இன்று (மே 23) நடிகர் ரஹ்மான் பிறந்த நாள்.
மலையாளத்தில் அறிமுகமாகி அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் ரஹ்மான். கேரள ரசிகர்கள் இவரை எவர் க்ரீன் ஹீரோ என்றே அழைக்கிறர்கள். இவரது பிறந்த நாளை,
தமிழ் மற்றும் கேரளாவில் உள்ள ரசிகர் மன்றங்கள் கொண்டாடி வருகிறா்கள். அவரது ரசிகர்கள் முதியோர்,ஆதரவற்றோர், மனநலம் குன்றியோர் , அனாதை இல்லங்களில் பொது தொண்டு செய்து வருகிறார்கள். இன்று கேரளா மாநிலம் திரிச்சூர் அருகே உள்ள ஶ்ரீபார்வதி சேவா நிலையம் மன நல மற்றும் முதியோர் காப்பகத்தில் சேவை செய்து ரசிகர்கள் ரஹ்மானின் பிறந்த நாள் கொண்டாடினார்கள்.
இவர் இப்பொழுது, தமிழில் பொன்னியின் செல்வன், நிறங்கள் மூன்று, மலையாளத்தில் ‘சமாறா எதிரே’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.டைகர் ஷெராப்புடன் ‘கண்பத்” என்ற இந்தி படத்தில் இன்று படபிடிப்பில் உள்ளார்.