பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா உதயகுமார் திருமணம் பாரம்பரிய முறையில் சென்னையில் இன்று நடைபெற்றது, மணமகன் ஹரிஷ் கல்யாண் பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்து எழிலான தோற்றத்துடன் காணப்பட்டார் மணமகள் நர்மதா சிவப்பு நிற புடவையில் அழகுற காணப்பட்டார் இந்த திருமணம் குறித்த தகவல்களையும் ஹரிஷ்கல்யாண் முன்பே அறிவித்திருந்தார் இன்று நடைபெற்ற திருமணம் குறித்த படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் படங்கள் வைரலாகி இருந்தது
தன்னுடைய திருமணம் ,பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் காதல் திருமணம் அல்ல என்றும் ஹரிஷ் கல்யாண் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இருமனம் இணைந்த இந்த திருமண வாழ்வு சிறப்புடன் அமைய , அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.