Thursday, April 23

Author: admin

Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட டிரெய்லர் நாளை வெளியாகிறது !

Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட டிரெய்லர் நாளை வெளியாகிறது !

சினிமா
நடிகர் RJ பாலாஜி நடித்துள்ள “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (மே 25, 2022) வெளியாக உள்ளது. RJ.பாலாஜி-N J.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் இணைந்து Romeo Pictures தயாரித்துள்ளது. பிளாக்பஸ்டர் இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்தப் படத்தில் RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் சில முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை நாளை (மே 25, 2022) வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர். படம் குறித்து RJ.பாலாஜி கூறுகையில்.., Zee Studios & Romeo Pictures நிறுவனங்களுடன் இணைந்து போனி கபூர் சாரின் BayView Projects ...
தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’-யின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’-யின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

சினிமா
இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ படப்பிடிப்பு நிறைவு, இறுதிகட்ட பணிகளில்... ’கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். விருதுநகரில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களான M.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராக மாறியுள்ள வசந்தபாலனின் முதல் தயாரிப்பான ’அநீதி’ திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளதோடு, கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார். இயக்குநர் வசந்தபாலனால் ’வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ‘இசை அசுரன்’ G.V.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்...
மே-27ல் வெளியாகும் விஷமக்காரன்

மே-27ல் வெளியாகும் விஷமக்காரன்

சினிமா
ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய் குப்புசாமி). அனிகா விக்ரமன் மற்றும் வலிமை புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். வரும் மே-27ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது. பொதுவாகவே ஒரு வெற்றிப்படத்திற்கான கதை எப்படி இருக்க வேண்டும், அதற்கான பட்ஜெட் எந்த அளவுக்குள் இருக்கவேண்டும் என்பதை கணிப்பதில் தான் பலர் கோட்டை விடுகின்றனர். ஆனால் இந்தப்படத்தின் இயக்குனரான வி, ஐடி துறையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என்பதால் இதற்காக தனியாக 'ஹனிபிலிக்ஸ்’ என்கிற ஒரு சாப்ட்வேரையே உருவாக்கினார். ஒரு படம் துவங்குவதற்கு தேவையான பட்ஜெட், ஸ்க்ரிப்ட், கால்ஷீட், செலவுகள் என அனைத்தையும் இந்த சாப்ட்வேரே உருவாக்கி தந்து விடுமாம். ஆச்சர்யமாக இந்த சாப்ட்வேர் வகுத்து க...
நடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’ பட தொடக்க விழா

நடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’ பட தொடக்க விழா

சினிமா
நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒயிட் ரோஸ்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை 'கயல்' ஆனந்தி முக்கியமான வேடத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ். ஆர். ஜாங்கிட் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி. என். கபிலன் கவனிக்க, சண்ட...
பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார், பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தை துவங்கியுள்ளார் !

பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார், பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தை துவங்கியுள்ளார் !

கல்வி, செய்திகள்
பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள் திருமதி மல்லிகா ரவிக்குமார், பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் நோக்கம்  பெண்களுடைய மனதின்  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும். சத்யபாமா பல்கலைக்கழகத்தின் எம்.டி திருமதி மரியா ஜீனா ஜான்சன்., நேச்சுரல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி C.K. குமாரவேல், இந்தியாவின் லைஃப் கோச்சிங் பயிற்சியாளர் புஜா புனீத் மற்றும் Successgyan India வின் நிறுவனர் சுரேந்திரன் ஜெயசேகர் ஆகியோர் இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், ‘ஒரு குழந்தை பிறந்தால், அது அழும் போது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.  அந்த குழந்தை படிப்படியாக, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்  வளர்வதை பார்த்து, ஒவ்வொரு பெற்றோரும் மகிழ்ச்சியடைகிறார்கள். அதுபோல் இன்று, ஒரு தந்தையாக, எனது குழந்தை மல்லிகா ஒரு சிறந்த திறமை...
நடிகர் அருள்நிதி இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணி மீண்டும், ‘டிமான்டி காலனி’  இரண்டாம் பாகத்திற்காக இணைந்துள்ளனர் !

நடிகர் அருள்நிதி இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணி மீண்டும், ‘டிமான்டி காலனி’  இரண்டாம் பாகத்திற்காக இணைந்துள்ளனர் !

சினிமா
நடிகர் அருள்நிதி & இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணி  ரசிகர்களை உறைய வைத்த அமானுஷ்ய த்ரில்லரான “டிமான்டி காலனி” (மே 22, 2015)  படத்தினை வழங்கினர், தற்போது படத்தின் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2" படத்திற்கான அறிவிப்பு முதல் பாகம் வெளிவந்து 7வது ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி,  இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். நடிகர் அருள்நிதி, தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடன் செயல்பட்டு, திரையுலகில் ஒரு பெரிய நிலையை அடைந்துள்ளார். தனித்துவமான திரைக்கதைகளைக் கொண்ட எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் தங்கள் திரைக்கதைகளை கூற ‘முதல் இலக்கு’ என்று அவரைப் பாராட்டுவதுடன்,  தயாரிப்பாளர்கள், விநிய...
‘மன்னிப்பு’ என்ற அழகான பாடல் மூலம்,  சுயாதீன இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி !

‘மன்னிப்பு’ என்ற அழகான பாடல் மூலம்,  சுயாதீன இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி !

