Monday, June 1

சினிமா

நடிகை ஷிவானி ராஜசேகர் ‘ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ பட்டத்தை பெற்று, ‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்காக 31 போட்டியாளர்களுடன் போட்டியிடவுள்ளார் ! .

நடிகை ஷிவானி ராஜசேகர் ‘ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ பட்டத்தை பெற்று, ‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்காக 31 போட்டியாளர்களுடன் போட்டியிடவுள்ளார் ! .

சினிமா
நடிகர்கள் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் ஆகியோரின் மூத்த மகளான நடிகை ஷிவானி ராஜசேகர், மிஸ் இந்தியா போட்டியில் தமிழகம் சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 30, 2022 அன்று அவர் ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதில் அனைவரின் கவனத்தை ஈர்த்த வகையில் இப்போது, அவர் மிஸ் இந்தியா கிரீடத்திற்காக போட்டியிடும் முதல் 31 போட்டியாளர்களில் ஒருவராக போட்டியிடவுள்ளார். நடிகை ஷிவானி ராஜசேகர் தமிழ் சினிமாவில், நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான “அன்பறிவு” படத்தில் அறிமுகமானார். அவரது நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பரவலான பாராட்டுக்களை பெற்றது. ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக வலம் வரும் நடிகை ஷிவானி ராஜசேகர் நடிப்பில், தற்போது பல படங்கள் தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது அவர...
SUPERB CREATIONS ராஜகோபால் இளங்கோவன் வழங்கும்,இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில்,   “வெள்ளிமலை” டீசர் வெளியானது !

SUPERB CREATIONS ராஜகோபால் இளங்கோவன் வழங்கும்,இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில்,   “வெள்ளிமலை” டீசர் வெளியானது !

சினிமா
பழங்காலத்திலிருந்தே, உயிர்க்கொல்லி நோய்களைக் கூட இலைகளின் சாற்றால் குணப்படுத்தும் இயற்கை மருந்துகள், அற்புத குணப்படுத்தும் சக்திகளின் பூமி என்று தமிழ்நாடு எப்போதும் போற்றப்படுகிறது. துறவி போகர் (போகநாதர்) போன்ற சித்தர்கள் வாழ்ந்த தமிழ்நாடு அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது, அவர்களின் மருந்தியல் இன்றளவிலும் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இன்றைய மருத்துவத்திற்கு கோரக்கர், புலிப்பாணி, அகத்தீசர் போன்ற சித்தர்கள் அளித்த  பங்களிப்பு மறுக்கமுடியாதது, அவர்கள் வழங்கிய பூர்ண லேகியம் மற்றும் சொர்ணம் ஆகியவை சமகால உலகில் இயற்கை மருந்துகளின் அடித்தளமாக உள்ளன. இந்த துறவிகள் தந்த பெரும் இயற்கை மருந்துகளின் பங்களிப்பால் நாம் ஆசீர்வதிக்கப்பட்ட போதிலும், தற்போது செயற்கை மருந்துகளுக்கு அடிமையாகிவிட்டோம், இது ஒரு நோயைக் குணப்படுத்தும் பெயரில் மற்றொரு நோயை தான்  தூண்டுகிறது. வெள்ளிமலை, திரைப்படம் சித்தர...
விசித்திரன் திரைப்படத்தை பார்த்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் திரை பிரபலங்கள் நடிகர் ஆர் கே சுரேஷ்க்கு பாராட்டு.

விசித்திரன் திரைப்படத்தை பார்த்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் திரை பிரபலங்கள் நடிகர் ஆர் கே சுரேஷ்க்கு பாராட்டு.

சினிமா
இயக்குனர் பாலா அவர்களின் தயாரிப்பில், இயக்குனர் பத்மகுமார் இயக்க நடிகர் ஆர் கே சுரேஷ் கதாநாயகனாகவும், பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, மாரிமுத்து, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்து GV பிரகாஷ் இசையமைத்த “விசித்திரன்” திரைப்படத்தை படக்குழு சிறப்பு காட்சியாக படம் வெளியிடுவதற்கு முன்பே திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு திரையிட்டது. படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, தொழிநுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, குறிப்பாக நடிகர் ஆர் கே சுரேஷின் “மாயன்” என்ற கதாபாத்திரத்தை, கதையின் நாயகனாக ஏற்று மிக சிறப்பாக நடித்ததை வியந்து இயக்குனர் சங்கம் வெகுவாக பாராட்டியது. ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே இயக்குனர் சங்கத்திற்கு திரையிடப்பட்ட முதல் படம் விசித்திரன் ஆகும். திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர் கே செல்வமணி பேசுகையில், தன்னையே விதையாக்கி ஒரு மரமாக முழைக்க செய்வது தான் முதல் முயற்சி தான் இந்த சினிமா,...
விமல் நடிக்கும் ‘தெய்வ மச்சான்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விமல் நடிக்கும் ‘தெய்வ மச்சான்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் 'தெய்வ மச்சான்' ஃபர்ஸ்ட் லுக் நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு 'தெய்வ மச்சான்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு காட்வின் இசை அமைக்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மார்ட்டின் மற்றும...
“இவ்வளவு அழுத்தமான ஒரு திரைப்படத்தில் நான் நடிப்பேன் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததே இல்லை ‘ சாணி காயிதம் திரைப்பட கதாபாத்திரம் பற்றி  கீர்த்தி சுரேஷ்

