இது இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் , ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் , மற்றும் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களால் , உலக சாதனையாக உடனடியாக அங்கிகரிக்கப்பட்டது ..
பிளாக்ஷிப் டிவியின் விளம்பரங்களுக்கான பிராண்ட் அம்பாசிடராகிறார் வைகைப் புயல் வடிவேலு என்பதை தெரிவிக்கும் வகையில் டீசரும் வெளியிடப்பட்டது .. இதுவே வடிவேலு அவர்கள் பிராண்ட் அம்பாசிடராக விளம்பரத்தில் களமிறங்கும் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது ..
நிகழ்ச்சியின் கரு மற்றும் உருவாக்க வேலைகளை பிளாக்ஷிப் மேற்கொள்ள, வித்தியாசமான தனது ஈசி நடன அசைவுகள் மூலம் சினிமா நடன ஆசிரியர் அசார், இதை சாத்தியப்படுத்த , தங்களிடம் பயிலும் அத்தனை கல்வி நிறுவனங்களைச் சார்ந்த 11,000 மாணவர்களையும் ஒரு சேர தயார் செய்து ஆடவும் வைத்து அசத்தியது SNS கல்வி குழுமம்…
நிகழ்வினை, பிளாக் ஷிப் நிர்வாகிகளும் நடிகர்களுமாகிய சுட்டி அரவிந்த் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ் தொகுத்து வழங்கினர்.. மேலும் நரேந்திரபிரசாத் , அதிர்ச்சி அருண், அயாஸ், குட்டி மூஞ்சி விவேக் , டி.ஜே.சாம் பிரபா , என பிளாக்ஷிப்பின் பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டு மாணவர்களை கலகலப்பாக்கினர் ..
“யுவன் , பிளாக்ஷிப் இருவருமே இன்றைய வளரும் தலைமுறையினருக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுகள் .. அவர்களோடு சேர்ந்து இந்த சாதனையை நிகழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது SNS கல்விக்குழுமம்.. இது மாணவர்களின் வெள்ளி விழா , ஆகையால் மாணவர்களோடே இன்னும் நிறைய கொண்டாட காத்திருக்கிறது SNS ” என்று சொன்ன சேர்மேனின் வாய்வழி டீசரோடு இனிதே நிறைவேறியது நிகழ்வு …