ஆதி நடிப்பில் சோனி லைவ் தளத்தில் வெளியாகியிருக்கும் “கிளாப்” திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டு மழையில், நடிகர் ஆதி பினிஷெட்டி நடிப்பில் “கிளாப்” !
இது குறித்து Big Print Pictures தயாரிப்பாளர் IB கார்த்திகேயன் கூறியதாவது…,
இப்படத்திற்கு கிடைத்து வரும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எங்கள் குழுவினரை பெருமளவில் உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படத்தின் கருவின் மீது நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கை, இந்த கோவிட் காலத்திலும், எங்கள் குழுவினரின் அயராத அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு, எங்களுக்கு மிகச்சிறப்பான வெற்றியை தந்துள்ளது. இப்போது, விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் என அனைவரும் எங்கள் முயற்சிகளை அங்கீகரிப்பதையும், பாராட்டுவதையும் காண மிக மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் ஆதி பினிஷெட்டி இப்படத்தில் காட்டிய ஆர்வத்திற்கும், அவரது அற்புதமான உழைப்பிற்கும் நன்றி. ஆகான்ஷா சிங், க்ரிஷா குருப், பிரகாஷ் ராஜ் சார், நாசர் சார், மைம் கோபி, முனிஷ்காந்த் மற்றும் படத்தி...









