இயக்குநர் ராம்-நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு
'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம். பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் நிவின்பாலி.
"மாநாடு" படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவர்கள் இருவரது கூட்டணியில் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார்..
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்கள...









