Friday, February 7

கோடை காலத்தில் ஏற்படும்  உடல் சூட்டை தணிக்க உதவும் சுரைக்காய் தோசை

கோடை காலத்தில் ஏற்படும்  வெப்பம் காரணமாக  நமது உடல் சூட்டை அதிகரிப்பதால் பல வெப்ப நோய்கள்  நம்மை தாக்குவது உண்டுஅது போன்ற காலங்களில் உடல் சூட்டை தணிக்க உதவும் காய் மற்றும் பழங்களை நாம்  உணவில் அதிகம்  சேர்த்து கொள்ள வேண்டும்  உடல் சூட்டை குறைக்க  உதவும் காய்களில் ஒன்றான சுரைக்காயை பயன்படுத்தி தோசை  செய்து சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகவும் நன்மை தரும்.

சுரைக்காய் தோசை செய்வது எப்படி ?

செய்முறை.

சுரைக்காய் அரை கிலோ , அரிசி 1 கிலோ .

அரிசியை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் .பின்பு

சுரைக்காய் மீது உள்ள தோல் சீவிவிட்டு மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். (அல்லது ) கிரைண்டரில் அரிசி அரைக்கும் போது கடைசியாக சுரைக்காய் சேர்த்து அரைத்து கொள்ளலாம். மாவுடன் சேர்த்து கலந்த பின் மிதமான புளிப்பு வரும்வரை வைத்திருக்கவும். அதன் பின் தோசை வார்க்கும் பக்குவம் வந்தபின் தோசை வார்த்து எடுக்கவும் .

சுரைக்காய் தோசைக்கு சுவையான சட்டினி செய்வது எப்படி ?

தக்காளி – 6

பூண்டு  -3

இஞ்சி துண்டு – 3

புதினா மற்றும் கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு .

புளி – நெல்லிக்காய் அளவு

காரத்திற்கு ஏற்ற அளவு வரமிளகாய் .

வாணலில் சிறிதுஅளவு எண்ணெய் ஊற்றி முதலில் மிளகாய் , பூண்டு , இஞ்சி , புளி , தாய்களி மற்றும் புதினா கொத்தமல்லி போட்டு வதக்கவும் .

பின்பு ஆறவைத்து மிச்சியில் அரைத்துக்கொள்ளவும் . பின் வாணலில் சிறிதுஅளவு எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து 5 நிமிடத்திற்கு பிறகு இறக்கவும் . சுவையான சட்டினி ரெடி.

அனைத்து வயதினருக்கும் ஏற்ற இந்த தோசை  சிற்றுயிண்டியினை காலை மற்றும் இரவு
நேரங்களில் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வோம் .

Spread the love