என்.எஸ். பொன் குமார் இயக்கத்தில், கௌதம் கார்த்திக், புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஆகஸ்ட் 16, 1947
1947ஆம் ஆண்டு, நம்நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்து இந்தபடத்தின் கதை துவங்குகிறது ‘செங்காடு’ என்னும் கிராமத்தில் வாழும் மக்கள் பருத்தி நெய்யும் தொழில் செய்பவர்கள் அந்த மக்களை, உண்ண உணவு கூட கொடுக்காமல், கடினமாக வேலை வாங்கும் கொடியவனாக ராபர்ட் உள்ளான் , ராபர்ட்டின் மகன் ஜஸ்டினோஅங்குள்ள பெண்களை வன்கொடுமை செய்யும் கொடூரனாக உள்ளான் , ஜமீன்தாரின் மகளை அடைய நினைக்கும் ஜஸ்டினை, பரமன் (கௌதம் கார்த்திக்) கொல்கிறான். இதற்கிடையில், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது இதனை ராபர்ட் மக்களிடம் இருந்து மறைக்கிறார். விடுதலை கிடைத்த பின்னரும் செங்காட்டு பகுதி பஞ்சில் இருந்து லாபம் கிடைக்க ஆங்கிலேயே அரசு திட்ட, மிடுகிறது.இறுதியில் பரமன் என்னவானான்? செங்காடு மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த தகவல் தெரிந்ததா? இவையே ஆகஸ்ட் 16 1947 படத்தின் மீதி கதை!

அறிமுக இயக்குநர் பொன்குமார், 1940 களில் நடக்கும் கதைக்கு தேவையான நடிகர்களை தேர்வு செய்ததோடு, கதைக்கு ஏற்ற காட்சி அமைப்புகளையும் செவ்வனே கொண்டு சிறப்பாக படத்தை இயக்கியுள்ளார்
1940 களின் காலக்கட்டத்தை தன்னுடைய கலை இயக்கத்தின் மூலம் சிறப்பாக மறுஉருவாக்கம் செய்து அசத்தியுள்ளார் கலை இயக்குநர் சந்தானம். கதாநாயகன் கௌதம் கார்த்திக், ‘பரமன்’ என்ற கதாபாத்திரத்தில்.காதல் மற்றும் காமெடி காட்சிகளில் நன்கு நடித்துள்ளார் கதாநாயகியாக அறிமுக நடிகை ரேவதி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் குறைவின்றி இயல்பாக நடித்துள்ளார் .’குக் வித் கோமாளி’ புகழ் யதார்த்தமான நடிப்பின் மூலமாக ரசிகர்களிடம் தனி கவனம் பெறுகிறார் .வில்லன்களாக ரிச்சர்ட் அஷ்ன் ,ஜாசன் ஷாவும் மற்றும் மதுசூதன் ராவ், போஸ் வெங்கட், நீலிமாராணி போன்றோர்களும் தங்களது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை நன்கு வழங்கியுள்ளனர். இதுவரை சின்ன சின்ன கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த விஜயலட்சுமி பாட்டியை குறிப்பாக சொல்லவேண்டும் ,அவர்களுடைய பேச்சும் நடிப்பும் படம் முழுக்க பரவி உள்ளது .
ஷான் ரோல்டனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை செல்வகுமாரின் ஒளிப்பதிவு போன்றவை இயக்குனர் உருவாக்கும் காட்சிகளுக்கு மேலும் நயம் சேர்த்துள்ளது
நம் நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள, இந்த பீரியட் படம்,அந்த காலகட்டத்தை இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ளும் வகையில் சிறப்புற உருவாக்கப்பட்டுள்ளது
