Thursday, December 5

காலங்களில் அவள் வசந்தம் – விமர்சனம்

                                                                                 

ஷ்யாம் என்ற கதாபாத்திரத்தில் படத்தின் நாயகனாய் கௌசிக் ராம் நடித்திருக்கிறார். இவர் திரை படங்களில் வருவது போன்றே யதார்த்தமான இயல்பு  வாழ்க்கையிலும் காதல் வரும் என்று நினைக்கிறார்.திரைப்படங்களில்  பார்ப்பதை  போலவே  காதலிக்க  வேண்டும் என்று லிஸ்ட் எடுத்து வைத்துக்கொண்டு இருக்கும் நிலையில் ஹிரோஷினி என்ற பெண்ணிடம் தன் காதலை சொல்லுகிறார்,  ஆனால் அஞ்சலியுடன்  திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது வெள்ளி திரையில் வருவதைப் போலவே தன்  இல்லற யதார்த்த திருமண வாழ்க்கையினையும்   வாழ நினைக்க்கும்  நாயகனுக்கு நிஜ வாழ்க்கை இதுதான் என்று உணர  வைக்கிறார் நாயகி அஞ்சலி .ஆனால் இதனால்  அஞ்சலிக்கும் கௌசிக்கிற்கும் மன முறிவு  ஏற்பட்டு  விவாகரத்து வரை செல்கிறது. இந்த நிலையில்   ஹிரோஷினியை கௌசிக் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.   இறுதியில் கணவன் மனைவி  இணைந்தார்களா? என்பது தான் படத்தின் எஞ்சிய கதை

கௌசிக்ராம், அஞ்சலி இருவரும் முக்கிய கதாபாத்திரத்திலும்  மற்றும் ஹிரோஷினி,  சுவாமிநாதன், ஆர்.ஜெ.விக்னேஷ்காந்த் என பலரும்  நடித்துள்ளனர்.சினிமாவில் மிகவும்  ஆர்வமுள்ள கதாபாத்திரத்தில்  அறிமுக நாயகன் கெளசிக் பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார்.சினிமாவின் காதலுக்கும், நிஜ காதலுக்கும் உள்ள வேறுபாடுகள் புரியாத கணவனுக்கு  யதார்த்த வாழ்வினை உணர்த்தும் கேரக்டரில் அஞ்சலி நாயர் சிறப்பாக நடித்துள்ளார்

அறிமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் தன்னுடைய முதல் படத்தை இளைஞர்களை ஈர்க்கும் கதையுடன்  படமாக்கி உள்ளார். இயக்குநருக்கு பக்க பலமாய்  கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும், ஹரி எஸ்.ஆர்-ன் இசையும், லியோ ஜான்பாலின் படத்தொகுப்பும் அமைந்து கதையின் நகர்வுகளுக்கு சிறப்பாக துணை நின்றுள்ளன.

காலங்களில் அவள் வசந்தம் நிச்சயம் இளைஞர்களை கண்டிப்பாய்  கவரும்.

Spread the love