Tuesday, January 21

உறியடி விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இப்படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார்.

உறியடி விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இப்படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார்.

கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்ப பாங்கான திரைப்படமாகவும், ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகிறது.

இதற்கான படப்பிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

96 படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வஸந்தா இசையமைக்கிறார்.

CS பிரேம் குமார் எடிட்டராகவும், ஸ்டன்னர் சாம் சண்டை பயிற்சியாளராகவும், ஏழுமலை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனங்களை எழுதியுள்ளார்.

Spread the love