Monday, June 1

சினிமா

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்  பால முருகன் – அம்மு அபிராமி – “குக் வித் கோமாளி” புகழ் நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்”

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்  பால முருகன் – அம்மு அபிராமி – “குக் வித் கோமாளி” புகழ் நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்”

சினிமா
மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களிடம் துணை - இணை இயக்குனராக பணியாற்றியவர். மாண்புமிகு தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் உயர்திரு மு.பெ.சுவாமிநாதன் அவர்களின் ஆசியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூரில் இனிதே துவங்கியது. புது முகம் பால முருகன் கதாநாயகனாக நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்” படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கின்றார். “குக் வித் கோமாளி” புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி, TSR, அனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பு - மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் இயக்கம் - உலகநாதன் சந்திரச...
“சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்

“சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்

சினிமா
பழிக்குப் பழிவாங்கும் கதைக்களம் கொண்ட, விரைவில் வெளிவரவுள்ள அதிரடி தமிழ் சித்திரமான ’சாணி காயிதம்’ திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கும் வெற்றி இயக்குனராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் ஒரு நடிகராக மீண்டும் வருவதைக் காண்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான செல்வராகவன் இப்படத்தில் சங்கையா கதாபாத்திரத்தை சித்தரிக்கிறார். தான் நடிக்க வந்ததைக் குறித்து அவர் கூறுகையில், “நான் இயக்குனராக இருக்கும் காலத்தில் இருந்தே நேரத்தைப் பார்த்து வேலை செய்வது கூடாது என்ற ஒரு கொள்கை எனக்கு இருந்தது. செய்யும் பணியில் முழு கவனத்தோடு செயல்படும்போது நேரம் போவதே தெரியாது. அனைத்தும் என் வி...
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!

‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!

சினிமா
உலக திரை வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் நான் லீனியர் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “இரவின் நிழல்”. தமிழின் புகழை உலகம் பாடும் விதமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,  இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழா, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் இலக்கிய எழுத்தாளர் இராமகிருஷ்ணன், முன்னாள் நீதிபதி சந்துரு, இயக்குநர் எழில், சசி, சமுத்திரகனி, த.செ. ஞானவேல், எழுத்தாளர் அஜயன் பாலா, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் சிறப்புக்களை பகிர்ந்து கொண்டனர். இயக்குநர் கரு பழனியப்பன் கூறியாதவது... இந்த படம் எப்படி சாத்தியமாகும் என்ற சந்தேகமும், இதனை எப்படி தமிழில் ...
V Square Entertainment நிறுவனம் ,நடிகை அமலா பால் நடிப்பில் “அதோ அந்த பறவை போல” திரைப்படம் மூலம் திரைப்பட விநியோக வியாபாரத்தில் களமிறங்குகிறது !

V Square Entertainment நிறுவனம் ,நடிகை அமலா பால் நடிப்பில் “அதோ அந்த பறவை போல” திரைப்படம் மூலம் திரைப்பட விநியோக வியாபாரத்தில் களமிறங்குகிறது !

சினிமா
தெளிவான பார்வையும், தீராத ஆர்வமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இந்த குணங்களை உள்ளார்ந்த இயல்பாகக் கொண்ட தனிநபர்கள் ஒன்றிணைந்தால், அது நிச்சயமாக ஒரு புரட்சிக்கு வழி வகுக்கும். அந்த வகையில் திரு. விஸ்வநாதன் மற்றும் திரு. சுனில் குமார், இருவரும் அவரவர் தொழில்களில் தங்களின் சிறந்த திறமையை நிரூபித்தவர்கள். இப்போது, அவர்கள் இருவரும் V Square நிறுவனத்தின் அடுத்தகட்டமாக V Square Entertainment விநியோக நிறுவனத்தினை ஒன்றிணைந்து துவங்கியுள்ளனர். இந்நிறுவனத்தின் முதல் திரைப்படமாக நடிகை அமலா பால் நடித்த “அதோ அந்த பறவை போல” படத்தினை விநியோகம் செய்யவுள்ளனர். V Square Entertainment சார்பில் நிறுவனர் மற்றும் தலைவர் ஸ்ரீ விஸ்வநாதன் இது குறித்து கூறியதாவது…, "சினிமா ஒரு டைம் பாஸ் அங்கமாகவும், உலகெங்கிலும் உள்ள பல பொழுதுபோக்கு ஆதாரங்களில் மிக முக்கியமான ஒன்றாகவும் கருதப்பட்டாலும், அது இந்திய துணை நாட...
NOISE and GRAINS வழங்கும், ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் “தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு !

