Wednesday, April 22

Author: admin

மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்” ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டார் !

மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்” ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டார் !

சினிமா
க்ரிஷ் இன்டர்நேஷனல் பிலிம் கிரியேசன், சீட்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் சண்முகம் கிரியேசன் இணைந்து தயாரிக்க, நடிகர் சதீஷ் நடிக்கும் திரில்லர் திரைப்படம் “சட்டம் என் கையில்”. இப்படத்தை ‘சிக்சர்’ படப்புகழ் இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டார். படம் குறித்து இயக்குநர் சாச்சி கூறியதாவது… பிரபல காமெடி நடிகர் சதீஷை மாறுபட்ட தோற்றத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். நடிகர் சதீஷ் காமெடி மட்டுமே செய்யக் கூடியவர் அல்ல, அவரின் திறமையை, அவரது வேறொரு பரிமாணத்தை “சட்டம் என் கையில்” படத்தில் பார்க்கலாம். அவரது தனித்துவமான நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். என் முதல் படம் முழுக்க காமெடியை சுற்றியதாக இருக்கும், ஆனால் இந்த படம் அதிலிருந்து மாறுபட்டு பரபர திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஒரு இரவில் ...
தமிழ் திரை உலகினர் கடும் உழைப்பாளிகள்  – ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்

தமிழ் திரை உலகினர் கடும் உழைப்பாளிகள்  – ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்

சினிமா
ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார். ...
தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘சிட்தி’ ( SIDDY )

தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘சிட்தி’ ( SIDDY )

சினிமா
சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக திரு.மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் படம் 'சிட்தி' ( SIDDY ) இந்த படத்தை பயஸ் ராஜ் (Pious Raj) எழுதி இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் " சிட்தி " தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் ? இறுதியில் என்ன நடந்தது ? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளார்கள். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, இப்படம் விரைவில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா,  சென்னையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில் .. தயாரிப்பாளர் திரு.மகேஷ்வரன் நந்தகோ...
ஒரே நேரத்தில் மூன்று தெலுங்கு படங்களில் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன் !

ஒரே நேரத்தில் மூன்று தெலுங்கு படங்களில் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன் !

சினிமா
  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தற்போது முன்னணி நாயகர்கள் நடிக்கும் மூன்று பிரமாண்ட தெலுங்கு படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ’தமிழ் படம் 2, ’நான் சிரித்தால்’ படங்கள் மூலம் தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்த, நாயகி ஐஸ்வர்யா மேனன் தற்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். UV Creations தயாரிப்பில், தமிழில் “வலிமை” படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதைத்தொடர்ந்து இளம் நடிகர் நிகில் நடிக்க, Ed entertainment தயாரிப்பில் இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், தற்போது முன்ணனி தெலுங்கு நடிகர் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் இப்ப்டத்த...
வெளியானது ‘ஓ மை டாக் ‘படத்தின் ஸ்னீக்பிக்

வெளியானது ‘ஓ மை டாக் ‘படத்தின் ஸ்னீக்பிக்

சினிமா
குழந்தை மற்றும் அவரது செல்லப்பிராணி பற்றிய ஒரு மாயாஜால கதை தான் ஓ மை டாக். அமேசான் பிரைம் வீடியோவின் பிரிமியர் அறிவிப்பிற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான 'ஓ மை டாக்' படத்தின் ஸ்னீக்பிக் வெளியானது. 2டி நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை சரோவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ளார். இதில் இளம் அறிமுக நடிகர் அர்னவ் விஜய், அருண் விஜய், விஜயகுமார், மஹிமா நம்பியார் மற்றும் வினய் ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தைப் பற்றி நடிகர் அருண் விஜய் பேசுகையில், '' டீஸரில் பார்த்ததைப் போல் இந்த திரைப்படம் ஒரு சிறு குழந்தைக்கும், அவரது செல்ல நாயான சிம்பாவுக்கும் இடையே தனித்துவமான நட்பு மற்றும் அழகான - வேடிக்கையான தருணங்களை காண்பிக்கிறது. இந்த படத்தின் திரைக்கதையை முதன்முதலாக கேட்டபோது, இது வித்தியாசமான திரைக்கதை என்பதை ந...
Infiniti Film Ventures வழங்கும்,இயக்குநர் CS அமுதன்  இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”  படத்தின் இந்திய படப்பிடிப்பு  நிறைவு பெற்றது !

Infiniti Film Ventures வழங்கும்,இயக்குநர் CS அமுதன்  இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”  படத்தின் இந்திய படப்பிடிப்பு  நிறைவு பெற்றது !

சினிமா
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரது நடிப்பில் பல படங்கள், தயாரிப்பின் வெவ்வேறு நிலைகளில்  உள்ளது. அதில், கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோரால் Infiniti Film Ventures சார்பில் தயாரிக்கப்படும், CS.அமுதன் இயக்கும் 'ரத்தம்' படமும் ஒன்று. வேகவேகமாக நடந்து வரும் இந்த படத்தின் படபிடிப்பு பணிகளில்,  தற்போது படக்குழு இந்திய படபிடிப்பை நிறைவு செய்துள்ளது. இந்திய படப்பிடிப்பு நிறைந்த நிலையில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. மேலும் வெளிநாட்டு படபிடிப்பை படக்குழு வெகு விரைவில்  துவங்கவுள்ளது. முற்றிலும் புதிய களத்தில்  பரபர திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் பொழுதுபோக்கு  படமாக உருவாகும் "ரத்தம்"  படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி...
Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து வழங்கும்,விஜய் ஆண்டனி நடிக்கும், “கொலை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !  

Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து வழங்கும்,விஜய் ஆண்டனி நடிக்கும், “கொலை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !  

சினிமா
Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து வழங்கும்,விஜய் ஆண்டனி நடிக்கும், “கொலை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !   நடிகர் விஜய் ஆண்டனி, தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் அற்புதமான திரைக்கதைகள் மூலம் மக்களை மகிழ்விக்க ஒருபோதும் தவறியதில்லை. அடுத்ததாக அவர் நடிப்பில்   வரவிருக்கும் ‘கொலை’ திரைப்படத்தில் துப்பறியும் நபராக ஒரு புதிய வித்தியாசமான பாத்திரத்தில் ரசிகர்களை  மகிழ்விக்கவுள்ளார். தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பையும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ரித்திகா சிங், சந்தியா என்ற இளம் காவலராக விஜய் ஆண்டனியுடன் இணைந்து  பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் தோன்றுகிறார். பாலாஜி குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை கமல் போரா, லலிதா தனஞ்சயன், பிரதீப் B, பங்கஜ் போரா மற்றும் S விக்ரம் குமார் ஆகியோர் Infiniti ...
2 MB தயாரிப்பில் ராம்பாலா இயக்கத்தில் சந்திரமௌலி – மீனாக்‌ஷி கோவிந்தராஜன் – ரெபா மோனிகா நடிக்கும் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு”

2 MB தயாரிப்பில் ராம்பாலா இயக்கத்தில் சந்திரமௌலி – மீனாக்‌ஷி கோவிந்தராஜன் – ரெபா மோனிகா நடிக்கும் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு”

சினிமா
தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் "2 MB" ரகுநாதன் P.S தற்போது தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் "வந்தான் சுட்டான் ரிப்பிட்டு" எனும் புதிய படத்தை தயாரிக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் "வந்தான் சுட்டான் ரிப்பிட்டு" படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார். மீனாக்‌ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். செவிலோ ராஜா ஒளிப்பதிவை மேற்கொள்ள, சந்தோஷ் தயாநிதி மற்றும் K.C.பாலசாரங்கன் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். கலை - கிருஷ்ணா படத்தொகுப்பு - K.J.வெங்கட்ரமணன் காஸ்ட்யூம் டிசைனர் - சோபியா ஜெனிபர் மேக்கப் - ராஜா சண்டைப்பயிற்சி - விக்கி புரொடக்‌ஷன் எக்ஸிகியுடிவ் - சேகர் எக்ஸிகியுடிவ் புரொடுயுசர் - G.பிரத...
டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகும் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகும் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்

சினிமா
பார்த்திபன், தேவயானி நடிப்பில், 'நினைக்காத நாளில்லை', 'தீக்குச்சி' மற்றும் தெலுங்கில் 'அக்கிரவ்வா' ஆகிய படங்களை தொடர்ந்து,இயக்குனர் ஏ.எல்.ராஜா இயக்கியுள்ள புதிய படம் "சூரியனும் சூரியகாந்தியும்"! டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகும் இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சந்தான பாரதி, இயக்குனர் செந்தில் நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன், இயக்குனர் ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்குகிறார். ஒளிப்பதிவு திருவாரூர் ராஜா, இசை ஆர்.எஸ்.ரவி பிரியன், எடிட்டிங் வீரசெந்தில்ராஜ், டான்ஸ் மாஸ்டர் மஸ்தான், பாடல்கள் ஏ.எ...
த்ரில்லர் பட ரசிகர்களின் நெஞ்சில் ரீங்காரம் செய்யும் வகையில் விரைவில்’ ரீ’ வெளிவர இருக்கிறது.

த்ரில்லர் பட ரசிகர்களின் நெஞ்சில் ரீங்காரம் செய்யும் வகையில் விரைவில்’ ரீ’ வெளிவர இருக்கிறது.

சினிமா
என்ன சத்தம் இந்த நேரம்? என்று கேட்கும் பரபரப்பான கதை 'ரீ ' அருகில் அலறும் மர்மம் பற்றிப் பேசும்படம் 'ரீ ' முற்றிலும் வணிக மயமாகிப் போய்விட்ட இந்த வாழ்க்கைச் சூழலில் தொழில்நுட்பம் உலகத்தை உள்ளங்கைக்குள் இணைக்கிறது .உலகத் தொடர்புகள் மிக விரைவில் சாத்தியமாகிறது.ஆனால் அருகிலிருக்கும் வீடுகளில் இருப்பவர் யார்? அங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை. ஆனால் 'ரீ ' படத்தின் கதாநாயகி அப்படி இருப்பவள் அல்ல.அவளது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சத்தம் வருகிறது .அது அவளை அலைக்கழிக்கிறது. அவளைச் சமநிலை இழக்கச் செய்கிறது. என்ன சத்தம் இந்த நேரம்? பேயின் ஒலியா? மனிதனின் வலியா?என்று அறிய முற்படுகிறாள்.ஆனால் பக்கத்து வீட்டில் ஒரு நாகரிகமான டாக்டர் குடும்பம் தான் வசிக்கிறது. இந்நிலையில் எங்கிருந்து சத்தம் வருகிறது அதன் பின்னணி என்ன என்று ஆராய முற்படும் போது பல மர்மங்கள் விரிகின்றன. எதிர்பாராத திசையில்...