Friday, June 19

சினிமா

‘L.G.M’ படத்தின் Firstlook-கை பாராட்டிய எம். எஸ். தோனி

‘L.G.M’ படத்தின் Firstlook-கை பாராட்டிய எம். எஸ். தோனி

சினிமா
'L.G.M' படத்தின் Firstlook பாராட்டிய எம். எஸ். தோனி தோனி எண்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பான'L.G.M' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, ''இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியுடனும், 'L.G.M' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடனும் இருந்த தருணங்கள்.. என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள்'' என குறிப்பிட்டிருக்கிறார். 'எல். ஜி. எம்' படத்தின் ஒவ்வொரு புதிய தகவல்களும் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்பட வைத்திருக்கிறது. மேலும் புதிய தகவல்களுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். மைதானத்தில் 'கிரிக்கெட் மேதை' தோனியின் பரபரக்கும் கிரிக்கெட்டை கண்டு ரசித்தது முதல்... அவர் 'எல் ஜி எம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது வரை.. 'L.G.M'படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்க...
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாண்புமிகு முதல்வர் திரு. M.K. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாண்புமிகு முதல்வர் திரு. M.K. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

சினிமா, செய்திகள்
சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் விரைவில் அமைக்கப்படும் என்று தமிழ் சினிமாவிற்கு சிறப்பான ஒரு செய்தியை நேற்று சட்டசபையில் வெளியிட்ட மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K. ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.M.P. சாமிநாதன் அவர்களுக்கும் முதலில் எங்களின் மனமார்ந்த நன்றி. தமிழக ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை 2020-21-ம் ஆண்டுகளுக்கு பிறகு, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. 2022-ல் 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளன. இந்த வளர்ச்சி மேலும் தொடர்ந்து தமிழ் சினிமா துறை ரூபாய் 5,000 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யும் துறையாக விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தைகைய வளர்ச்சியை எட்ட முட்டுக்கட்டையாக இருப்பது, தமிழ் நாட்டில் ஸ்டூடியோக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே. த...
‘யாத்திசை’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

‘யாத்திசை’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சினிமா
'யாத்திசை' டிரெய்லர் வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தை ஏப்ரல் 21 அன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடுகிறது வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'யாத்திசை'. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் 'யாத்திசை'. வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெய்லர் மூலம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த இப்படம் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 'யாத்திசை' தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரியும், வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனலும் பெற்றுள்ளனர். இந...
நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி வெளியிட்ட ‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி வெளியிட்ட ‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சினிமா
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான 'எல்.ஜி. எம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை எம். எஸ் தோனி தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இசையமைப்பாளரும், இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'எல். ஜி. எம்'. இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஃபில் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி வரும் இப்படத்தின் தயாரிப்பாளரான விகாஸ் ஹசிஜா பேசுகையில், '' 'எல். ஜி. எம்' சிறப்பாக உருவாகி வருகிறது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பின்னணி வேலைகளைத் தொடங்கவிருக்கிறோம். தமிழ...
‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

சினிமா
பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'ப்ராஜெக்ட் கே' எனும் திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது படமாக்கப்பட்ட காணொளியின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டிருக்கிறது. படைப்புத்திறன் மிகு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'ப்ராஜெக்ட் கே'. 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் அதிக பொருட்செலவில் தயாராகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தை தனித்துவமான பாணியில் விளம்பரப்படுத்த திட்டமிட்ட படக் குழுவினர், இதன் ஒரு பகுதியாக 'ஃபிரம் ஸ்க்ராட்ச்' எனும் பெயரில் படத்தின் முன் தயாரிப்பு பணிகளின் காணொளியை வெளியிட்டனர். இந்த காணொளியின் முதல் பாகத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிப்பது குறித்த பல விசயங்கள் இடம் பிடித்திருந்தது. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆ...
2023 – 2026 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தேர்தல்  23-4-2023  அன்று  நடைபெற உள்ளது.

2023 – 2026 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தேர்தல் 23-4-2023 அன்று நடைபெற உள்ளது.

சினிமா
2023 - 2026 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தேர்தல் வருகின்ற 23-4-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில்... தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் திரு. RK. செல்வமணி அவர்கள் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடுகிறார். அவருடைய தலைமையிலான அணியில் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு, தயாரிப்பு நிர்வாகிகள் சங்க செயலாளர் திரு. B. சுவாமிநாதன் அவர்களும், பொருளாளர் பொறுப்பிற்கு டிரைவர்ஸ் யூனியன் தலைவர் திரு. T. S. செந்தில்குமார் அவர்களும், துணைத் தலைவர்கள் பொறுப்பிற்கு: மேக்கப் மேன் யூனியன் தலைவர் திரு.சபரிகிரிசன் அவர்களும், இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் தலைவர் திரு. தினா அவர்களும், கலை இயக்குநர்கள் சங்க செயலாளர் திரு. மோகன மகேந்திரன் அவர்களும், ஸ்டண்ட் யூனியன் தலைவர் திரு. தவசிராஜ் அவர...
விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்.அவருடன் நடித்தது மறக்க முடியாதது: வியக்கிறார் நடிகை சாய் ரோகிணி!

விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்.அவருடன் நடித்தது மறக்க முடியாதது: வியக்கிறார் நடிகை சாய் ரோகிணி!

சினிமா
சினிமா தனக்கான ஆட்களைத் தேடிக்கொள்ளும் என்பார்கள். அதேபோல் சினிமா பற்றிய கனவு ஒருவருக்கு இருந்தால் அது கைப்பிடித்து அழைத்து வந்து அத்துறையில் அமர வைத்து விடும் என்றும் கூறலாம்.அப்படிப்பட்ட ஒருவர்தான் நடிகை சாய் ரோஹிணி. வேலூரில் பிறந்து வளர்ந்தவர்.சினிமா பின்புலம் எதுவும் இல்லாத சூழலில் இருந்து வந்து, கண்ட கனவைத் துரத்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் சாய் ரோஹிணி. வேலைவாய்ப்பு எண்ணத்தில் செவிலியர் படிப்பை சென்னையில் வந்து முடித்தவர் வேலைக்குச் செல்லாமல் திரை வாய்ப்புகளைத் தேடி ஓடியிருக்கிறார்.எங்கெங்கே புதுப் படங்களில் நடிப்பதற்குப் புது முகங்கள் தேவை என்கிற விளம்பரம் கண்டாலும் நேரில் சென்று ஒவ்வொரு தேர்விலும் கலந்து கொண்டுள்ளார். அப்படி வாய்ப்பு கிடைத்து முதலில் நடித்த படம் தான் 'நாட் ரீச்சபிள்'. அப்படிக் கடும் முயற்சிக்குப் பின் கிடைத்த இன்னொரு வாய்ப்பு தான் 'மிடில் க...
தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்

தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்

இலக்கியம், சினிமா
தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தொடங்கியுள்ளார். தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மக்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற சுமார் 6,000 புத்தகங்களை தினமும் எடுத்து படிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்த புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை விட, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வது தான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று நான் எண்ணினேன். இறைவன் ஒரு தனி மனிதனிடம் அதிகமான செல்வத்தை தருகிறான் என்று சொன்னால், அது பொருட்ச்செல்வமாக இருக்கலாம், அறிவு செல்வமாக இருக்கலாம், அதை பிறருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று பகவத் கீதை, குரான் மற்றும் பைபிளில் நான் ...
அமீர் & பாவனி ஜோடியாக நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம்

அமீர் & பாவனி ஜோடியாக நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம்

சினிமா
அமீர் & பாவனி ஜோடியாக நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம் இனிதே துவங்கியது !! Sri Nalla Veerappasamy Production சார்பில், V. பாலகிருஷ்ணன் தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் அமீர், பாவனி ஜோடி, நாயகன் நாயகியாக நடிக்கும் ரொமான்ஸ் காமெடி திரைப்படம், திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தை பிக்பாஸ் புகழ் அமீர் தானே எழுதி இயக்குகிறார். இன்று நடந்த இப்படத்தின் பூஜையில், படக்குழுவினருடன் தயாரிப்பாளர் G.தனஞ்செயன், திண்டுக்கல் லியோனி, விஜய் ஆதிராஜ், நிரூப், பிரியங்கா, ஷாரிக், ரச்சிதா, கிஷோர்,சத்யா, ரியோ முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். பிக்பாஸ் மூலம் தமிழ்க மக்களின் மனங்களில் இடம்பிடித்த அமீர், பாவனி ஜோடி இப்போது வெள்ளித்திரையில் ஒன்றாக இணையவுள்ளார்கள். பிக்பாஸில் இருவரது ஜோடிப்பொருத்தமும் எல்லோராலும் பாரட்டப்பட...
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளி மாணவிகளுக்காக “அயலி” இணையத் தொடர் சிறப்பு திரையிடல் !!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளி மாணவிகளுக்காக “அயலி” இணையத் தொடர் சிறப்பு திரையிடல் !!

சினிமா
பள்ளி மாணவிகளுக்காக ZEE5 தளத்தின் “அயலி” இணையத்தொடர் சிறப்பு திரையிடல் !! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு வாழ்த்தினார்!! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளி மாணவிகளுக்காக “அயலி” இணையத் தொடர் சிறப்பு திரையிடல் !! பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வலையில் ZEE5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. ZEE5 நிறுவனம் முன்னெடுத்த இவ்விழாவினில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. காகர்லா உஷா ஐஏஎஸ் அரசின் முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திரு கே. நந்தகுமார் ஐஏஎஸ்., கமிஷனர் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ZEE5 தளத்தில...