Thursday, April 23

மைலாஞ்சி- திரை விமர்சனம்

அஜயன் பாலா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு முக்கோண காதல் கதை -மைலாஞ்சி

ஊட்டியில் வசிக்கக்கூடிய இளம் பெண் கிரிஷா குரூப், ஒரு பறவைகள் பூங்காவா நடத்திக்கிட்டு வராங்க அவங்களோட உறவினர் அவங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த திருமணத்தில் உடன்பாடு இல்லாத கிரிஷா குரூப் ஒருத்தர காதலிக்கிறாங்க ,ஆனா தன்னோட காதல தெரியப்படுத்த நினைக்கிறப்ப அவரு சென்னைக்கு போய் விடுகிறார் , இந்த சூழ்நிலையில் வனவிலங்கு புகைப்படக் கலைஞராக இருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் ஊட்டிக்கு வராரு, கிரிஷா குரூப்பை சந்திக்கிற அவருடைய நட்பு கிரிஷா மேல காதலாவும் மாறுது ,தன்னோட காதல கிரிஷா குரூப் ,கிட்ட ஸ்ரீராம் சொல்லலாம்னு நினைக்கிறப்ப கிரிஷா குரூப், தன்னோட காதல சொல்லி சென்னையில் இருக்கிற தன் காதலனோட தன்னை சேர்த்து வைக்கும்படி ஸ்ரீராம் கார்த்திக் கிட்டே கேக்குறாங்க, அதன்படி ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷாவோட காதலனோட சேர்த்து வைக்க முயற்சிக்கிறாரு ,இந்த சூழ்நிலையில் கிரிஷாவோட காதலன் மறுபடியும் ஊட்டிக்கே வராரு, அவரோட கிரிஷாவுக்கு திருமண ஏற்பாடுகளை கிரிஷாவோட குடும்பத்தாரே செய்றாங்க, இதற்குப் பிறகு என்ன நடந்தது ?அப்படிங்கிறதான் மைலாஞ்சி படத்தோட மீதி கதை .

கதையின் நாயகனா நடித்திருக்க கூடிய ஸ்ரீராம் கார்த்திக் காதல் வசப்படுவது ,பின் காதலை சொல்ல முடியாமல் தவிப்பது, பின்பு காதலை விட்டு விலகிச் செல்ல நினைப்பது என பலதரப்பட்ட காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கதையின் நாயகியாக கிரிஷா குரூப் நடித்துள்ளார் ,அவரும் தன் பங்குக்கு குறை சொல்ல முடியாத அளவிற்கு நடிப்பினை . வழங்கி இருக்கிறார். முனீஸ் காந்தும் , சிங்கம் புலியும் அவரவர் கதாபாத்திரங்களில் தங்களால் முடிந்த அளவிற்கு ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள் .

மெல்லிய காதல் உணர்வை ,காதலின் பல நிலை பரிமாணங்களை,பிரிவு துயரங்களை காட்சிப்படுத்த, காதலை மையமாக கொண்டு வரும் படங்களில் ஒளியும் ஒலியும் மிக முக்கியமான பங்கினை ஆற்ற வேண்டும், அந்த வகையில் இந்த படத்தின் இசையும், ஒளிப்பதிவும் படத்தின் கதையோட்டத்திற்கு உறுதுணையாக படம் முழுவதும் பயணித்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஒளிப்பதிவாளர் செழியன் எழுல் மிகு ஊட்டியின் இயற்கை வளம் செறிந்த காட்சிகளை தன்னுடைய சிறப்பான கோணங்கள் மூலம் நயம் பட பதிவு செய்துள்ளார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன ,பின்னணி இசை,கதாபாத்திரங்களின் உணர்வுகளை சித்தரிக்கும் வகையில் நன்கு அமைக்கப்பட்டுள்ளது.

காதலர் தினம் கொண்டாடப்படும் சமயத்தில் காதல் உணர்வுகளை சித்தரிக்கும் இந்த படத்தை அஜயன் பாலா இயக்கி,திரையில் வலம் வர செய்திருக்கிறார். கதைக்களம் ரசிகர்களுக்கு பார்த்த விஷயமாக இருந்தாலும் அதனை திரைக்கதையாக்கி உருவாக்கம் செய்யும்பொழுது இன்னமும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் நிறைய மாறுதலோடு கொடுத்திருந்தால் அது ரசிகர்களின் மனதில் நன்கு இடம் பிடித்திருக்கும்.

மொத்தத்தில் மைலாஞ்சி மற்றுமொரு காதல் கதை.

Spread the love