நடிகை நயன்தாரா நடிக்கும் ‘லேடிசூப்பர் ஸ்டார் 75’*
*ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் வழங்கும்,
நீலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்
நடிகை நயன்தாரா நடிக்கும் 'லேடிசூப்பர் ஸ்டார் 75'*
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 'லேடி சூப்பர் ஸ்டார் 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தினை இயக்குநர் ஷங்கரின் முன்னாள் உதவியாளரான நீலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். மேலும் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
ஃபேமிலி என்டர்டெய்னர் படமான இது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கும். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்க...