NOISE and GRAINS வழங்கும், ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் “தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு !

Uncategorized, சினிமா
இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. Noise and Grains தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் “கண்ணம்மா என்னம்மா” ஆல்பம் பாடலின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அந்நிறுவனம் தயாரித்திருக்கும் அடுத்த ஆல்பம் பாடல் “தோட்டா”. இப்பாடலை பிரேம்ஜி, நித்யஶ்ரீ பாடியுள்ளனர். இப்பாடலில் ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிக்க, தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ளார். நேற்று இப்பாடலின் வெளியீட்டு விழா, சின்னத்திரை பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் பிக்பாஸ் புகழ் ராஜு, அபிராமி, ஜூலி, சக்ரவர்த்தி, கேப்ரியல்லா, உட்பட பல பிர...
ஜீ5 தனது வித்தியாசமான படைப்புகளால், தொடர்ந்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது. ஜீ5 ஒரிஜினலின் சமீபத்திய வெளியீடான ‘அனந்தம் மற்றும் கார்மேகம்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது !

ஜீ5 தனது வித்தியாசமான படைப்புகளால், தொடர்ந்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது. ஜீ5 ஒரிஜினலின் சமீபத்திய வெளியீடான ‘அனந்தம் மற்றும் கார்மேகம்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது !

சினிமா
ஜீ5 அதன் தனித்துவமான கவர்ச்சிமிகு ஒரிஜினல்கள் மூலம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. கச்சிதமான உருவாக்கத்தில், சிறந்த உள்ளடக்கத்துடன் கூடிய தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்குவதில் சிறந்த தளமாக ஜீ5 இயங்கி வருகிறது. தர்புகா சிவாவின் ‘முதல் நீ முடிவும் நீ’ மற்றும் IMDb இன் ‘டாப் தமிழ் வெப் சீரிஸ்’ பட்டியலில் இடம் பெற்ற 7-எபிசோட் கொண்ட தொடரான, நடிகர் விமல் நடித்த “விலங்கு” ஆகியவற்றின் மாபெரும் வெற்றிகளுடன்,  ஓடிடி இயங்குதளத்தின் இலக்கணமாக, அடையாளமாக ஜீ5 புகழ் பெற்றுள்ளது. இத்தளத்தின் சமீபத்திய வெளியீடுகளான ஏப்ரல் 2022 இல் பிரீமியர் செய்யப்பட்ட ‘அனந்தம்’ மற்றும் ‘கார்மேகம்’ வெளியான நாளிலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் ப்ரியாவின் அனந்தம் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் விருப்பமிகு தொடராக மாறியுள்ளது, பார்வையாளர்கள் இதன் சென்...
அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவில் ஒரு பெரிய முயற்சியை மேற்கொள்கிறது; பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் இணை-தயாரிப்புகளின் அதன் மிகப்பெரிய உள்ளடக்க பலகையை அறிவிக்கிறது

அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவில் ஒரு பெரிய முயற்சியை மேற்கொள்கிறது; பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் இணை-தயாரிப்புகளின் அதன் மிகப்பெரிய உள்ளடக்க பலகையை அறிவிக்கிறது

