Thursday, April 23

Author: admin

 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று புதிய சாதனை படைத்த ‘விக்ரம்’

 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று புதிய சாதனை படைத்த ‘விக்ரம்’

சினிமா
விக்ரம் திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜூலை 8, 2022 அன்று பிரத்யேகமாக வெளியானது. 2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய பான்-இந்திய திரைப்படமாக, இந்திய பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த பிளாக்பஸ்டர் “விக்ரம்” திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஓடிடி பிரீமியர் மூலம் பல சாதனைகளை முறியடித்து, பம்பர் ஓப்பனிங்கை பதிவுசெய்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் மிகப்பெரிய சாதனைகளை முறியடித்ததாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றான “விக்ரம்” தனது பிளாக்பஸ்டர் ஓட்டத்தை ஓடிடியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரசிகர்கள் இந்த ஓடிடி ரிலீஸை உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடுகிறார்கள். மெகா ஆக்‌ஷன் திரைப்படத்திலிரு...
 ஜீ 5 தளம், இந்த ஆண்டின் மிகவும் கொண்டாடப்பட்ட தமிழ் குடும்ப பொழுதுபோக்கு படமான ‘வீட்ல விசேஷம்’ படத்தை, ஜூலை 15, 2022 முதல், உலகம் முழுக்க திரையிடுகிறது !!

 ஜீ 5 தளம், இந்த ஆண்டின் மிகவும் கொண்டாடப்பட்ட தமிழ் குடும்ப பொழுதுபோக்கு படமான ‘வீட்ல விசேஷம்’ படத்தை, ஜூலை 15, 2022 முதல், உலகம் முழுக்க திரையிடுகிறது !!

சினிமா
ஜீ 5 தளம் தனது அடுத்த பெருமை மிகு வெளியீடாக சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் எண்டர்டெயினர், அட்டகாசமான குடும்ப பொழுது போக்கு திரைப்படமான ‘வீட்ல விசேஷம்’ படத்தை ஜூலை 15, 2022 முதல், உலக பிரீமியர் செய்கிறது. பதாய் ஹோ, எனும் ப்ளாக்பஸ்டர் இந்தி திரைப்படத்தின் அதிகாரபூர்வமான தழுவலான இப்படத்தில், ஆர்ஜே பாலாஜி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் NJ சரவணனுடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு நடுத்தர வயது தம்பதி கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் போது, அது அவர்களின் வளர்ந்த மகன்களை சங்கடப்படுத்துகிறது. இந்த குழப்பங்களை கடந்து அந்த குடும்பத்தில் எப்படி சிரிப்பு மலர்கிறது எனும் கதை, உறவுகளின் அழகை வலியுறுத்துவதன் மூலம் நகைச்சுவை மற்றும் இதயத்தைத் தொடும் உணர்ச்சிகளின் மிகுதியாக இப்படத்தில் விவரிக்கப்பட்...
ஓடிடி தளத்தில் வெளியாகும் மாமனிதன்

ஓடிடி தளத்தில் வெளியாகும் மாமனிதன்

சினிமா
சீனுராமசாமி இயக்கத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் மாமனிதன் திரைப்படம் விஜய்சேதுபதி நடித்த முக்கிய படங்களில் ஒன்றாகும். ஒரு மனிதனின் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மதங்கள் கடந்த நட்பால் அன்பால் எவ்வாறு எதிர் கொண்டு கடக்கிறான் என்பது படத்தின் ஒன்லைனாக இருக்கிறது. மாமனிதன் திரைப்படம் aha ஓடிடி தளத்தில் ஜூலை 15 வெளிவருவது ஒட்டி சென்னை தாகூர் பிலிம் சென்டரில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஆர்.பத்ரி,இராஜசேகரன் ( மார்க்சிஸ்ட்) காங்கிரஸ் கட்சி சார்பாக எஸ்.திருநாவுக்கரசர், இதயதுல்லா,மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் ஜவாஹிருல்லா,அப்துல்சமத்,பிரபல பத்திரி்கையாளர் விஜயசங்கர்,தமிழ்வேள்வி சதுரர் சத்தியவேல்முருகனார்,திரைக் கலைஞர்கள் விமல்,கலா,இயக்குநர்கள் பிருந்தாசாரதி,மணிபாரதி,தமயந்தி,தமிழக மக்கள் ஒற்றுமை மேடை க.உதயகுமார்,லயோலா திருச்சபை ...
உறியடி விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இப்படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார்.

உறியடி விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இப்படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார்.

சினிமா
உறியடி விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இப்படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார். கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்ப பாங்கான திரைப்படமாகவும், ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். 96 படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வஸந்தா இசையமைக்கிறார். CS பிரேம் குமார் எடிட்டராகவும், ஸ்டன்னர் சாம் சண்டை பயிற்சியாளராகவும், ஏழுமலை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனங்...
கோப்ரா’வில் ஏழு கேரக்டர்களுக்கும் வித்தியாசமாக பின்னணி பேசியிருக்கிறேன்- சீயான் விக்ரம்

கோப்ரா’வில் ஏழு கேரக்டர்களுக்கும் வித்தியாசமாக பின்னணி பேசியிருக்கிறேன்- சீயான் விக்ரம்

சினிமா
‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ்சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 'கோப்ரா' படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்...
ZEE Studios, Trident Arts and Naad Sstudios பெருமையுடன் வழங்கும்  ‘லேடி சூப்பர்ஸ்டார் 75’

