Thursday, June 4

சினிமா

‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ஹரோம் ஹரா’

‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ஹரோம் ஹரா’

சினிமா
'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்திற்கு 'ஹரோம் ஹரா' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த தலைப்பிற்கான பிரத்யேக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். 'செஹரி' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹரோம் ஹரா'. இதில் 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். 1989 காலகட்டத்திய பீரியட் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதனை ஜி. ரமேஷ்குமார் வழங்குகிறார். இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போது, 'அக்டோபர் 31ஆம் தேதி அன்று மாஸா...
நித்தம் ஒரு வானம் படம் பார்த்தப்பிறகு , பார்வையாளர்களிடத்தில் நேர்நிலையான தாக்கம் ஏற்படும் – இயக்குநர் ரா. கார்த்திக் நம்பிக்கை

நித்தம் ஒரு வானம் படம் பார்த்தப்பிறகு , பார்வையாளர்களிடத்தில் நேர்நிலையான தாக்கம் ஏற்படும் – இயக்குநர் ரா. கார்த்திக் நம்பிக்கை

சினிமா
நித்தம் ஒரு வானம் படத்தின் படபிடிப்பின் போது பனி அதிசய சம்பவங்கள் நடைபெற்றது - நடிகர் அசோக் செல்வன் வியப்பு வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும், வாழ்வீயலையும் மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னை வடபழனியிலுள்ள பிரபல தனியார...
‘தக்ஸ்’ திரைப்பட இசை ஆல்பத்தை, சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.

‘தக்ஸ்’ திரைப்பட இசை ஆல்பத்தை, சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.

சினிமா
அதிரடி ஆக்சனுடன், ரத்தமும் சதையுமாக, உருவாகியுள்ள 'தக்ஸ்’ திரைப்படத்தின் இசை ஆல்பத்தினை, புகழ்மிக்க இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறது. இந்திய திரையுலகில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கோபால் இயக்கியுள்ள 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' திரைப்படம் இந்தி உட்பட பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'RRR', 'விக்ரம்', 'டான்', 'வெந்து தணிந்தது காடு' உள்ளிட்ட வெற்றிப் படங்களை விநியோகம் செய்ததோடு, 'மும்பைகார்' என்ற இந்திப் படத்தைத் தயாரித்துள்ள ரியா சிபு, HR Pictures பேனரின் கீழ் இந்த ஆக்சன் திரைப்படத்தை தயாரித்துள்ளார். 'புலி', 'இருமுகன்', 'ஏபிசிடி', 'சாமி ஸ்கொயர்' போன்ற பெரிய திரைப்படங்களையும், சுமார் 100 க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களையும் விநியோகித்த சிபு தமீன்ஸின் மகள் தான் தயாரிப்பாளர் ரியா சிபு. 'தக்ஸ்' திரைப்படத்தில்...
விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் D. அருளானந்து வழங்கும் ஃபிலிம்மேக்கர் ஹரி ஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.

விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் D. அருளானந்து வழங்கும் ஃபிலிம்மேக்கர் ஹரி ஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.

சினிமா
விஷன் சினிமா ஹவுஸ்ஸின் ரிச் இந்தியா டாக்டர் D. அருளானந்து தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று (30.10.2022) தொடங்கியது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நட்பின் அடிப்படையில் படத்தின் முதல் ஷாட்டை க்ளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார். நடிகர் ரியோ ராஜ் கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கும் மேலாக இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் அர்ப்பணிப்புடன் வலம் வருகிறார். இந்தக் கதை உண்மையான அன்பு மற்றும் பல உணர்ச்சிகரமான தருணங்களை உள்ளடக்கியது ஆகும். இந்தப் படம் ஆண் மற்றும் பெண் இடையேயான காதல் மற்றும் உறவுகளில் மட்டும் கவனம் குவிக்காமல் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான எல்லையற்ற அன்பு குறித்தும் பேசுகிறது. நல்ல உணர்வைத் தரக்கூ...
காலங்களில் அவள் வசந்தம்  – விமர்சனம்

காலங்களில் அவள் வசந்தம் – விமர்சனம்

சினிமா
                                                                                  ஷ்யாம் என்ற கதாபாத்திரத்தில் படத்தின் நாயகனாய் கௌசிக் ராம் நடித்திருக்கிறார். இவர் திரை படங்களில் வருவது போன்றே யதார்த்தமான இயல்பு  வாழ்க்கையிலும் காதல் வரும் என்று நினைக்கிறார்.திரைப்படங்களில்  பார்ப்பதை  போலவே  காதலிக்க  வேண்டும் என்று லிஸ்ட் எடுத்து வைத்துக்கொண்டு இருக்கும் நிலையில் ஹிரோஷினி என்ற பெண்ணிடம் தன் காதலை சொல்லுகிறார்,  ஆனால் அஞ்சலியுடன்  திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது வெள்ளி திரையில் வருவதைப் போலவே தன்  இல்லற யதார்த்த திருமண வாழ்க்கையினையும்   வாழ நினைக்க்கும்  நாயகனுக்கு நிஜ வாழ்க்கை இதுதான் என்று உணர  வைக்கிறார் நாயகி அஞ்சலி .ஆனால் இதனால்  அஞ்சலிக்கும் கௌசிக்கிற்கும் மன முறிவு  ஏற்பட்டு  விவாகரத்து வரை செல்கிறது. இந்த நிலையில்   ஹிரோஷினியை கௌசிக் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிற...
‘டபுள் எக்ஸ்எல்’ இந்திப்படம் மூலம் பாலிவுட்டில் நாயகனாக கால் பதிக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா !!