சினிமா
மும்பை, இந்தியா -28 ஏப்ரல், 2022- அமேசான் ப்ரைம் வீடியோ , இந்தியாவில் அதன் முதல் ப்ரைம் வீடியோ ப்ரெசெண்ட்ஸ் இண்டியா காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சியில் , இந்தியாவில் இன்று வரையிலான அதன் மிகப் பெரிய பலகையை (ஸ்லேட்டை ) அறிமுகப்படுத்தி , அடுத்த 24 மாதங்களில் அது அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கும் ஒரிஜினல் தொடர்கள், ஒரிஜினல் திரைப்படங்கள் மற்றும் இணை-தயாரிப்புகள் இடையே ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் 40 க்கு அதிகமான புதிய தலைப்புகளை இன்று அறிமுகப்படுத்தியது . பல மொழிகளில் நுகர்வோர்களுக்கு சிறந்த மற்றும் சமீபத்திய திரைப்படங்களை கொண்டு வரும் அதன் யுக்தியை பலப்படுத்தும் வகையில் , ப்ரைம் வீடியோ புதிய பல வருட லைசென்சிங் டீல்கள் (தொழில் உரிமங்கள்) மற்றும் இந்தியாவின் சில மிகப் பெரிய மற்றும் மிக வெற்றிகரமான ஸ்டூடியோக்களுடனான இணை-தயாரிப்புகளை அறிவித்தது . இந்த சேவையில் நேரடியாக வெளியிடப்படவிருக்கும் ...
உலகப்புகழ் இயக்குநர் மஜித் மஜிதி பாராட்டில் அக்கா குருவி திரைப்படம் !

உலகப்புகழ் இயக்குநர் மஜித் மஜிதி பாராட்டில் அக்கா குருவி திரைப்படம் !

சினிமா
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, பி வி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது. உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக தான் இப்படம் உருவாகியுள்ளது. ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன் தங்கை என இரு குழந்தைகளின் கதையாக, மனதை உலுக்கும் அற்புத படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதி இசையமைத்துள்ளார். சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் ஒரிஜினல் இயக்குநர், உலகளவில் கொண்டாடக்கூடிய பல படைப்புகளை தந்த இயக்குநர் மஜித் மஜிதி இப்படத்தை பார்த்து விட்டு, பாராட்டு கடி...
புலவர்.செந்தலை.ந.கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தனுக்கு மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார்

புலவர்.செந்தலை.ந.கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தனுக்கு மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார்

Uncategorized, சினிமா
தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னை ஹீரோவாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற - சூலூர் கலைப்பித்தனுக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார். புலவர்.செந்தலை கவுதமனுக்கு 69 வயதாகிறது. சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார். சூலூர் கலை பித்தனும் 1983 மற்றும் 1986-ஆம் வருடங்களில் நடிகர் சிவகுமாரை வைத்து 2 படங்கள் எடுத்தவர் (கண்ணத் தொறக்கணும் சாமி, சாட்டை இல்லாத பம்பரம் என்ற படங்கள்) அவர் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். பேருந்தில் சலுகை கட்டிணத்தில் சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ரூ.75,000/- மதிப்புள்ள TVS 100 வாங்கி நேற்று பரிசளித்தார் நடிகர் சிவகுமார்....
பயணிகள் கவனிக்கவும்- திரைவிமர்சனம்

பயணிகள் கவனிக்கவும்- திரைவிமர்சனம்

சினிமா
பயணிகள் கவனிக்கவும், இந்த வாக்கியம் பஸ், ட்ரெயின் , யுவர் அட்டேஷன் ப்ளீஸ் என பார்த்து கேட்டு இருப்போம் . நம் வாழ்க்கையில் இந்த வாக்கியத்தை எப்படி கடந்து போகமுடியதோ அதேபோல தான் இந்தப்படமும், இதில் வரும் கதாபாத்திரங்களையும் நாம் கடந்து போக முடியாது .சரி படத்துக்குள் பயணிப்போம் . காது கேட்காம ,பேச முடியாத தம்பதிகளாக விதார்த், லட்சுமி தன் இரு குழந்தைகளுடன் சந்தோஷமாய் வாழ்கிறார்கள் . தங்களுக்கு உள்ள குறைகளை பற்றி கவலை படாமல் இருவரும் வேலை செய்து தங்களுடைய பசங்களுடைய ஆசைகளை நிறைவேத்துறாங்க...இது ஒரு பக்கம் இருக்க துபாயில் வேலை பார்க்கும் கருணாகரன் லீவுக்காக சென்னை வராரு .அவரு எப்பவும் சோசியல் மீடியா அப்டேட் பண்ணனும் என்கிற ஆர்வத்துலேயே இருப்பாரு. வந்த இடத்துல காதலும் ஏற்படுது ..... விதார்த்யுடைய பெண்ணுக்கு உடம்பு சரியில்லாம போகுது . இரண்டுநாள் தூக்கம் இல்லாம பார்த்துக்கொண்ட அவர் மூணாவது ந...