Thursday, April 23

Author: admin

RS Infotainment Pvt Ltd தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும்,இளையராஜா இசையமைப்பில்,விஜய் சேதுபதி – சூரி நடிக்கும்,இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை !

RS Infotainment Pvt Ltd தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும்,இளையராஜா இசையமைப்பில்,விஜய் சேதுபதி – சூரி நடிக்கும்,இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை !

சினிமா
இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, யாமிருக்க பயமே போன்ற உள்ளடக்கத்தில் சிறந்த பிளாக்பஸ்டர் படங்களைத் தந்த RS Infotainment Pvt Ltd சார்பில் திரு. எல்ட்ரெட் குமாரால் தயாரிக்கப்படும், 'விடுதலை' திரைப்படம், இந்திய மொழிகளில் வெளியாக தயாராகி வருகிறது. உலக தரத்தில் இணையற்ற படைப்புகளை உருவாக்குவதில் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களின் கவனம் குவிய, முக்கிய காரணமாக விளங்குகிறார். விடுதலை படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் மேலும் பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், சேத்தன் மற்றும் மிகவும் பிரபலமான நம்பிக்கைக்குரிய பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ...
RRR நாயகன் ஜீனியர் என் டி ஆர்,  கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்கும் NTR31 படத்தின் போஸ்டர் வெளியானது !

RRR நாயகன் ஜீனியர் என் டி ஆர்,  கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்கும் NTR31 படத்தின் போஸ்டர் வெளியானது !

சினிமா
RRR மற்றும் KGF அத்தியாயம் 2 ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரு முக்கிய தூண்களான,  ஜூனியர் NTR மற்றும் பிரசாந்த் நீல்,  ஆகியோர் Mythri Movie Makers & NTR Arts தயாரிக்கும் NTR31 இல் இணைந்துள்ளனர். ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் முதல் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இரத்தத்தில் நனைந்த மண் மட்டுமே நினைவில் கொள்ளத்தக்கது!!! அவனது மண்..... அவனது ஆட்சி ஆனால் சிந்தியது  அவனுடைய இரத்தம் அல்ல.... திரைப்பட ஆர்வலர்கள் முதல் திரைப்பட விமர்சகர்கள் வரை, உலகெங்கிலும் உள்ள மக்கள் RRR மற்றும் KGF படத்தின் மீது தொடர்ந்து பாராட்டுக்களையும் அன்பையும் பொழிந்து வருகின்றனர். இரண்டு படங்களும் ரசிகர்களின்  இதயங்களை வென்றதோடு, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளன. பார்வையாளர்கள் இப்போது NTR31 இல் அவர்களது கவனத்தை குவித்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை, மேலும...
”இதயத்தை விட்டு என்றும் நீங்காத படம்” ‘சாணி காயிதம்’ வெற்றி குறித்து செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்

”இதயத்தை விட்டு என்றும் நீங்காத படம்” ‘சாணி காயிதம்’ வெற்றி குறித்து செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்

சினிமா
அருண் மாதேஸ்வரனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’சாணி காயிதம்’ படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் மே 6 அன்று வெளியிடப்பட்டது, பழிவாங்கும் அதிரடி ஆக்‌ஷன் படமான அது ஒவ்வொரு சினிமா ரசிகரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடினமான கதையாகவும், புத்திசாலித்தனமான மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் சினிமாவாகவும் இருப்பது போக, அனைவருக்கும் பிடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோரின் வித்தியாசமான நடிப்புக்காகவும் படம் மிகவும் சிலாகிக்கப்பட்டது. ’சாணிகாயிதம்’படம் தொடங்கப்பட்டதில் இருந்தே, ரசிகர்களும் சமூக வலைதளவாசிகளும் செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சர்யமான நிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக சங்கையாவாக வாழ்ந்த இயக்குநர் செல்வராகவனின் பாத்திரச் சித்தரிப்பை பலரும் வியந்து பாராட்டியது குறிப்பிடத்தக்...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம்,  விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான,  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தினை மே 27 ஆம் தேதி பிரத்யேகமாக வெளியிடுகிறது !

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம்,  விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான,  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தினை மே 27 ஆம் தேதி பிரத்யேகமாக வெளியிடுகிறது !

சினிமா
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான, இவ்வாண்டின் மிகச்சிறந்த ரோம் - காம் பொழுதுபோக்குத் திரைப்படமான,  'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம்,  மே 27 ஆம் தேதி பிரத்யேகமாக தங்களது ஒடிடி தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் ரசிகர்களுக்கு தொடர்ந்து சிறந்த கதைகள்  மற்றும் ஒரிஜினல் திரைப்படங்களை வழங்குவதன் மூலம் தமிழகத்தில் சிறந்த ஓடிடி தளமாக புகழ் பெற்று வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான ‘டாணாக்காரன்’ விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.  தற்போது மே 27, 2022 அன்று இந்த ஆண்டின் மிகப்பெரிய ரோம் - காம் பொழுதுபோக்குத் திரைப்படமான  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தினை ரசிகர்களுக்கு வழங்குவதில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெருமை கொள்கிறது. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ரிலீஸுக்கு முந்தைய க...
‘துடிக்கும் கரங்கள்’ படத்திற்காக நிருபராக மாறிய விமல்..!

‘துடிக்கும் கரங்கள்’ படத்திற்காக நிருபராக மாறிய விமல்..!

