K4 Kreations தயாரிப்பாளர் கேசவன் வழங்கும்,SP Cinemas வெளியீட்டில்,அசோக் செல்வன் நடிக்கும் “வேழம்” திரைப்படம் ஜூன் 24, 2022 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !
தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனைகள் செய்து புகழ்பெற்று விளங்கும் திரு.கேசவன், தமிழ்த் திரையுலகில் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தயாரிப்பாளராக ‘வேழம்’ படம் மூலம் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 10 வருடங்களாக உதவி இயக்குனராகவும், விளம்பரப் பட இயக்குநராகவும், குறும்படத் இயக்குநராகவும் பரந்த அனுபவமுள்ள சந்தீப் ஷ்யாம், இந்தப் படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பிடத்தக்க வகையில், வணிக ரீதியாக எண்ணற்ற உள்ளடக்கம் சார்ந்த, வெற்றிகரமான பொழுதுபோக்கு திரைப்படங்களை தயாரித்து, விநியோகித்த SP Cinemas, ‘வேழம்’ படத்தின் உலகளாவிய திரையரங்கு உரிமையைப் பெற்றுள்ளது. “வேழம்” திரைப்படம் ஜூன் 24...









