Saturday, June 15

பயணிகள் கவனிக்கவும்- திரைவிமர்சனம்

பயணிகள் கவனிக்கவும், இந்த வாக்கியம் பஸ், ட்ரெயின் , யுவர் அட்டேஷன் ப்ளீஸ் என பார்த்து கேட்டு இருப்போம் . நம் வாழ்க்கையில் இந்த வாக்கியத்தை எப்படி கடந்து போகமுடியதோ அதேபோல தான் இந்தப்படமும், இதில் வரும் கதாபாத்திரங்களையும் நாம் கடந்து போக முடியாது .சரி படத்துக்குள் பயணிப்போம் .

காது கேட்காம ,பேச முடியாத தம்பதிகளாக விதார்த், லட்சுமி தன் இரு குழந்தைகளுடன் சந்தோஷமாய் வாழ்கிறார்கள் . தங்களுக்கு உள்ள குறைகளை பற்றி கவலை படாமல் இருவரும் வேலை செய்து தங்களுடைய பசங்களுடைய ஆசைகளை நிறைவேத்துறாங்க…இது ஒரு பக்கம் இருக்க துபாயில் வேலை பார்க்கும் கருணாகரன் லீவுக்காக சென்னை வராரு .அவரு எப்பவும் சோசியல் மீடியா அப்டேட் பண்ணனும் என்கிற ஆர்வத்துலேயே இருப்பாரு. வந்த இடத்துல காதலும் ஏற்படுது ….. விதார்த்யுடைய பெண்ணுக்கு உடம்பு சரியில்லாம போகுது . இரண்டுநாள் தூக்கம் இல்லாம பார்த்துக்கொண்ட அவர் மூணாவது நாள் மெட்ரோ ட்ரெய்ன்ல வேலைக்கு போறாரு … அசதியில சீட்டுலேய படுத்து தூக்குறாரு ,பலரும் அவர் குடிச்சிட்டு போதைலதான் இருக்காருன்னு சிரிக்குறாங்க….அதே கம்பாட்ர்மென்ட்ல இருக்குற கருணாகரன் அவர் படுத்திருப்பதை மொபைலில் போட்டோ எடுத்து friendக்கு அனுப்பி facebook update பண்ணுறாரு . அவ்வளவுதான் social mediaல பல விதமான மீம்ஸ்யுடன் வந்ததோட நியூஸ் சேனல்களேயும் விதார்த் போட்டோ வெளியாகுது .
இதனால் அவருக்கு வேலை போய் வெளிய போக முடியாம, தப்பே செய்யாம தண்டனையும் அனுபவிக்கிறார் . ஆர்வக்கோளாறா, உண்மை தெரியாம யாரோ ஒருவரால் எடுக்கிற ஒரு போட்டோவால அது சம்பந்த பட்டவர் எப்படி பாதிக்கப்படுகிறார்,அதே போல போட்டோ எடுத்தவரும் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதை மீதி படத்திற்குள்ள பயணித்தால் உங்களுக்கு தெரியும் .

விதார்த்தின் எளிதான நடை , உடை ,சிரிப்பு , ஒரு பக்கம் உடனே இவை அனைத்தும் காணாமல் போகும்போது ஏற்படும் வேதனை , சகிப்புத்தன்மை , மன்னிப்பு சூப்பர் . எழிலன் இந்த படத்தின் நடிப்பில் அழகன் ஆக இருக்கீங்க வாழ்த்துக்கள் .அளவான நடிப்பு, பேச முடியாவிட்டாலும் தன் நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கும் லட்சுமிக்கு பாராட்டுக்கள் .

அடுத்து கருணாகரன் ஆர்வம்,பயம், பதட்டம், பிரச்சனையை வெளிய சொல்லமுடியுமா அவருக்கு ஏற்படும் தவிப்பு என அவருக்கு சரியாக பொருந்தும் கதாபாத்திரம். ஒரு போட்டோவி னால இவ்வளவு பிரச்சனையா? என அவரின் பதட்டம் நமக்கும் வருகிறது . அதே போல , அவங்களை போலவே மாசம் சங்கரின் நடிப்பும் அழகா இருக்கு . தமிழ் திரையில நல்ல படங்கள் அமைய வாழ்த்துகள். மற்றும் கவிதாலயா கிருஷ்ணன் , , பிரேம் மற்றும் படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரங்களாகவே மாறி இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. நடிகர்கள் கதாபாத்திரங்களாவது மாறுவது அவ்வளவு எளிதல்ல, அப்படியும் மாறி படம் பார்ப்பவர்களை அவர்களுக்குளேயே மாற வைப்பது அதனினும் அரிது . கதைக்காக பங்களித்து மனதில் இடம் பிடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள் .

மொழி படம்போல மீண்டும் வருமா என்கிற சந்தேகத்தை, ஆர்வத்தை பூர்த்தி செய்ய முயற்சித்ததோடு நம் கைக்குள் இருக்கும் ஒரு mobile phone ஐ தவறாக பயன்படுத்தினால் ஏற்படும் விளைவு என்ன? என்பதை எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் ,

படம் பார்த்தவர்களுக்கு, பயணிகள் கவனிக்கவும்  என்ற வாக்கியம் கேட்டாலோ, பார்த்தாலோ , இந்த படம் மட்டும் ஞாபகம் வருவதோடு , உஷரா இருங்க என்ற எண்ணமும் கூடவே வரும் .இந்த திரைப்படத்தை ஆஹா OTTல் பார்த்து ரசிக்கலாம்.

Spread the love