Tuesday, January 21

Padavettu Movie Review

ஒரு பழமையான வீட்டில் ரவி (நிவின்பாலி ) தனதுஅத்தையான புஷ்பாவுடன் (ரம்யா சுரேஷ்) வாழ்ந்து வருகிறார்  ரவி (நிவின் பாலி) ஒரு தடகள வீரர் மற்றும் ஸ்போர்ட்ஸ் நபராக இருந்தவர், ஆனால் ஒரு விபத்தின் காரணமாக அவரது வாழ்க்கை தடம் மாறுகிறது அவர் ஒரு சோம்பலான நபராக மாறி, அவரது சிறிய வீட்டில் விளையாடுவது மற்றும் எதையும் செய்யாது சும்மா உட்கார்ந்திருப்பது என்றே காணப்பட்டார் அவரது பழமையான வீட்டைப் புதுப்பித்து தருவதன் மூலம் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பை அங்குள்ள ​​எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்கிறார்கள், அதன்படி (ஷம்மி திலகன்) தலைமையிலான கட்சி ரவியின் வீட்டை புனரமைத்து,அந்த வீட்டின் முன்பாக பலகையை நிறுவுகிறது.அதன் பின் ரவியின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.அந்த திருப்பம் ரவியின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன என்பதே  படத்தின் எஞ்சிய கதை.

கதையின் நாயகனாய் நிவின் பாலி சோம்பேறியான விரக்தியடைந்த இளைஞன் என்னும் தோற்றத்திலும் பின் போராட்டகளத்தில் நிற்கும் இளைஞனாகவும் என இரண்டு பரிமாணங்களிலும் சிறப்பாக நடித்துள்ளர் . மற்றும் அதிதி பாலன் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் தன் பங்களிப்பை நிறைவாய் செய்துள்ளார் ஷம்மி திலகனுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் அவரும் நன்கு நடித்து ரசிகர்களின் மனதில் நிறைகிறார் ,

கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நட்சத்திர தேர்வுடன், சிறப்பான கதையினை, திறம்பட படஉருவாக்கம் செய்துள்ளார் இயக்குனர் லிஜு கிருஷ்ணா. கோவிந்த் வசந்தாவின் இசையும் , தீபக் மேனனின் ஒளிப்பதிவும் இயக்குனரின் கதையோட்டத்திற்க்கு வலு சேர்க்கின்றன

வாழ்வியலையும் தற்கால சமூக கட்டமைப்புக்குள் அரசியல் நகர்வுகளையும், ஒரு தனி மனிதனின் வாழ்கை நிகழ்வுகளோடு இணைத்து பின்னப்பட்டபட்ட கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்த படம் திரை ரசிகர்களை நிச்சயம் கவரும்

 

Spread the love