’கஃபுல் பிரண்ட்லி’ (Couple Friendly)- திரைவிமர்சனம்
வாழ்வியல் போராட்ட காதல் கதை.
இன்டீரியர் டிசைனர் ஆகி சாதிக்க வேண்டும் என்ற பெரும் கனவோடு சென்னைக்கு வரும் இளைஞன் சந்தோஷ் ஷோபனும், ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசைகளோடு சென்னைக்கு வரும் மானசா வாரணாசியும் ஒரு கட்டத்தில் ஒரே இடத்தில் தங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதன் பின்னர் சந்தோஷ் ஷோபன் தான் நினைத்தபடி தனது துறையில் வெற்றி பெறுகிறார். மானசாவும் தன்னுடைய ஆசைப்படியே ஐடி துறையில் பணிபுரியும் வாய்ப்பு பெறுகிறார். ஆசைக்கனவுகள் நிறைவேறியபின் இருவரும் காதல் கனவுகளோடு வாழ்க்கையை நடத்தி வரும் வேளையில் அவர்களுக்கு இடையே ஏற்படும் ஒரு சிறிய ஊடல் ஏற்பட அது அவர்களது காதல் கனவுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. இதன்பின் என்ன நடந்தது என்பது தான் ’கஃபுல் பிரண்ட்லி’ படத்தின் மீதி கதை .
கனவுகளை நெஞ்சங்களில் சுமந்து கொண்டு சென்னைக்கு வரும் இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தோஷோபன் ,கொ...









