Saturday, April 25

Author: admin

3டி தொழில்நுட்பத்தில் வெளியான ‘ஆதி புருஷ்’ பட டீசர்

3டி தொழில்நுட்பத்தில் வெளியான ‘ஆதி புருஷ்’ பட டீசர்

சினிமா
ஆதி புருஷ்' படத்தின் டீசர், 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி, பார்வையாளர்களுக்கு மிகப்பிரம்மாண்டமான காட்சி ரீதியிலான விருந்தை அளித்திருக்கிறது இந்திய திரையுலக வரலாற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசர்களில் 'ஆதி புருஷ்' பட டீசர் ஒன்று. ராமாயண காவியத்தின் நவீன கால பதிப்பைத் தழுவி, முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்புடன், 'ஆதி புருஷ்' தயாராகி இருக்கிறது. உலகின் புனிதமான நகரங்களில் ஒன்றான அயோத்தியின் சரயு நதிக்கரையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையில், 'ஆதி புருஷ்' படத்தின் பிரம்மாண்டமான டீசர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் பிரபாஸ், கீர்த்தி சனோன், இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 'ஆதி புருஷ்' படத்தின் தயாரிப்பாளர்கள் அயோத்தியாவில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு தொடக்கத்தை ஆரம்பித்துள்ளனர். ப...
தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது! இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு!

தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது! இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு!

சினிமா
தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது! -------------------------------------------------------------------------------------- இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு! -------------------------------------------------------------------------------------- விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள்… “கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.” என்று பேசினார். இந்தக் கருத்து மிக உண்மையானது. சரியானத...
‘விக்ரம் வேதா’ மூலம் இந்தியிலும் தடம் பதித்த இசையமைப்பாளர் சாம் சி எஸ்

‘விக்ரம் வேதா’ மூலம் இந்தியிலும் தடம் பதித்த இசையமைப்பாளர் சாம் சி எஸ்

சினிமா
தமிழில் நிகழ்த்திய மாயாஜாலத்தை இந்தியிலும் ஏற்படுத்திய இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஹிர்த்திக் ரோஷன் - சயீப் அலி கான் ஆகியோர் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து, இந்தியில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனூடாக தமிழில் சாதனை படைத்த இயக்குநர்கள் புஷ்கர் காயத்திரி மற்றும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் ஆகிய இருவரும், இந்தியிலும் தங்களது புதிய சாதனையை படைத்திருக்கிறார்கள். சர்வதேச அளவில் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி, தமிழ் மண்ணின் கலாச்சாரத்தையும் கலை வடிவத்தையும் பறைசாற்றிய ‘சுழல் - தி வோர்டெக்ஸ்’ எனும் தமிழில் தயாரான நீண்ட வலைதள தொடரின் கதை, திரைக்கதையை எழுதி, தயாரித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்கள் புஷ்கர் காயத்ரி தம்பதிகள். இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான ‘விக்ரம் வேதா’ எனும...
நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் வெளியீடு

சினிமா
நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் ஐம்பதடி உயர பிரம்மாண்ட போஸ்டர் வெளியீடு   பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் மற்றும் ஐம்பதடி உயர போஸ்டர், ராமரின் பிறந்த பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் 'பாகுபலி' படப் புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சன்சிட் பல்ஹாரா மற்றும் அன்கிட் பல்ஹாரா சகோதரர்கள் இசையமைத்திருக்கிறார்கள். ராமாயண காவியத்தை தழுவி தய...
பொன்னியின் செல்வன்- விமர்சனம்

பொன்னியின் செல்வன்- விமர்சனம்

சினிமா
அமரர் கல்கி அவர்களால் எழுதப்பட்ட புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் கதை ,கி.பி. 1000-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது .இந்த கதை சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் மணிரத்னத்தின் இயக்கத்தில் காட்சிவடிவில் திரையில் மிளிர்ந்துள்ளது இந்த படக்கதையின் வெற்றி பல புகழ்பெற்ற சரித்திர கதாசிரியர்களின் கதைகளை படமாக்கும் எண்ணங்களை புதிய மற்றும் பழைய இயக்குனர்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும் சோழ சாம்ராஜ்யத்தின் மன்னரான சுந்தரச்சோழரின் படைகளோடு சென்று பல இடங்களை வெற்றிகண்டு அப்பகுதிகளை சோழ ராஜ்ஜியத்துக்குள் கொண்டு வரும் ஆதித்த கரிகாலனுக்கு பக்கபலமாய் இருப்பது தளபதி வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனோடு காஞ்சியை கைப்பற்றிய சந்தோஷத்தில் வெற்றியைகொன்டும் வேளையில் ஆதித்த கரிகாலனுக்கு கடம்பூர் சதி திட்டம் குறித்த தகவல் வருகிறது வந்தியத்தேவனை அதுகுறித்த தகவல்க...
வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

