Thursday, June 4

சினிமா

மீண்டும் படம் இயக்கும் தினந்தோறும் நாகராஜ். Q சினிமாஸ் சார்பில் சசிகுமார் R தயாரிக்கிறார்.

மீண்டும் படம் இயக்கும் தினந்தோறும் நாகராஜ். Q சினிமாஸ் சார்பில் சசிகுமார் R தயாரிக்கிறார்.

சினிமா
”மாற்றம் ஒன்றே மாறாதது” என்பது எத்தனை சத்தியமானது என்பதற்கு இயக்குனர் ‘தினந்தோறும்’ நாகராஜின் வாழ்க்கையும் உதாரணம். 1998 ஆம் ஆண்டு இவர் இயக்கிய படம் ‘தினந்தோறும்’. முரளி – சுவலட்சுமி நடித்த இந்த படம் வெளிவந்தபோது பத்திரிகை உலகம் கொண்டாடி தீர்த்தது. இந்தபடம் வெளிவந்த ஒரு வாரத்திற்குள் அன்றை முன்னணி தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள் நாகராஜுடன் இணைந்து பணியாற்ற தூதனுப்பினர். இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘வானம் நீதானா அந்த நிலவும் நீதானா’ என்ற பாடல் பெரிய ஹிட்டானது. தெலுங்கில் ’மனசிச்சி சூடு’ பெயரில் படம் ரீமேக்கானது. படத்தின் வெற்றியை தொடர்ந்து நாகராஜின் பெயருடன் படத்தின் பெயரும் ஒட்டிக்கொண்டு ‘தினந்தோறும்’ நாகராஜ் ஆனார். என்னசெய்வது காலத்தின் வெள்ளத்தில் நாகராஜ் திசை மாற, தொடர்ந்து படங்கள் இயக்க முடியாமல் போனது. பிறகு கெளதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க படங்களுக்கு வசனம் எழுதிய...
“ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

“ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

சினிமா
VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  சார்பில்  D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ்நடிப்பில், இயக்குநர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் உருவாகும்  ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG). விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக அரங்கேறியது.   இசை, நடன கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்ற இவ்விழாவினில்.. நடிகர் தயாரிப்பாளர் RK சுரேஷ் பேசியதாவது... நடிகை சன்னி   லியோன்  மனிதநேயமிக்க  நபர்.  இந்த படம் பற்றி சதீஷ் என்னிடம் கூறியபோது, ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து அம்சமும் இந்த படத்தில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. டார்க் காமெடி திரைப்படங்கள் இப்போது அதிகமாக  வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் ஹாரர் உடன் கலந்த டார்க் காமெடி திரைப்படம். படம் ...
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்தி படம் ‘மாணிக்’

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்தி படம் ‘மாணிக்’

சினிமா
எண்டேமால் ஷைன் இந்தியா மற்றும் நட்மெக் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘மாணிக்’ இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான எண்டேமால் ஷைன் இந்தியா எனும் நிறுவனம், நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் ' மாணிக்' எனும் புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இரண்டு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டிருக்கிறது. எண்டேமால் ஷைன் இந்தியா நிறுவனம், நட் மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தங்களின் அடுத்த தயாரிப்பாக 'மாணிக்' என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தி மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில், உளவியல் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’, ‘திட்டம் இரண்டு’, ‘கனா’, ‘வடசென்னை’ போன்ற தமிழ் படங்களிலும், ‘சுழல்’ எனும் வலைதள தொ...
குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து ‘ஜெய்பீம்’ புகழ் மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம்

குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து ‘ஜெய்பீம்’ புகழ் மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம்

சினிமா
விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல் முறையாக தனி கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் தயாரித்து இருக்கின்றனர். படத்தில் மணிகண்டன் உடன் முக்கிய கதாபாத்திரங்களில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார். மேலும் படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேதுமாதவன், படத்தொகுப்பை பரத...
‘டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்

‘டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்

சினிமா
18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்த திரைப்படத்தை 'வத்திக்குச்சி' படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ் ப...
ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தாவின் அர்ப்பணிப்பு!

ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தாவின் அர்ப்பணிப்பு!

சினிமா
நடிகை சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ ஹரி- ஹரிஷ் இயக்கத்தில் இந்த வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படம் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது என்பதை சமீபத்தில் வெளியான அதன் ட்ரைய்லர் காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது. படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ட்ரைய்லர், படத்தின் ஒரு வரி பற்றி கூறியுள்ளது. ட்ரைய்லரில் பார்த்த ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் த்ரில்லான பரபரப்புக் காட்சிகளை நாம் விரைவில் திரையரங்குகளில் காண இருக்கிறோம்.   படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குக் கிடைத்து வரும் நல்ல வரவேற்பால் மகிழ்ச்சியடைந்துள்ள சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென், இந்த அதிதீவிரமான சண்டைக் காட்சிகளில் சமந்தா நடித்துள்ளது குறித்து பகிர்ந்துள்ள...
நடிகை ஹன்சிகா மோத்வானி மும்பையச் சேர்ந்த தொழிலதிபரான சோஹேல் கதூரியாவை இந்த வருடம் டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்ய உள்ளார்!