சினிமா
'ஓடியன் டாக்கீஸ்' சார்பாக கே.அண்ணாத்துரை தயாரிப்பில் விமல் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’.( Thudikkum Karangal ) மும்பையை சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளதுடன், கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தை இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ளதுடன், இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுளார்.. இவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, நந்தா பெரியசாமி, 'வெற்றிவேல்' இயக்குனர் வசந்தமணி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர். கனவு என்கிற குறும்படத்தை இயக்கியதற்காக கனடா சர்வதேச திரைப்பட விருது பெற்றவர். இந்தப்படம் குறித்து இயக்குனர் வேலுதாஸ் கூறும்போது, “இந்தப்படத்தில் யூடியூப் சேனல் நடத்தும் நிருபராக விமல் நடித்துள்ளார். அவரது நண்பராக...
கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சினிமா
கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது. இயக்குனர் பா.இரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் படங்கள் தயாரித்து வருகிறார். தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பரியேறும்பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் வெளிவந்தன.இதனைதொடர்ந்து சேத்துமான், பொம்மை நாயகி, ஜெ.பேபி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. இன்னிலையில் பா.இரஞ்சித் ”நீலம் ஸ்டுடியோ” எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியிருக்கிறார் . இந்த நிறுவனத்தோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ”வேட்டுவம் ” எனும் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. வேட்டுவம் பட...
ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பெரியாண்டவர்’

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பெரியாண்டவர்’

சினிமா
ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமராங், தள்ளிப் போகாதே போன்ற பல படங்களை டைரக்ட் செய்த ஆர்.கண்ணன் இயக்கும் 12வது படத்திற்கு "பெரியாண்டவர்" என்று பெயர் வைத்துள்ளார். இவர் இப்பொழுது , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்'தி கிரேட் இந்தியன் கிச்சன்', மிர்ச்சி சிவா நடிக்கும் 'காசேதான் கடவுளடா' படங்களை டைரக்ட் செய்து முடித்து, வெளியிடும் வேலைகளை செய்துவருகிறார். இதில் சிவன் வேடம் அணிந்து கதை நாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. இது ஒரு டைம் டிராவ்லர் படம். வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகும் இப்படம், யோகிபாபு நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, தர்மபிரபு, மண்டேலா பட வரிசையில் இப்படம் அமைந்திருக்கும். நாயகியாக முன்னணி நடிகை தேர்வு மற்றும் உள்ள நட்சத்திர தேர்வு நடைபெறுகிறது.இதன் படபிடிப்பு சம்மர் முடிந்ததும் ஆரம்பமாகிறது. யோகிபாபு சிவன் வேடம் ஏற்று நடிப்பதால், சிவன் கோவில் செட் ஒன்று ECR ரோட்...
ரஷ்யாவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது ‘கைதி’

ரஷ்யாவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது ‘கைதி’

சினிமா
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஒரு படத்துக்கு வரவேற்பு கிடைப்பது என்பது மிகவும் அபூர்வம். 2019-ம் ஆண்டில் இந்த அபூர்வம் ‘கைதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நிகழ்ந்தது. அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. வித்தியாசமான கதைக்களங்களைத் தொடர்ச்சியாக வெற்றிகரமாகத் தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘கைதி’. கார்த்தியின் அசாத்திய நடிப்பில் உருவான இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் நரேன், அர்ஜுன் தாஸ், பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முன்னணி நாயகனின் படத்தில் நாயகி கிடையாது, பாடல்கள் கிடையாது உள்ளிட்ட பல புதுமையான விஷயங்கள் இந்தப் படத்தில் கையாளப்பட்டது. கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்த படம் ‘கைதி’ என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெ...
’மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

’மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா
முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ‘மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது. 21 வயதே ஆன புதிய அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயண் மிக வித்தியாசமான கதைக்களத்தில், பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆட்டோகிராஃப் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இயக்கியிருக்கும் படம் ‘மாலைநேர மல்லிப்பூ’. பாலியல் தொழிலாளி பாத்திரத்தில், பிரபல தியேட்டர் ஆர்டிஸ்டான வினித்ரா மேனன் நடித்துள்ளார். அவரது பத்து வயது மகனாக குழந்தை நட்சத்திரம் அஸ்வின் நடித்துள்ளார். மிக இளம் வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட லட்சுமியின் வாழ்வின் சில குறிப்பிட்ட காலங்களை, ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குநர் சஞ்சய், அத்தொழிலில் அவர் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவரது வீட்டு உரிமையாளர், சக பாலியல் தொழிலாளிகள் ஆகியோருடன் அவருக்கு நிகழும் அனுபவங்களை மிக நேர்மையாக காட்சிப்படுத்தியுள்ளார். இந்த சூழலில், தனது இருட்டான பக்கங்களை மறை...
ஷிவானி ஸ்டுடியோஸ்  படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரிப்பில், ஷிவானி செந்தில் இயக்கியுள்ள ‘டேக் டைவர்ஷன்’ படத்தின் பத்திரிகையாளர்  சந்திப்பு

ஷிவானி ஸ்டுடியோஸ் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரிப்பில், ஷிவானி செந்தில் இயக்கியுள்ள ‘டேக் டைவர்ஷன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

சினிமா
ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் டைவர்ஷன்’. இதில் கே ஜி எஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார். 'கார்கில்' படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கியுள்ளார்.விரைவில் வெளியாகவிருக்கும் 'டேக் டைவர்ஷன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குநர் பேரரசு, இயக்குநர் 'எத்தன்' சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். படக்குழுவினரை வாழ்த்தி இயக்குநர் பேரரசு பேசுகையில், '' இப்படத்தின் கதாநாயகன் சிவக்குமார், தமிழ் சினிமாவின் 'என்றும் மார்க்கண்டேயன்' ஆன சிவகுமாரைப் போல் இவரும் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன். நாயகன் சிவக்குமார் பேசும்போது, 'என்னுடைய தாயார்...