’மை லார்ட்’ திரை விமர்சனம்

ஆளும் கட்சியிலும், அதிகாரத்திலும் மிகப்பெரிய செல்வாக்கோடு இருக்கிற ஆஷா சரத், மத்திய அமைச்சராகவும் இருக்கிறார்கள், இவருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு ,கிட்னி டிரான்ஸ்மிஷன் செய்தால்தான் அவர் உயிரோடு இருக்க முடியும் என டாக்டர்கள் சொல்றாங்க, இந்த விஷயம் வெளி உலகத்துக்கு தெரியாம பரம ரகசியமாக பாதுகாக்குறாங்க ,வீட்டுக்குள்ளேயே அவருக்கு டயாலிசிஸ்சும் பண்றாங்க ,அவருக்கு மகனும் மகளும் இருந்தாலும் மறைமுகமாக வேறு ஒருவருடைய கிட்னி டோனர தேடுறாங்க, இதற்காக இவங்களுக்கு சரியாக பொருந்தக்கூடிய நபர்களை கண்டுபிடிக்கிறார்கள் அதுல ஒருத்தருதான தமிழ்நாட்டுல இருக்கிற சசிகுமாரை தேர்ந்தெடுக்குறாங்க. சசிக்குமாரை எப்படியாவது சம்மதிக்க வைத்து அவருடைய ஒத்துழைப்போடு அவருக்கு தேவையான சகல விஷயங்களையும் நிறைவேற்றி, அவரிடமிருந்து கிட்னியை வாங்க நினைக்கிறாங்க, . ஆனால் ஒரு சூழலினால் தன் அடையாளத்தை இழந்த சசிகுமார், அதன் பின் பத்திரிகையாளர் ஒருவரின் ஆதரவுடன் நடத்தும் சட்டப் போராட்டத்தினை சொல்லுகிறது படத்தின் மீதிக்கதை.
படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் சசிகுமார் இந்த படத்திலும் சராசரி சாமானியனின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார்.சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சைத்ரா ,தனது யதார்த்தமான நடிப்பினை நயம்பட வெளிபடித்தியுள்ளார், மேலும் மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆஷா சரத், நீதிபதியாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், பத்திரிகையாளராக நடித்துள்ள குரு சோமசுந்தரம் போன்றோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் பங்களிப்பு இயக்குனரின் கதை சொல்லும் பாங்குக்கு பலம் சேர்த்துள்ளது,ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும்,பின்னணி இசையும் படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்துள்ளது .
கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்கள் அவர்களின் உணர் வுகளை வெளிப்படுத்தும் அருமையான வசனங்கள் இவற்றோடு அதனை கலை அம்சத்தோடு பதிவு செய்ய நேர்த்தியான தொழில் நுட்பாளர்கள் என கூட்டணி அமைத்து,நல்லதொரு படத்தினை கொடுத்துள்ளார் இயக்குநர் ராஜுமுருகன்.