நடிகை ஹன்சிகா மோத்வானி மும்பையச் சேர்ந்த தொழிலதிபரான சோஹேல் கதூரியாவை இந்த வருடம் டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்ய உள்ளார்!

சினிமா
நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் குறித்தான பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து அவர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்ய உள்ளார். தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற இருக்கிறது. ஹன்சிகா மோத்வானியின் 11-வது வயதில் இருந்தே இரண்டு குடும்பங்களும் நண்பர்களாக பழகி வருகின்றனர். இப்போது ஹன்சிகா மற்றும் சோஹேலின் குடும்பம் நண்பர்களாக இருந்து உறவுகள் என்ற வோறொரு புதிய பயணத்தைத் தொடங்க இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு நடிகை ஹன்சிகா தன்னுடைய நடிப்புத் தொழிலை விடாமல் தொடர்...
தியாகராஜன்இயக்கத்தில்  பிரஷாந்த் நடித்துவரும் அந்தகன் திரைப்படத்தில் அனிருத் மற்றும் விஜயசேதுபதி இணைந்து பாடியுள்ள “டோர்ரா புஜ்ஜி” பாடலுக்கு நடனம் அமைத்து இயக்க  பிரபுதேவா இசைந்துள்ளார்.

தியாகராஜன்இயக்கத்தில் பிரஷாந்த் நடித்துவரும் அந்தகன் திரைப்படத்தில் அனிருத் மற்றும் விஜயசேதுபதி இணைந்து பாடியுள்ள “டோர்ரா புஜ்ஜி” பாடலுக்கு நடனம் அமைத்து இயக்க பிரபுதேவா இசைந்துள்ளார்.

சினிமா
டாப்ஸ்டார் பிரஷாந்த் நடித்துவரும் அந்தகன் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன், தயாரித்து இயக்கி வருகிறார் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன். படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிகட்ட காட்சிக்காக “டோர்ரா புஜ்ஜி” என்ற பாடலை ராக்ஸ்டார் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் விஜயசேதுபதி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு நடனம் அமைத்து இயக்க நடனபுயல் பிரபுதேவா இசைந்துள்ளார். பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சி படமான உடனே அந்தகன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அந்தகன் படத்தை கலைப்புலி S தாணு அவர்கள் உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார்....
மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கும் ‘பெடியா’ திரைப்படத்தில்  புதுமையான கதாபாத்திரத்தினை ஏற்றுள்ளேன்-வருண் தவான்

மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கும் ‘பெடியா’ திரைப்படத்தில் புதுமையான கதாபாத்திரத்தினை ஏற்றுள்ளேன்-வருண் தவான்

சினிமா
வருண் தவான் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வணிக ரீதியான வெற்றி மற்றும் விமர்சகர்களின் பாராட்டு ஆகிய இரண்டையும் பெற்று வரும் நிலையில், சவால் மிக்க வேடங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். புதுமையான கதைக்களத்துடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திறப்படங்கள் மீதான அவரது தொடர் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கும் 'பெடியா' திரைப்படத்தின் டிரெயிலர். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த டிரெய்லரின் முக்கிய அம்சங்களாக நகைச்சுவை மற்றும் பிரமாண்ட வி எஃப் எக்ஸ் காட்சிகள் உள்ள நிலையில், அவற்றை மிஞ்சும் வகையில் அமைந்து அனைவரின் பேசுபொருளாக ஆகியிருப்பது வருண் தவானின் தோற்றம் மற்றும் நடிப்பு என்றால் அது மிகையாகாது. மனிதனாகவும் மிருகமாகவும் அவர் தோன்றும் காட்சிகளில் அவரத...
’யசோதா’ படத்தின் கதை நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நிச்சயம் மதிப்புமிக்கதாக அமையும்- நடிகை வரலட்சுமி சரத்குமார்!

’யசோதா’ படத்தின் கதை நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நிச்சயம் மதிப்புமிக்கதாக அமையும்- நடிகை வரலட்சுமி சரத்குமார்!

சினிமா
நடிகை சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’-வில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான இயக்குநர்களான ஹரி & ஹரீஷ் இந்தப் படத்தை இயக்க, மூத்த தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்த வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி ஐந்து மொழிகளிலும் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. ’யசோதா’ கதை கேட்டதும் என்ன நினைத்தீர்கள்? முதலில் இதுபோன்ற கதையும் கதாபாத்திரங்களும் எப்படி எழுதினார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதைப் பற்றி நான் இயக்குநர்களிடமும் கேட்டேன். ட்ரைய்லரில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் அமைதியாக இருக்கும். கதையின் போக்கில் தான் என்னுடைய எதிர்மறைத் தன்மை வெளிப்படும். எனக்கும் சமந்தாவுக்கும் இடையில் இருக்கும் உறவு பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டுவதாக அமையும். படப்...