Tuesday, December 3

தனது திருமணத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் நலிந்த கலைஞர்களை கௌரவித்த ‘மாவீரன் பிள்ளை’ தயாரிப்பாளர் K.N.R.ராஜா..!

வீரப்பனின் மகள் விஜயலட்சுமி நடிக்கும் ‘மாவீரன் பிள்ளை’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் K.N.R.ராஜா-விற்கும் தர்மபுரியை சேர்ந்த அனுஷா-விற்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் உறவினர்களைவிட ஆதரவற்ற குழந்தைகளும், முதியவர்களும், காதுகேளாதோர், ஊனமுற்றோர் மற்றும் பெரியவர்களும் அதிகளவில் இருந்தனர். அதே போல் நலிவடைந்த தெருக்ககூத்து கலைஞர்களும் அதிகமாக இருந்தனர்.

இவர்கள் அனைவரையும் புதுமாப்பிள்ளை ராஜா வாகனம் வைத்து அழைத்து வந்து உணவளித்து, அவர்களுக்கு புதிய ஆடைகள் கொடுத்து மகிழ்ந்தார்.

இந்த திருமணத்தில் நடிகர் ராதாரவி மற்றும் வீரப்பன் மகள் விஜயலட்சுமி கலந்துகொண்டார்கள்.

திருமணவிழாவில் உறவினர்கள், நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை உபசரிப்பது வழக்கம்.
ஆனால், ஆதரவற்றவர்களை அழைத்து திருமணத்தில் கலந்துகொள்ள செய்தது வியப்பாகவும், வரவேற்க கூடியதாகவும் இருக்கிறது. இந்த புதுமண தம்பதியினரை அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதனைப்பற்றி K.N.R.ராஜாவிடம் கேட்டபோது ..

அனைவரும் தன் குடும்ப விசேஷம் என்றாலும் பிறந்தநாள் என்றாலும் ஆசிரமத்திற்கு சென்று உணவு கொடுத்து வெளி உலகம் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்..

நான் அவர்களை என் உறவுகளை போல பாவித்து என் உறவுகளுக்கு ஆடை எடுத்துக் கொடுத்தது போல் இவர்களுக்கும் ஆடை எடுத்துக் கொடுத்து அவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் இது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றார்..

Spread the love