“இவ்வளவு அழுத்தமான ஒரு திரைப்படத்தில் நான் நடிப்பேன் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததே இல்லை ‘ சாணி காயிதம் திரைப்பட கதாபாத்திரம் பற்றி கீர்த்தி சுரேஷ்

சினிமா
“இவ்வளவு அழுத்தமான ஒரு திரைப்படத்தில் நான் நடிப்பேன் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததே இல்லை 'சாணி காயிதம் திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி பகிர்ந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் செல்வராகவனை நடிகராக அறிமுகப்படுத்தியதோடு, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மிக அழுத்தமான படமாக 'சாணிக்காயிதம்' திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் செல்வராகவனுடன் திரையை பகிர்ந்து கொள்ளும் நடிகை கீர்த்தி சுரேஷ், இப்படத்தில் ‘தலைமுறை தலைமுறையாக, அநீதி திணிக்கப்படும் குடும்பத்தில் சிக்கி தவிக்கும் பொன்னி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்த பழிவாங்கும் க்ரைம் த்ரில்லரில் கீர்த்தி ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பது பார்வையாளர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். இந்த கதாபாத்திரத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் செய...
கன்னித்தீவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

கன்னித்தீவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

சினிமா
நான்கு பெண்களை மைப்படுத்தி வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘கன்னித்தீவு’. இப்படத்தை சுந்தர் பாலு இயக்கி இருக்கிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி என நான்கு பேர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ் பிரதாப் இசையமைக்கும் இப்படத்தை கிருத்திகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான போராடி வா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று வருகிறது....
மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா
மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள். சிறிய இடைவெளிக்கு பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் மா கா பா ஆனந்த்,,பக்ஸ், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா , கே பி ஒய் பாலா, 'மைக்செட்' அபினாஷ், நடிகை திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் பிரம்மாண்டமாக பொருட்செலவில் தயா...
LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும்  SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து வழங்கும், அனிருத் ரவிசந்தர் இசையில்,நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்பட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது !

LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும்  SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து வழங்கும், அனிருத் ரவிசந்தர் இசையில்,நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்பட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது !

சினிமா
பல ஆண்டுகளாக, ஒரு படத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்வதில் பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன  என்பது  திரைத்துறையில் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஒரு ஆல்பம் வெற்றி பெற்றால், அது படத்தின் 50% வெற்றிக்கு முன்னதாகவே உத்தரவாதம் அளித்து விடுகிறது, ஏனெனில் அது படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய கட்டத்தில் அனைவரின் கவனத்தை ஈர்க்கிற அம்சமாகும். மேலும், அனிருத் ரவிச்சந்தர் போன்ற இளைஞர்களின் அடையாளமாக விளங்கும் இசையமைப்பாளரின்  உணர்வு பூர்வமான இசையில், ஆல்பம் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் என்பது உறுதி. சிவகார்த்திகேயனுடனான அவரது முந்தைய ஆல்பங்கள் திரையுலகில் மறுக்கமுடியாத சார்ட்பஸ்டர்களாக பாராட்டப்பட்ட நிலையில், இருவரின்  கூட்டணியில் வரவிருக்கும் திரைப்படமான ‘டான்’ ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை குவித்துள்ளது.  முதல் சிங்கிள் பாடலான 'ஜலபுலஜங்கு', கல்லூரி மாணவர்களிடம்  திருவிழா கொண்டாட்டமாக மாறி...
மெகா ஸ்டார் சிரஞ்சீவி -சல்மான் கான் இருவரையும் திரையில் நடனமாட வைக்கும் பிரபுதேவா

மெகா ஸ்டார் சிரஞ்சீவி -சல்மான் கான் இருவரையும் திரையில் நடனமாட வைக்கும் பிரபுதேவா

சினிமா
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் 'காட்பாதர்' படத்திற்காக அப்படத்தின் நாயகன் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நாட்டியத்தை 'நடனப்புயல்' பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்கான பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'காட்பாதர்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இருவரும் இணைந்து திரையில் நடனமாடினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதால், இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடும் வகையில் பாடல் ஒன்றை...
பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை’.

பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை’.

சினிமா
நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் 'தடை உடை' என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவி பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'தடை உடை'. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆதிஃப் இசை அமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, சண்டைக்காட்சிகளை கணேஷ் அமைக்கிறார். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் தயாராகும் 'தடை உடை' படத்தை முத்ராஸ் பிலிம் ப...