சினிமா
பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றதை தொடர்ந்து, படத்தின் இயக்குனர் திரு.மணிரத்னம் அவர்களை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி திரு. G K M தமிழ்குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு.M செண்பகமூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். Madras Talkies Executive Producer திரு. சிவா ஆனந்த் இந்த நிகழ்வின் போது உடனிருந்தார்....
மஞ்சு வாரியர் – பிரபுதேவா இணைந்து பணியாற்றும் ‘ஆயிஷா’ படப்பாடல்

மஞ்சு வாரியர் – பிரபுதேவா இணைந்து பணியாற்றும் ‘ஆயிஷா’ படப்பாடல்

சினிமா
'அசுரன்' பட புகழ் நடிகை மஞ்சு வாரியார் நடித்திருக்கும் 'ஆயிஷா' எனும் படத்தில், 'நடனப் புயல்' பிரபுதேவாவின் நடனத்தில் தயாராகி இருக்கும் ,‘ கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலின் புதிய லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'ஆயிஷா'. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள புதிய பாடலுக்கு பிரபல நடிகரும், இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் பி. கே. ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை இந்திய மற்றும் அரபு நாட்டை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடி இருக்கிறார்கள். 'ஆயிஷா' திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ...
நிகில் முருகன் நாயகனாக நடிக்க, விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள “பவுடர்”.திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

நிகில் முருகன் நாயகனாக நடிக்க, விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள “பவுடர்”.திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

சினிமா
வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பவுடர்”. ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தமிழ் திரையுலகின் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் - திரைக்கதை எழுத்தாளர் - நடிகர் கே பாக்யராஜ் பேசுகையில், “இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய தயாரிப்பாளர் ஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகள். நிகில் முருகன் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், அதை எப்போதும் தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார். நடிகராக புது அவதாரத்தின் மூலம் அவர் வெற...
அகில இந்திய சிட் ஃபண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம்  சென்னையில் நடந்துள்ளது.

அகில இந்திய சிட் ஃபண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் சென்னையில் நடந்துள்ளது.

செய்திகள்
அகில இந்திய சிட் ஃபண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று (30/09/2022) சென்னையில் நடந்துள்ளது. புதிய நிர்வாகக்குழு தற்போது தேர்தல் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதவியேற்கும் பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் மற்ற உறுப்பினர்களின் நியமனம் குறித்தான பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 1.   திரு. V.C. பிரவீன் – தலைவர் (ஸ்ரீ கோகுலம் ஃபினான்ஸ் & சிட் கம்பெனி ப்ரைவேட் லிமிடட்) 2.   திரு. T.S. சிவராமகிருஷ்ணன் – (முன்பு உடனடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் சேர்மன் – ஆலோசனைக் குழு) (தி பாலுசெரி பெனிஃபிட் சிட் ஃபண்ட் ப்ரைவேட் லிமிடட்) 3.   திரு. A. சிற்றரசு – பொதுச் செயலாளர் (குறிஞ்சி சிட் ஃபண்ட்ஸ் ப்ரைவேட் லிமிடட்) 4.   திரு. கமல் பாம்பானி- அமைப்பு செயலாளர் (சந்திரலக்‌ஷ்மி சிட் ஃபண்ட்ஸ் ப்ரைவேட் லிமிடட்) 5.   திரு. A.P. அருணாச்சலம்- பொருளாளர் (தி மாயாவரம் ஃபின...
 ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கான சிறப்பு பஸ் டூர், PVR -ன் தென்னக விற்பனை அணி வழங்குகிறது!

 ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கான சிறப்பு பஸ் டூர், PVR -ன் தென்னக விற்பனை அணி வழங்குகிறது!

சினிமா
'பொன்னியின் செல்வன்' படத்துக்கான சிறப்பு பஸ் டூர், PVR -ன் தென்னக விற்பனை அணி வழங்குகிறது! தமிழ் சினிமாவின் பெருமையான, 'பொன்னியின் செல்வன்' படத்தை கொண்டாட, அது போன்ற பிரம்மாண்டமான சில விஷயங்களும் நமக்கு தேவைதானே?   நாள் 1: இதனை ஒட்டி, வசந்த் & கோ'ஸ் சென்னை பிரிவின் நிர்வாக இயக்குநர் முதல் நாளில் பஸ் டூர் ஒன்றை தொடங்கி வைக்கிறார். அதே போல, மாலை சென்னை நகரத்துக்குள் மற்றொரு ஃபன் டூர் ஒன்றை லலிதா ஜுவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குநர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். நாள் 2-5: இரண்டாம் நாளில், 150+ வாடிக்கையாளர்கள் மற்றும் ப்ராண்ட் பிரதிநிதிகளுடன் உற்சாகமான நடைப்பயணம் இருக்கும். மேலும், இந்த பஸ் டூர் சத்யம் சினிமாவில் தொடங்கி எங்கெல்லாம் பார்வையாளர்கள் 'பொன்னியின் செல்வன்1' படத்தை பார்த்து கொண்டாடி அன்பை தருகிறார்களோ அங்கெல்லாம் செல்ல இருக்கிறது. படத்தில் உள்ள நட்சத்...