சைபர் க்ரைம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுசி கணேசனின் ‘தில் ஹே கிரே’
பொதுவாக க்ரைம் தொடர்பான படங்கள் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன. அந்த ஜானரில் வெளியாகும் மற்றொரு படத்தை பார்க்க பார்வையாளர்கள் எப்போதும் தயாராகவே இருக்கின்றனர்.. அப்படி உருவாகியுள்ள படம் தான் ‘தில் ஹே கிரே’. இந்தப்படத்தில் வினீத் குமார் சிங், அக்ஷய் ஓபராய் மற்றும் ஊர்வசி ரவுட்டேலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்..ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை சுசி கணேசன் இயக்கியுள்ளார்.. இந்தப்படத்தின் கதையை சுசி கணேசனுடன் தாரிக் முகமது மற்றும் நவின் பிரகாஷ் ஆகியோரும் இணைந்து எழுதியுள்ளனர்..
சோஷியல் மீடியாவில் அப்பாவி பெண்களை குறிவைத்து சிக்க வைக்கும் ஒரு ஏமாற்று பேர்வழியை (அக்ஷய்) தேடி கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் (வினீத்) பயணமாக இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.. எப்படி தனக்குள்ளே இரண்டு பக்கங்களை வைத்திருக்கும் ஒவ்வொர...









