Wednesday, April 22

Author: admin

ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில்,  அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த நடிப்பில் P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி இயக்கும்,  “தீர்க்கதரிசி”

ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த நடிப்பில் P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி இயக்கும், “தீர்க்கதரிசி”

சினிமா
படத்திற்கு படம் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பலரின் பாராட்டை பெற்றவர் நடிகர் அஜ்மல். தற்போது ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர் B.சதிஷ் குமார் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார். “தீர்க்கதரிசி” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி இணைந்து இயக்குகின்றனர். நடிகர் அஜ்மலுடன், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பேரன் துஷ்யந்த், “மத்திய சென்னை”, “காட்டு பய சார் இந்த காளி” படங்களின் மூலம் பலரின் பாராட்டை பெற்ற நடிகர் ஜெய்வந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணையும் “தீர்க்கதரிசி” திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் இனிதே துவங்கியது. தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் தயாரிப்பு - B.சதிஷ் குமார் (ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட்) இயக்கம் - P.G.மோகன்  & L.R. சுந்தரபாண்டி இசை...
‘ஓ சொல்றியா மாமா..’ வெற்றியை  தொடர்ந்து ‘வெப்’ படத்துக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல்..

‘ஓ சொல்றியா மாமா..’ வெற்றியை  தொடர்ந்து ‘வெப்’ படத்துக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல்..

சினிமா
நட்டி - ஷில்பா மஞ்சுநாத் நடிக்கும் வெப் படத்துக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல்.. வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்  திரில்லர் படம் 'வெப்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன்  இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார்.  ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர்  ஹாரூன். சமீபத்தில் 'புஷ்பா' படத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த 'ஓ சொல்றியா மாமா..'...
கணேஷ் மூர்த்தி சௌந்தர்யா வழங்கும்,அறிமுக இயக்குநர் IP முருகேஷ் இயக்கத்தில், லட்சுமி மேனன் – யோகி பாபு நடிக்கும்,  D இமான் இசையில் உருவாகும் படம் “மலை”

கணேஷ் மூர்த்தி சௌந்தர்யா வழங்கும்,அறிமுக இயக்குநர் IP முருகேஷ் இயக்கத்தில், லட்சுமி மேனன் – யோகி பாபு நடிக்கும்,  D இமான் இசையில் உருவாகும் படம் “மலை”

சினிமா
இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் இயக்குனர் சுசீந்திரனின் உதவியாளராக இருந்த IP முருகேஷ் முதன் முறையாக இயக்குநராக  "மலை" என்ற ஒரு படத்தை இயக்கவுள்ளார், இதில் லட்சுமி மேனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இயக்குனர் IP முருகேஷ் கூறியதாவது.. , இந்தப் படம் மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை மையமாக கொண்டு உருவாகவுள்ளது, மலை படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே இருக்கும். இந்தப் படத்தில் நடிகை லட்சுமி மேனன் நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வரும் ஒரு மருத்துவராக நடிக்கிறார், அந்த கிராமத்தில் அவருக்கு நடக்கும் நிகழ்வுகள் அவரது வாழ்க்கையை மாற்றி விடுகிறது , நடிகர் யோகி பாபு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார், லட்சுமி மேனன், யோகிபாபு இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்வு இப்படத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது, மேலும் காளி வெங்கட் கதாபாத்தி...
Maha Movies நிறுவனத்தின் பன்மொழி படைப்பான  ‘சபரி’  படத்திற்காக ஷீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்!

Maha Movies நிறுவனத்தின் பன்மொழி படைப்பான  ‘சபரி’  படத்திற்காக ஷீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்!

சினிமா
Maha Movies நிறுவனத்தின் சார்பில்,  திரு.மகேந்திர நாத் கோண்ட்லா தயாரித்து அனில்காட்ஸ் இயக்கி வரும் "சபரி" படத்தில் வரலட்சுமி சரத்குமார் இதுவரை கண்டிராத புதுமையான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை மகரிஷி கோண்ட்லா வழங்குகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இந்தப் படம், உகாதி தினத்தன்று வெகு சிறப்பாக துவங்கப்பட்டு , தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் துவக்கத்தை குறிக்கும்  போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். சுவாரசியமான இந்த போஸ்டர் பார்வையாளர்களின் கவனத்தை எளிதில் கவர்ந்து ஈர்ப்பதாக, அமைந்துள்ளது. தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, சபரி  திரைப்படம் காதல் மற்றும் க்ரைம் கலந்த  புதிரான கதையாகும், மேலும் இது ஒரு தீவிரமான உளவியல் த்ரில்லர் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்ஷெட்டி, ம...
சரண்ராஜ் இயக்கத்தில், தேவ் சரண்ராஜ் அறிமுகமாகும் புதிய படம். Soni Sri Production வழங்கும், “Production No 1“.

சரண்ராஜ் இயக்கத்தில், தேவ் சரண்ராஜ் அறிமுகமாகும் புதிய படம். Soni Sri Production வழங்கும், “Production No 1“.

