Saturday, June 20

சினிமா

 சாமானியனை தொடர்ந்து மீண்டும் ஒரு சமூக அக்கறை கொண்ட கதையில் கதாநாயகனாக நடிக்கும் ராமராஜன்

 சாமானியனை தொடர்ந்து மீண்டும் ஒரு சமூக அக்கறை கொண்ட கதையில் கதாநாயகனாக நடிக்கும் ராமராஜன்

சினிமா
சமூக பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் ‘ராமராஜன் 46’ எண்பது தொண்ணூறுகளின் காலகட்டத்தில் தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து மக்கள் நாயகனாக, வெற்றிகரமாக நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவக்கியுள்ளார். இந்தப்படம் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் ராமராஜன். அந்த வகையில் 7 ஆத்ரி ஃபிலிம் பேக்டரி சார்பில் தீனதயாளன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் ராமராஜன். இது அவரது 46 ஆவது படமாக உருவாகிறது. ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் V என்பவர் இந்த படத்தின் கதையை எழுதி உள்ளதுடன் இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். சாமானியன் படத்தை தயார...
கல்லூரி கலை நிகழ்ச்சி போல, கோலாகலமாக நடந்த “பாபா பிளாக் ஷிப்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கல்லூரி கலை நிகழ்ச்சி போல, கோலாகலமாக நடந்த “பாபா பிளாக் ஷிப்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

சினிமா
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்” . இன்றைய தலைமுறையின் மனம் கவர்ந்த பல டிஜிட்டல் ஊடக பிரபலங்கள் வெள்ளித்திரையில் இப்படம் மூலம் கால் பதிக்கின்றனர். பெரும் பொருட்செலவில், நாம் அறிந்த முகங்களின் வாயிலாக நம் பள்ளி வாழ்வை அசை போட வைக்கும் அற்புதமான படைப்பாக, இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், ஒரு கல்லூரி கலை நிகழ்வு போல் திருவிழாக்கோலமாக இவ்விழா நடைபெற்றது. இப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு  அறிமுகமாகும்...
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஏஏஏ சினிமாஸ்’ தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஏஏஏ சினிமாஸ்’ தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது!

சினிமா
மிகப் பிரமாண்டமான முறையில் தனது ’ஏஏஏ சினிமாஸ்'ஸை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்  ஐதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில்  திறந்து வைத்தார். அல்லு அர்ஜுன் ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து 'ஏஏஏ சினிமாஸ்'ஸை நிறுவியுள்ளார். இதன் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், சுனில் நரங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது தங்களுக்குப் பிடித்த நட்சத்திரமான அல்லு அர்ஜுனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். சுனில் நரங் கூறுகையில், ''ஏஏஏ சினிமாஸுக்கு அனைவரையும் வரவேற்கிறோம். இந்த வளாகத்தின் மொத்த பரப்பளவு மூன்று லட்சம் சதுர அடி. மூன்றாவது தளத்தில் உணவு விடுதி 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது.  ஏஏஏ சினிமாஸின் நான்காவது மாடியில் ஐந்து திரைகளுடன் கூடிய திரையரங்கு உள்ளது. திரை எண் 2 இல் LED திரை உள்ளது. தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ’ஏஏஏ சினிமாஸ்’ மட்டுமே. இதற்கு புரொ...
‘வீரன்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலமாக பார்வையாளர்களிடமிருந்து ஏராளமான  பாராட்டுகளை நடிகர் சசி செல்வராஜ் பெற்று  வருகிறார்

‘வீரன்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலமாக பார்வையாளர்களிடமிருந்து ஏராளமான பாராட்டுகளை நடிகர் சசி செல்வராஜ் பெற்று வருகிறார்

சினிமா
'வீரன்' படத்தில் நடிகர் சசி செல்வராஜ்ஜின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வருகிறது! ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, வினய் ராய் மற்றும் ஆதிரா ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'வீரன்' திரைப்படத்தில் நடிகர் சசி செல்வராஜ்ஜின் நடிப்பு பார்வையாளர்களிடமிருந்து ஏராளமான நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 2016 இல் யூடியூபராக தனது பயணத்தை எளிமையாக தொடங்கிய சசி அவரது பயணத்தைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார். "நான் 2016இல் யூடியூபராக எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை  இருந்தாலும் எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், அந்த ஆர்வத்தை நான் கைவிட விரும்பவில்லை. எனது யூடியூப் சேனல் அப்படித்தான் தொடங்கியது. கண்டெண்ட் கிரியேஷன் செய்து வந்ததால் ஒன்றிரண்டு குறும்படங்களிலும் வேலை செய்தேன். இதன் மூலம் ட்ரீம் வாரியரின் 'வட்டம்' படத்தில் ஒரு அற்புத...
விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பரசுராம் நடிக்கும் VD13 / SVC 54 படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது!

