீது நம்பிக்கை இல்லாத நாயகனுக்கு பேய் என்று ஒன்று உள்ளதா? இல்லையா என்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது, அங்கு அவர் பேய் என்று ஒன்று கிடையாது என தன கருத்தை வாதாடுகிறார். அந்த விவாதத்தில் கலந்துகொண்டிருக்கும் மந்திரவாதி ஒருவர்,நாயகனுக்கு ஒரு சவால் விடுகிறார், அந்த சவால்படி அவர் சொல்லும் வீட்டில் ஒருநாள் தங்கி இருக்க நாயகனும் ஒப்புக்கொள்ளுகிறார், அப்படி தங்கிவிட்டால் பேய் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என மந்திரவாதி சொல்ல ,அந்த சவாலை ஏற்கும் நாயகன் அந்த சவாலில் எப்படி வெற்றி பெற்றார் என்பதே படத்தின் கதை.
புதுமுக ஹீரோவாக சி.எஸ்.கிஷன் அறிமுகமாகி இருக்கிறார். செய்வினை ,மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இந்த படத்தின் நாயகனாய் கிஷன் நடித்துள்ளார். அறிமுக படமாக இருந்தாலும் கேரக்டருக்கு ஏற்றபடி நிறைவாக நடித்துள்ளார். எல்.வி.முத்துகணேஷ் இசை மற்றும் ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவும் கதையினை நகர்த்தும் விதத்துக்கு ஏற்றாற்போல அமைந்துள்ளன .
நீண்ட இடைவெளிக்குப்பின் T .ராஜேந்தர் மற்ற இயக்குனரின் படத்தில் ஒரு பாடலை எழுதி அதனை பாடியும் உள்ளது இந்த படத்துக்கு ஒரு பக்கபலம் என்றே சொல்லலாம்.நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாகவும் நடித்துள்ள, இப்படத்தை விஜய் தமிழ்செல்வன் இயக்கியுள்ளார், ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக இப்படத்தினை உருவாக்கியுள்ளார்.பொழுதுபோக்கிற்க்கு படம் பார்க்க சொல்லும் ஆடியன்சுக்கு அஷ்டகர்மா நிச்சயம் ஏமாற்றம் தராது என்றே சொல்லலாம்
.