சினிமா
தென்னிந்திய திரைத்துறையின் பிரபல நடிகர் சரண்ராஜ் இரண்டாவது மகன், தேவ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். பெயர் சூட்டப்படாத இந்த புதிய திரைப்படம் “Production No 1” என தயாராகிறது. Soni Sri Production நிறுவனம் தயாரிக்கிறது.   தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ், நாயாகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பத்திரத்திலும் தனி முத்திரை பதித்து, தனக்கென மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இப்படம் மூலம் இயக்குநராக கால் பதிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் அவரே எழுதுகிறார். பைலட்டாக இருந்து, கோவிட் காலத்தில் பணியினை விட்டு, நடிப்பு கல்லூரியில் சிறப்பு பயிற்சி எடுத்து கொண்டு, இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் தேவ் சரண்ராஜ். ஒரு குப்பத்தில், மீனவ இளைஞ...
“அனந்தம்” இணைய தொடரின் டீசரை வெளியிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

“அனந்தம்” இணைய தொடரின் டீசரை வெளியிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

சினிமா
ஜீ5 ஒரிஜினல் “அனந்தம்” இணைய தொடர், 2022  ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது ! தமிழ் திரையுலகின் மதிப்புமிகு இயக்குநரான மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரியா V இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட இனிமையான தொடர் “அனந்தம்”. இது 1964 - 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த , உணர்ச்சிகரமான தருணங்களை, பொழுதுபோக்குடன் தரும் ஒரு அழகான இணைய தொடராகும். ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் வீட்டை பல காலம் கழித்து பார்வையிடுவதில் இதன் கதை தொடங்குகிறது, அவர் ''அனந்தம்' ' என்று பெயரிடப்பட்ட தனது மூதாதையரின் வீட்டிற்கு மீண்டும் வருகை தருகிறார், அந்த வீட்டில் வாழ்ந்த தருணங்களின்,  ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என அனைத்தும் கலந்த நினைவுப் பயணம் தான் கதை. இந்த தொடரில் பிரகாஷ் ராஜ் முதன்மை ப...
ஜீ 5 ஓடிடி தளத்தில், நடிகர் அஜீத் குமாரின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை” 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, சாதனை படைத்துள்ளது.

ஜீ 5 ஓடிடி தளத்தில், நடிகர் அஜீத் குமாரின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை” 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, சாதனை படைத்துள்ளது.

சினிமா
தமிழகத்தின் முதன்மை நட்சத்திரங்களுல் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிப்பில், வெளியான 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான, ‘வலிமை’ சமீபத்தில் ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இப்படம் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, உலகளவில் சாதனை படைத்துள்ளது. ஜீ5 தளத்தில், “வலிமை” திரைப்படம், தமிழ், கன்னடம்,தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது தற்போது மலையாளம் மொழியிலும் இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் ஓடிடி இயங்குதளங்களின் மறுக்கமுடியாத வெற்றியாளரான ஜீ5, பல ஆண்டுகளாக அனைத்து வகையான கதைகள் மற்றும் மொழிகளில் எப்போதும் அருமையான திரைப்படங்களையும், அசல் உள்ளடக்கங்களையும் வழங்கி வருகிறது. நடிகர் அஜித் குமார் அவர்களை கௌதவபடுத்தும் வகையில், ‘வலிமை’ திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஆனதை தொடர்ந்து, டிஜிட்டலில் ஜீ5...
நடிகர் ராம் பொதினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்திலிருந்து, அவரது ஸ்டைலீஷ் போலீஸ் லுக் வெளியானது

நடிகர் ராம் பொதினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்திலிருந்து, அவரது ஸ்டைலீஷ் போலீஸ் லுக் வெளியானது

சினிமா
நடிகர் ராம் பொதினேனி நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் “தி வாரியர்” படத்தின் தயாரிப்பு தரப்பு, படத்தை பற்றிய ஒவ்வொரு அறிவிப்பிலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றனர். லேட்டஸ்டாக அவர்கள், ராம் பொதினேனி போலீஸ் சீருடையுடன் முரட்டு பைக்கை  ஓட்டுவது போன்ற ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ராம் பொதினேனி கதாபாத்திரம் அசத்தும் தோரணையுடன்  கவலையற்ற அணுகுமுறையுடனும் இருப்பதை காட்டுவதாக அமைந்துள்ளது. இப்படம் ஜூலை 14ஆம் தேதி பிரமாண்டமாக உலகமெங்கும் வெளியாகிறது. இப்படம் பெரிய திரைக்கு வரும்போது திரையரங்குகளில் ஆக்‌ஷன் திருவிழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Srinivasaa Silver Screen  பேனரில் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை  தயாரிக்கிறார், பவன்குமார் வழங்குகிறார். இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி அதி பயங்கர வில்லனாக நடிக்கிறார். 20...
இயக்குநர் வம்சி- ரவி தேஜா கூட்டணியின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ ப்ரீ லுக் வெளியானது

இயக்குநர் வம்சி- ரவி தேஜா கூட்டணியின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ ப்ரீ லுக் வெளியானது

சினிமா
ரவி தேஜாவின் அதிரடி ஆக்‌ஷனில் ‘டைகர் நாகேஷ்வரராவ்’ தெலுங்கு சினிமாவின் ’மாஸ் மஹாராஜா’ ரவி தேஜா, செம ஹிட்கள் அடித்த இயக்குநர் வம்சி கூட்டணியில் , அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பான் இந்தியன் படமான ’டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் ப்ரீ-லுக் இன்று வெளியிடப்பட்டது. விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட,, அதே சமயம் வணிக ரீதியாக ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் இக்கூட்டணியின் மிக பிரம்மாண்டமான இப்படத்தை பெரும்பொருட்செலவில் தயாரிக்கிறது.. டோலிவுட்டின் மிக விஷேசமான பண்டிகையான உகாதியை முன்னிட்டு இப்பபடத்தின் ப்ரீ லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர் தேஜ் நாராயண் அகர்வால் வெளியிட்டார், பின்னால் அதிவேகமாக ரயில் வந்துகொண்டிருக்க...உயிரை துச்சமாக மதித்து கையில் சாட்டையுடன் ர...
ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ்

ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ்

சினிமா
கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 1ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து செல்பி திரைப்படத்தை நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை வர்ஷா பொல்லம்மா, இயக்குனர் மதிமாறன், நடிகர் டி ஜி குணாநிதி மற்றும் தயாரிப்பாளர் டி.சபரீஷ் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். படத்தின் இடைவேளையில் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்ப...