Wednesday, October 9

விஜய் ஆண்டனியின் “மழை பிடிக்காத மனிதன்” படத்தில் பிருத்வி அம்பருக்கு நடிகர் நகுல் டப்பிங் பேசியுள்ளார்.

கமல் போஹ்ரா, ஜி. தனஞ்சயன், பிரதீப் B மற்றும் Infiniti Film Ventures பங்கஜ் போரா ஆகியோரின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் வரவிருக்கும்,  பெரிய பட்ஜெட் படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பரின் காட்சிகளுக்கு, பன்முக திறமை கொண்ட நடிகர் நகுல் தமிழில் டப்பிங் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பன்முக நடிகரான நடிகர் நகுல், திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு என எந்த ஒரு அரங்கிலும் தனது திறனை வெளிக்கொண்டுவர தவறியதில்லை. அவர்  தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைக்கதைகள், அவர் கதாப்பாத்திரத்திற்காக தரும் உழைப்பும் அர்ப்பணிப்பும் அவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.

தமிழ் திரையில் நடிகராக மட்மில்லாமல், பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பின்னணிப் பாடகராகப் பணியாற்றி கவனத்தை ஈர்த்தவர். அவர் பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கூட்டத்தின் பணியாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இப்போது, நடிகர் விஜய் ஆண்டனி நடித்த “மழை பிடிக்காத மனிதன்” படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பருக்கு டப்பிங் செய்து திரைத்துறையில் ஒரு புதிய பாத்திரத்தை ஏற்றுள்ளார். படக்குழுவினர் தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான நடிகர்களான நகுல் மற்றும் பிருத்வி அம்பர் ஆகியோரை ஒன்றிணைத்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் மில்டன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும், மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும், சரத் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். மேலும், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி மற்றும் இயக்குனர் ரமணா ஆகியோர் நட்சத்திர பட்டாளத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், Infiniti Film Ventures நிறுவனம் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர், டிரெய்லர் & ஆடியோவை விரைவில் வெளியிடவுள்ளது.

Spread the love