ZEE Studios, Trident Arts and Naad Sstudios பெருமையுடன் வழங்கும்  ‘லேடி சூப்பர்ஸ்டார் 75’

சினிமா
ZEE Studios, Trident Arts and Naad Sstudios பெருமையுடன் வழங்கும்  ‘லேடி சூப்பர்ஸ்டார் 75’ ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’, இன்று காலை (ஜூலை 12, 2022) எளிமையான பூஜையுடன்  துவங்கப்பட்டது. ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரைத்துறையில் கோலோச்சும், நடிகை நயன்தாராவின் 75வது படமாக இப்படம் உருவாகிறது. லேடி சூப்பர்ஸ்டார், நயன்தாராவின் உடைய இந்த  திரைப்பயணத்தில், அவர் மிக கடின உழைப்பினாலும் மற்றும் திறமை மிகு நடிப்பினாலும்,  தன்னை மிகச்சிறந்த நடிகையாக திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக  ஜெட் வேகத்தில்  முன்னேறியுள்ளார். அவரது அற்புதமான நடிப்பு மற்றும் அவர் ஏற்று நடிக்கும் வலுவான கதாபாத்திரங்களின் மூலமாக, அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டு காலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து மகிழ்வித்துள்ளார். நடிகை...
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ” தெற்கத்தி வீரன்”

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ” தெற்கத்தி வீரன்”

சினிமா
தூத்துக்குடியில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் " தெற்கத்தி வீரன்" சந்திரபாபு ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சாரத் இயக்கி, நாயகனாக நடித்து, பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் " தெற்கத்தி வீரன்"கதாநாயகியாக அனகா நடித்துள்ளார்.மற்றும் முருகா அசோக், நாடோடிகள் பரணி, கபீர் துக்கான் சிங், பவன், வேலா ராம்மூர்த்தி, மது சூதனன் ராவ், மாரி வினோத், குட்டி புலி ராஜ சிம்மன், R.N.R.மனோகர், முல்லை, ரேணுகா, உமா பத்மநாபன், ரித்திகா, ஆரியன், நமோ நாராயணா, லொள்ளு சபா மனோகர், வெங்கல் ராவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதி - N.சண்முக சுந்தரம் ( இவர் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது ) இசை - ஶ்ரீகாந்த் தேவா எடிட்டிங் - V.J.சாபு ஜோசப் நடனம் - சாண்டி, பாரதி ஸ்டண்ட் - சூப்பர் சுப்பராயன், கணல் கண்ணன். கலை - குருராஜ...
பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா

பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா

சினிமா
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். டிரைலர் ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரைலர் வரும் இப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன் - இயக்குனர் வெற்றிமாறன்: இப்படம் ஆரம்பித்ததில் இருந்து மணிபாரதியை தெரியும். இப்படத்தை முடித்து விட்டு பார்க்க சொன்னார். அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் கேட்டபோதே இப்படத்தை பார்த்திருந்தால் அவர் கூறியதுபோல இப்படம் வெளியாவதற்கு உதவி புரிந்திருப்பேன். ஆனால், இப்போது PVR வெளியிகிறார்கள். நான் வெளியிடுவதைவிட இப்படம் இப்போது பெரிய வெளியீடாக தான் இருக்கும். அது இப்படத்திற்கு நல்லது என்று தான் நினைக்கிறேன்....
 “நெஞ்சுக்கு நீதி” திரைப்பட 50 வது நாள் வெற்றி கொண்டாட்டம் !

 “நெஞ்சுக்கு நீதி” திரைப்பட 50 வது நாள் வெற்றி கொண்டாட்டம் !

சினிமா
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து பெரும் வெற்றியை பெற்றுள்ளது.வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில், படக்குழு இன்று படத்தின் 50 வது நாளை பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினர். முதலில் மேடையேறி நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் போனிகபூர் நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைத் தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R.அர்ஜூன் துரை ஆகியோருக்கு தங்க செயின் அணிவித்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு மோதிரம் அளித்தார். மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசுகள் அளித்தார். ...
கட்டில் திரைப்பட உருவாக்கம் நூலுக்கு அமெரிக்க பல்கலைக்கழக விருது

கட்டில் திரைப்பட உருவாக்கம் நூலுக்கு அமெரிக்க பல்கலைக்கழக விருது

சினிமா
கட்டில் திரைப்பட உருவாக்கம் நூலுக்கு அமெரிக்க பல்கலைக்கழக விருது வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிறந்த நூல்களுக்கான விருதை அறிவித்து அதற்கான விழா நேற்று- (ஜூலை 10 ஆம் தேதி) சென்னையில் நடைபெற்றது. நீதியரசர் S.K.கிருஷ்ணன் விருதை வழங்கினார் ரவிதமிழ்வாணன், SP.பெருமாள்ஜி முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்பட உருவாக்கத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலாக வெளியிட்டு பலராலும் பாராட்டு பெற்று வருகிறார். திரைப்படம் பற்றிய இப்படி ஒரு நூல் எங்கும் வெளிவராத நிலையில் புனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்த நூலை பார்த்த பிரபல திரைப்பட பேராசிரியர் சமர் நாட்டக்கே அவர்கள் மூலம் இந்த நூல் உலகின் பல்வேறு திரைப்பட கல்லூரிகளுக்கு சென்று சேர்ந்திருக்கிறது. விரைவில் கட்டில் திரைப்படத்திற்கான ஆடியோ ர...