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பரசுராம் நடிக்கும் VD13 / SVC 54 படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது!

சினிமா
விஜய் தேவரகொண்டா மற்றும் பரசுராம் இணையும் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ். மேலும், வாசு வர்மா இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக உள்ளார். ’கீத கோவிந்தம்’, ’சர்க்காரு வாரிபட்டா’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் பரசுராம் மீண்டும் இணைந்திருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. இவர்கள் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. தயாரிப்பாளர் ஷியாம் பிரசாத் ரெட்டி கிளாப் அடிக்க, கோவர்தன் ராவ் தேவரகொண்டா முதல் காட்சியை இயக்க, பிரபல பைனான்சியர் சத்தி ரங்கய்யா கேமராவில் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது ப்ரீ புரொடக்‌ஷன் நிலையில் உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ’சீதாராமம்’...
M360° ஸ்டுடியோஸ் ரோஷ் குமார் வழங்கும், பி திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!

M360° ஸ்டுடியோஸ் ரோஷ் குமார் வழங்கும், பி திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!

சினிமா
தனித்துவமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும் பன்முகத்தன்மையை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகர்களாக வலம் வருகிறார்கள். இப்போது இருவரும் அறிமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சமரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இதனை M360° ஸ்டுடியோஸின் ரோஷ் குமார் தயாரித்துள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், புதிய ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். முதல் ஷெட்யூல் சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட படப்பி...
அழகிய கண்ணே திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

அழகிய கண்ணே திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

சினிமா
Esthell Entertainer  நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”. இப்படத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளர், அவரின் சகோதரர்  R.விஜயகுமார்  இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் I லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் அமுதவாணன் பேசியதாவது… பல மேடைகளில் பேசியுள்ளேன் ஆனால் இங்குப் பேசுவதற்குக் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, மேடையில் பெரிய ஆளுமைகள்  இருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். கதாநாயகன் லியோ...
தாய்சரவணன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய்ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கியது..

தாய்சரவணன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய்ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கியது..

சினிமா
‘பிச்சைக்காரன்2’ மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நல்லுசாமி பிக்சர்ஸ் தாய்சரவணன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய்ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நேற்று தொடங்கியது.. நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் திரைப்படம் “வள்ளி மயில்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்,கொடைக்கானல், சிறுமலை,பழநி,மதுரை,திருநெல்வேலி மற்றும் தென்தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 வெற்றிக்குப் பிறகு இன்று, வள்ளி மயில் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி கலந்...
தேவா பாடிய பாடலை எஸ்.தாணு முன்னிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியம் வெளியிட்டார்.

தேவா பாடிய பாடலை எஸ்.தாணு முன்னிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியம் வெளியிட்டார்.

சினிமா
தேவா பாடிய பாடலை எஸ்.தாணு முன்னிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியம் வெளியிட்டார். புகழ்மணி இயக்கத்தில் வி.சி.குகநாதன் கதையில் உருவாகி உள்ள படம்தான் "காவி ஆவி நடுவுல தேவி " சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரை ரஜினிகாந்த் பார்த்து, பாராட்டி வெளியிட்டு வாழ்த்தினார். இந்த படத்தில் ஜீவமயில் எழுதிய " இந்திரன் கெட்டதும் பிகராலே, சந்திரன் கெட்டதும் பிகராலே " என்றதேனிசை தென்றல் தேவா பாடிய பாடலை மருத்துவ துறை அமைசசர் மாண்புமிகு மா. சுப்ரமணியம் அவர்கள் முழுவதும் பார்த்து வாழ்த்தி வெளியிட்டார். இந்த நிகழ்வில் கலைப்புலி.எஸ். தாணு , இசைமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, கவிஞர் சொற்கோ, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பிலிம்சேம்பர் செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டார்கள்  ...
பொம்மை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

பொம்மை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

சினிமா
ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் SJ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. மாறுபட்ட திரைக்கதையில் ஒரு அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜீன் 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படவெளியீட்டை முன்னிட்டு, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. எழுத்தாளர் பொன் பார்த்திபன் பேசியதாவது… பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளீர்கள் அதற்கு நன்றி. வாலி, குஷி பட காலத்தில் பார்த்து வியந்த SJ சூர்யா சாருக்கு எழுதுவது மிகப்பெரிய சந்தோஷம். ராதா மோகன் சார் முதன் முதலில் SJ சூர்யா சார் பெயரைச் சொன்ன போதே கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த கூட்டணி அசத்தியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் நடிப்பு ராட்சசனாக...