Thursday, December 5

Sridevi Movies தயாரிப்பில் சமந்தா நடிக்கும் ‘யசோதா’ திரைப்படம் ஆகஸ்ட் 12 வெளியாகிறது !

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்ணனி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, தன் தனிச்சிறப்பு மிக்க நடிப்பை வெளிப்படுத்தி “ஃபேமிலிமேன் 2” தொடர் மூலம் இந்திய அளவில் சிறந்த நடிகையாக,  நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார்.

நடிகை சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies  சார்பில்  சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். ஹரி-ஹரீஷ் கூட்டணி இப்படத்தில் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படம் வரும் ஆகஸ்ட் 12 உலகமுழுதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறியதாவது..,

நடிகை சமந்தா “யசோதா” படத்தில் நடிப்பில் மட்டுமின்றி சண்டைக்காட்சிகளிலும் அசத்தியுள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படத்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடுகிறோம். மே மாத இறுதியில் படப்பிடிப்பு முடிவடையும். இந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படம்  இந்திய அளவிலான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுக்கக்கூடிய கதைக்களத்தை கொண்டுள்ளது. சமீபத்தில் ஒரு பிரமாண்ட செட்டில் ஒரு பெரிய ஷெட்யூலை முடித்துவிட்டு, இன்று கொடைக்கானலில் அடுத்தகட்ட  படப்பிடிப்பிற்கு செல்கிறோம்”


இப்படத்தில் சமந்தா உடன், வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இசை : மணிசர்மா,
வசனம்: புலகம் சின்னராயனா, Dr. செல்லா பாக்யலக்‌ஷ்மி
பாடல்கள்:  ராமஜோகையா சாஸ்திரி Sastry
கிரியேட்டிவ் டைரக்டர்: ஹெமம்பர் ஜஸ்தி
ஒளிப்பதிவு: M. சசிக்குமார்
கலை: அசோக்
சண்டைப்பயிற்சி: வெங்கட்
எடிட்டிங்: மார்தந்த் K. வெங்கடேஷ்
லைன் புரடியூசர் : வித்யா சிவலெங்கா
இணை-தயாரிப்பு : சிண்டா  கோபாலகிருஷ்ணா ரெட்டி
இயக்கம் : ஹரி – ஹரீஷ்
தயாரிப்பு : சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்.
பேனர் : Sridevi Movies
Spread the love