பாடுபட்டு போராடி பெற்ற சுதந்திர நாட்டில் சாதி என்னும் பெயரால் நம்மை நாமே அழித்துகொள்ளுவதை உணர்த்தும் படம், மேலும் “காதலுக்கு எதிரி சாதின்னா..அந்த சாதிக்கு எதிரி காதல்தான்டா..” என்ற வசனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான், முந்திரிக்காடு.சாதி வெறி நிறைந்த சமூகத்தில் நிகழும் ஆணவக்கொலைகளை பற்றி பேசும் இப்படத்தை இயக்குநர் மு. களஞ்சியம் இயக்கியுள்ளார்.

சாதியை உயிரென மதிக்கும் கிராமமொன்றில் சாதிய வெறிபிடித்த குழு .சாதி மாற்றி காதல் புரியும் காதலர்களை கொலை செய்கிறது, அந்த கிராமத்தில், சாதிய வேறுபாடுகளை கொண்ட ‘தெய்வம்’ என்ற பெண்ணுக்கும், மற்றொரு சாதி இளைஞன் செல்வாவிற்கும் இடையே இல்லாத காதலை இருப்பதாக சாதியவாதிகள் கூறுகின்றனர் ,சில இளைஞர்கள் சாதியை கட்டிக்காக்கும் பொறுப்பு நம்மளுடையதுதான் என்று வேலை வெட்டிக்கு போகாம இருக்கிறார்கள் ,அவர்கள் வராத காதலை வரவும் வைக்கிறார்கள் ,பின்பு தெய்வத்திற்கும் செல்லாவிற்கும் உண்மையிலேயே காதல் ஏற்படுகிறது . இதனால். அந்த சாதியவாதிகள் அந்த காதலர்களை அழிக்க நினைக்கின்றாகள் அவர்களின் திட்டம் நிறைவேறியதா? காதலர்கள் இணைந்தார்களா? இதுவே மீதி திரைக்கதை.
.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகர் மற்றும் இயக்குனருமான சீமான்,இந்த படத்தில், போலீஸ் அதிகாரியாக நன்கு நடித்துள்ளார் படத்தில் இவரது காட்சிகளும் வசனமும் படத்துக்கு பெரிய பக்கபலமாய் உள்ளது கதையின் மாந்தர்களாய் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளார்கள் ,ஹீரோ, ஹீராயின் அறிமுகமாக இருந்தாலும் நடிப்புல அப்படி தெரியாத வண்ணம் நடித்துள்ளார்கள்.குறிப்பாக ஹீராயினை சொல்லலாம் screen ல பாத்தவங்கள நேர்ல பார்க்கும்போது அவங்கள இவங்க என்று நினைக்க தோன்றும் வகையில் உள்ளார்கள் .
எழுத்தாளர் இமையம் எழுதிய பெத்தவன் சிறுகதையை அடிப்படையாக கொண்டு முந்திரிக்காடு திரைப்படத்தின் கதையினை உருவாக்கியுள்ளார்கள், தமிழகத்தில் நடக்கும் சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிரான கதையினை இயக்குனர் மு.களஞ்சியம் சமூக பார்வையுடன் நன்கு படமாக் கியுள்ளார் .இயக்குனரின் கதையோட்டத்துக்கு A .K.ப்ரியனின் இசையும், சிவசுந்தரின் ஒளிப்பதிவும் பெரிதும் உதவியுள்ளன .
இன்றைய சமூக வாழ்வியலில் உள்ள சில கறைகளை பற்றி பேசும் கதைதான் இந்த முந்திரிக்காடு .
