Tuesday, December 3

இயக்குனர் திரு.சீனு ராமசாமி அவர்கள் இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம்.

தென்மேற்கு பருவக்காற்று நீர்ப்பறவை தர்மதுரை மாமனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு.சீனு ராமசாமி அவர்கள் இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம்.

 

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் திகழும் இவர், தற்போது பிரபல திரைப்பட இயக்குனர் திரு.சீனு ராமசாமியின் இயக்கத்தில் தமது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

முன்னதாக கேசினோ எனும் திரைப்படத்தில் நடித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத மற்றுமொரு திரைப் படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்திலான தம்முடைய அடுத்த திரைப்படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் திரு.சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பையும், விமர்சகர்களின் நல்ல மதிப்பீடுகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது திரு.சீனு ராமசாமி இயக்கத்திலான நல்ல ஒரு காதல் கதையில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது. வரும் டிசம்பரில் தொடங்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட இதர விபரங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இப்படத்தின் இதர தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகையர் தொடர்பான தேர்வுகள் நடைபெற்று வரு நிலையில், அவை குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

Spread the love