சில படங்களோட தலைப்பே படத்தினை பற்றி சொல்லிவிடும் அது இந்த “ஸ்வீட்டி நாட்டி கிரேசி” படத்துக்கும் பொருந்தும் .

கல்லூரி மாணவனான சிவா (த்ரிகுண்) தன்னோட கல்லூரியில் படிக்கும் அனிதா (ஸ்ரீ ஜீத்தா கோகோஷ் ) மீது காதல் வசப்படுகிறார் ,காதலியினை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் சூழலில் திருமணத்திற்கு முன்பாக தான் மணக்கவிருக்கும் தனது காதலியிடம் இதற்கு முன் தனக்கு பெண்களுடன் ஏற்பட்ட தொடர்புகளை கூறுகிறார் ,திருமணத்திற்கு பிறகு தம்பதியர்கள் மனைவியின் வீட்டிற்கு செல்லும் பொழுது அங்கு இருக்கும் இரு பெண்களை பார்த்து சிவா அதிர்ச்சி அடைகிறார் , அந்தப் பெண்களைப் பார்த்து சிவா அதிர்ச்சி அடைவதற்கான காரணம் என்ன? அந்த பெண்களுக்கும் சிவாவிற்கும் என்ன தொடர்பு? அதன் பின் நடக்கும் சம்பவங்களை அடல்ட் காமெடி பாணியில் சொல்லுகிறது படத்தின் மீதி கதை.

சிவா என்னும் கதாபாத்திரத்தில் த்ரிகுண் நடித்துள்ளார், அடல்ட் காமெடி ஜானரில் உருவான திரைப்படத்தில் கதையின் நாயகனாக ,தான் சந்திக்க கூடிய பெண்களுக்கும் தனக்கும் இடையே உள்ள உறவினை சித்தரிக்கும் கதாபாத்திரத்தில், நல்ல முறையில் தன் நடிப்பினை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.இவர் தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் போன்ற படங்களிலும் நடித்தவராம் .மேலும் கதையின் நாயகியாக நடித்திருக்க கூடிய ஸ்ரீ ஜீத்தா கோஷ்,இனியா, ராதா மற்றும் ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், ஜாவா சுந்தரேசன்,மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர்களான ஆலி, ரகு பாபு போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் கதைக்கு ஏற்றபடி, காட்சிகளுக்கு தக்கபடி நன்றாகவே நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் இசையும் ஒளிப்பதிவும் கதைக்கு பொருத்தமாக காட்சிகளுக்கு இணக்கமாக நன்றாக அமைக்கப்பட்டுள்ளது ,தமிழ் தெலுங்கு, இந்தி உட்பட பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல பெண் ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ M. A. D. F. Tech இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.சினேகன், பாஸ்கர் S.தேவ் இருவரின் பாடல் வரிகளுக்கு அருணகிரி இசையமைத்துள்ளார்.இவர் ஏற்கனவே கோலிசோடா, கடுகு, சண்டிவீரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர்.
இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்ற டிரெண்டிங்கான படமாக உருவாக்கவேண்டும் என்ற முனைப்போடு,மூன்று வெவ்வேறு விதமான காதலை மையமாக வைத்து, மூன்று கோணங்களில் நடக்கும் சம்பவங்களை அடல்ட் காமெடி பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்.G
மொத்தத்தில், ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி – முழு நீள அடல்ட் நகைச்சுவை காமெடி கலாட்டா.
