ஒரு பாடல் தவிர்த்து, சமந்தாவின் “யசோதா” படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது,!!
முன்னதாக வெளியான சமந்தாவின் 'யசோதா' படத்தின் ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸே இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படக்குழு தற்போது ஒரு பாடலைத் தவிர்த்து, முழு படப்பிடிப்பிபையும் முடித்துள்ளது.
மூத்த தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் Sridevi Movies தயாரிப்பு நிறுவனம் சார்பில் தங்களின் 14வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். திறமையான இயக்குநர் கூட்டணியான ஹரி-ஹரிஷ் இணைந்து இப்படத்தை இயக்குகிறார்கள்
தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் கூறுகையில்..,
இப்படத்தை எந்த சமரசமும் இல்லாமல் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறோம். இதுவரை 100 நாட்கள் கடந்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் ஓர் பாடல் தவிர்த்து படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துவிட்டது. ஒரு பாடலின் படப்பிடிப்பிற்காக சிஜி வேலைகள் ஏற்கனவே நடந்து வருகிறது. இம்மாதம் 15ஆம் தேதி முதல் டப்பிங் ...









