பிரமாண்ட கிராபிக்ஸ் செலவில் தயாராகும் “நாகா”
பிரமாண்ட கிராபிக்ஸ் செலவில் தயாராகும் "நாகா".இப்படத்தில் நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார்.
'அடிதடி', 'மகா நடிகன்', 'ஜன்னல் ஓரம்', ' குஸ்தி', 'பாஸ்கர் தி ராஸ்கல்' போன்ற பல படங்களை தயாரித்த கே.முருகன் , எம்.எஸ்.மூவீஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் "நாகா".
ஏற்கனவே, பிரபுதேவா, மகிமா நம்பியார் நடிக்கும் 'கருட பஞ்சமி' படத்தை தயாரித்து வருகிறார். இரண்டாவது படைப்பாக "நாகா" படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில், பெண்களின் மானத்தை காப்பாற்ற மானசா தேவி நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார். பிரபல நடிகையான இவர், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கினார். இப்பொழுது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அசத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். இதை முடித்து கொண்டு வந்த பின் இப் படத்தின் படபிடிப்பில் கலந்து கொள்கிறார்.இதே போல் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கல...