சினிமா
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல சார்ட்பஸ்டர் பாடல்களுக்குப் பின்னால் உள்ள மாயாஜாலக் குரலுக்கு சொந்தக்காரரான பின்னணிப் பாடகி ரனினா ரெட்டி, ஒரு சுயாதீன இசைக் கலைஞராக வேண்டும் என்ற தனது நீண்ட காலக் கனவை இப்போது நிறைவேற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இயற்கை அன்னையின் அழகை அங்கீகரித்து ‘மன்னிப்பு’ என்ற அழகிய சுயாதீன ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார். இது குறித்து ரனினா கூறுகையில் “இந்தப் பாடலை 16 வயதில் இசையமைத்தேன் மற்றும் இந்த பாடல் எனது ஆத்மாவின் ஆழத்தில் இருந்து உருவானது. பெல்காமில் வேறு பாடலுக்கு இசையமைக்கும் போது இந்த அற்புதம் நடந்தது. அந்தி நேரத்தில் நிலவொளியை ரசித்துக்கொண்டிருந்தேன். நான் நிலாவை பார்த்து எனது  நன்றியுணர்வை வெளிப்படுத்தினேன், கடவுளுக்கு எனது நன்றி உணர்வை வெளிப்படுத்தினேன். ஒளி போன்ற அத்தியாவசியமான ஒன்றை இயற்கை நமக்கு எவ்வா...
நடிகர் ரஹ்மான்  பிறந்த நாளையொட்டி ,காப்பகங்களில் சேவை செய்து அவரது ரசிகர்கள்  பிறந்த நாள் கொண்டாடினார்கள்.

நடிகர் ரஹ்மான் பிறந்த நாளையொட்டி ,காப்பகங்களில் சேவை செய்து அவரது ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாடினார்கள்.

சினிமா
இன்று (மே 23) நடிகர் ரஹ்மான் பிறந்த நாள். மலையாளத்தில் அறிமுகமாகி அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் ரஹ்மான். கேரள ரசிகர்கள் இவரை எவர் க்ரீன் ஹீரோ என்றே அழைக்கிறர்கள். இவரது பிறந்த நாளை, தமிழ் மற்றும் கேரளாவில் உள்ள ரசிகர் மன்றங்கள் கொண்டாடி வருகிறா்கள். அவரது ரசிகர்கள் முதியோர்,ஆதரவற்றோர், மனநலம் குன்றியோர் , அனாதை இல்லங்களில் பொது தொண்டு செய்து வருகிறார்கள். இன்று கேரளா மாநிலம் திரிச்சூர் அருகே உள்ள ஶ்ரீபார்வதி சேவா நிலையம் மன நல மற்றும் முதியோர் காப்பகத்தில் சேவை செய்து ரசிகர்கள் ரஹ்மானின் பிறந்த நாள் கொண்டாடினார்கள். இவர் இப்பொழுது, தமிழில் பொன்னியின் செல்வன், நிறங்கள் மூன்று, மலையாளத்தில் ‘சமாறா எதிரே’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.டைகர் ஷெராப்புடன் ‘கண்பத்” என்ற இந்தி படத்தில் இன்று படபிடிப்பில் உள்ளார்....
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு ஹீரோ உருவாகிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு ஹீரோ உருவாகிறார்.

சினிமா
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் தர்சன் கணேசன் ஹீரோவாக விரைவில் அறிமுகம். சிவாஜி கணேசன் மகன் ராம்குமாரின் இரண்டாவது மகன் தர்சன் கணேசன் நடிக்க வருகிறார்.ஏற்கனவே மூத்தவர் துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவரும் தெரிந்தது.அவருக்கு அடுத்தவர் தர்சன் கணேசனும் நடிக்க வருகிறார். பூனேயில் நடிப்பு பயிற்சி எழுத்துக் கொண்டு , தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்கள் அரங்கேற்றி விட்டு தகுந்த பயிற்சியுடன் உள்ளார். அவருக்கு பல கம்பெனிகள் அழைப்பு  விடுத்துள்ளார்கள். விரைவில் முறைப்படி அவர்கள் அறிவிப்பார்கள் என தெரிகிறது. தாத்தா போலவே தெருக் கூத்து நாடகத்தில் நடித்து, அன்னை இல்லத்திலிருந்து மீண்டும் ஒரு நடிகர் உருவாகிறார்.  ...
திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவனுக்கு விலையுயர்ந்த பிரீமியம் கைக்கடிகாரத்தை  தனது அன்பின் அடையாளமாக வழங்கியுள்ளார் கார்த்தி.

திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவனுக்கு விலையுயர்ந்த பிரீமியம் கைக்கடிகாரத்தை தனது அன்பின் அடையாளமாக வழங்கியுள்ளார் கார்த்தி.

சினிமா
 யுவன் சங்கர் ராஜாவை நெகிழ வைத்த நடிகர் கார்த்தி உண்மையான நட்பை போற்றுவதில், பொக்கிஷமாகப் பாதுகாப்பதில் பெயர் பெற்ற நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது நெருங்கிய நண்பரான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிரீமியம் கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். கார்த்தியின் பருத்திவீரன், நான் மகான் அல்ல, பையா, பிரியாணி மற்றும் வெளியாகவிருக்கும் விருமன் உள்ளிட்ட படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்களை இசையமைத்திருப்பவர் யுவன். அவருக்கு இந்த விலையுயர்ந்த பரிசை தனது அன்பின் அடையாளமாக வழங்கியுள்ளார் கார்த்தி. கார்த்தி மற்றும் யுவன் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதும், அந்தப் பருவத்திலிருந்தே இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவனுக்கு விலையுயர்ந்த பிரீமியம் கைக்கடிகாரம் தந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் கார்த்தி. விருமன் படத்தின...