‘டபுள் எக்ஸ்எல்’ இந்திப்படம் மூலம் பாலிவுட்டில் நாயகனாக கால் பதிக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா !!

சினிமா
தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் மஹத் ராகவேந்திரா, பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி நடிப்பில், இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் 'டபுள் எக்ஸ்எல்' படம் மூலமாக இந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார்.   அஜித்குமார் நடிப்பில் 'மங்காத்தா' படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான மஹத், பின் 'பிக்பாஸ்' மூலம் தமிழகமெங்கும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அவரது நடிப்பில் வெளியான 'ஈமோஜி' வலைத்தொடர் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை குவித்தது. ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பில் முத்திரை பதித்து வரும் மஹத், தமிழில் நாயகனாக சில திரைப்படங்களில் நடித்து வரும் வேளையில், அதிரடியாக பிரமாண்டமான இந்தி திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். உலகில் அனைவருக்கும் தன் உடல் மேல் விமர்சனங்கள் இருக்கும். தான் அழகில்லை என்ற எண்ணம் இருக்கும் அதனை உடைக்கும் வகை...
Padavettu Movie Review

Padavettu Movie Review

சினிமா
ஒரு பழமையான வீட்டில் ரவி (நிவின்பாலி ) தனதுஅத்தையான புஷ்பாவுடன் (ரம்யா சுரேஷ்) வாழ்ந்து வருகிறார்  ரவி (நிவின் பாலி) ஒரு தடகள வீரர் மற்றும் ஸ்போர்ட்ஸ் நபராக இருந்தவர், ஆனால் ஒரு விபத்தின் காரணமாக அவரது வாழ்க்கை தடம் மாறுகிறது அவர் ஒரு சோம்பலான நபராக மாறி, அவரது சிறிய வீட்டில் விளையாடுவது மற்றும் எதையும் செய்யாது சும்மா உட்கார்ந்திருப்பது என்றே காணப்பட்டார் அவரது பழமையான வீட்டைப் புதுப்பித்து தருவதன் மூலம் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பை அங்குள்ள ​​எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்கிறார்கள், அதன்படி (ஷம்மி திலகன்) தலைமையிலான கட்சி ரவியின் வீட்டை புனரமைத்து,அந்த வீட்டின் முன்பாக பலகையை நிறுவுகிறது.அதன் பின் ரவியின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.அந்த திருப்பம் ரவியின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன என்பதே  படத்தின் எஞ்சிய கதை. கதையின்...
அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லயே’ படத்திற்காக 3.5 கோடி மதிப்பிலான லண்டன் சிறையை 2.5 ஏக்கரில் செட் அமைத்திருக்கிறார்கள்

அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லயே’ படத்திற்காக 3.5 கோடி மதிப்பிலான லண்டன் சிறையை 2.5 ஏக்கரில் செட் அமைத்திருக்கிறார்கள்

சினிமா
ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண் விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லயே' படத்திற்காக 3.5 கோடி மதிப்பிலான லண்டன் சிறையை 2.5 ஏக்கரில் செட் அமைத்திருக்கிறார்கள் இயக்குநர் விஜய் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து வரக்கூடிய 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், லண்டனில் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக லண்டன் சிறையின் பிரதியை செட் அமைத்துள்ளனர். ராமலிங்க மேஸ்திரி உதவியுடன் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார். இந்த ஷெட்யூலில் ...
லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்..

லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்..

சினிமா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் லைகா உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்..அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது .இத்தகவலை லைகா தலைமை நிர்வாகி தமிழ் குமரன் தெரிவித்தார்...
ஹரிஷ் கல்யாண் திருமண நிகழ்வு புகைப்படங்கள்

ஹரிஷ் கல்யாண் திருமண நிகழ்வு புகைப்படங்கள்

சினிமா
பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா உதயகுமார் திருமணம் பாரம்பரிய முறையில் சென்னையில் இன்று நடைபெற்றது, மணமகன் ஹரிஷ் கல்யாண் பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்து எழிலான தோற்றத்துடன் காணப்பட்டார் மணமகள் நர்மதா சிவப்பு நிற புடவையில் அழகுற காணப்பட்டார் இந்த திருமணம் குறித்த தகவல்களையும் ஹரிஷ்கல்யாண் முன்பே அறிவித்திருந்தார் இன்று நடைபெற்ற திருமணம் குறித்த படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் படங்கள் வைரலாகி இருந்தது தன்னுடைய திருமணம் ,பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் காதல் திருமணம் அல்ல என்றும் ஹரிஷ் கல்யாண் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இருமனம் இணைந்த இந்த திருமண வாழ்வு சிறப்புடன் அமைய , அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.    ...