Tuesday, December 3

Thor: Love and Thunder Review

Thor: Love and Thunder Review

ஆஸ்கார் வின்னர் டைகா வெயிட்டிடி இயக்கிய இந்தப் படத்தில், ரசிகர்களின் இதயங்களை வென்ற அவெஞ்சர் தோர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் நட்சத்திர நடிகர்கள் டெஸ்ஸா தாம்சன், நடாலி போர்ட்மேன் மற்றும் கிறிஸ்டியன் பேல் ஆகியோர் நடித்துள்ளார்கள்

 

Marvel Studios’s Thor: Love and Thunder தன்னுடைய இனமே அழிந்து போன நிலையில், மிச்சமிருக்கும் தன்னுடைய மகளையாவது ஏதோ ஒரு கடவுள் எப்படியாவது காப்பாற்றி விட மாட்டாரா என உதவிகேட்டு செல்லும் நிலையில், கடவுள்கள் விதி வசம் என கூறிய நிலையில் தனது மகளை இழந்த கோர், கடவுள்கள் மீது கோபமுற்று இனி உங்களை போன்றவர்களை கொல்வது தான் என் வேலை என காட்’ஸ் பட்சராக மாறி விட அவனிடம் இருந்து கடவுள்களையும் ஆஸ்கார்டில் உள்ள குழந்தைகளையும் தோர் எப்படி காப்பாற்றுகிறார் ? தோர் காதலிக்கு கேன்சர் என்றும் அவர் விரைவில் இறந்து விடுவார் என்னும் சூழ்நிலையில் தோர் காதலுக்கும் கடமைக்கும் நடுவில் தவிக்கிறார் கடைசியில் கோரை எப்படி தோர் வெற்றி கொண்டார் காதலியின் உயிர் காப்பாற்றப்பட்டதா? என்பது தான் கதையின் கிளைமாக்ஸ் .தோராக கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். இந்த வரிசையில் இவர் தோராக வரும் நான்காவது படம் .படத்தில் தோரின் காதலி டாக்டர் ஜேன் ஃபாஸ்டராக நடாலி போர்ட்மேனும் ஒரு தோராக வந்து சிறப்பாக நடித்து உள்ளார். கிறிஸ்டியன் பேல் கடவுள்களையே கொல்லும் கதாபாத்திரத்தில் தோருக்கு வில்லன் கோராக சிறப்பாக நடித்துள்ளார்.

கிராபிக்ஸ், இசை என அனைத்தும் பிரமாண்டமாக உள்ள இந்த ‘தோர்: லவ் & தண்டர்’ அனைத்து வயது ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Spread the love